வைணவத்தில் ஓர் நாவலர்

நாவலர் இவ்வாறு மூன்று தல புராணங்கள் இயற்றியுள்ளார். ஸ்ரீமுஷ்ணம் என்னும் தலத்து வரலாற்றையுரைக்கும் திருமுட்டத்துப் புராணம், திருவண்ணாமலை என வழங்கப்படும் தலம் வைணவத் தலமே என உரைக்கும் ஸ்ரீசுதரிசனகிரிப் புராணம் சிதம்பரம் ஆலய வளாகத்தினுள் உள்ள 108 திவ்யதேசங்களுள் ஒன்றான திருச்சித்திரக்கூடத்துப் புராணம் ஆகியன இவரால் இயற்றப் பெற்ற தலபுராண நூல்களாகும்.

நிழல்களின் ஓலம்

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 10 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

தீர்ந்த கடன்

திலகா, உறங்கும் நேரம் தவிர எப்போதும் அமர்ந்த நிலையில் கைகளால் தரையை தட்டியபடியே இருப்பாள். அதனால் கைகள் காய்த்து தடிமனாக இருக்கும். எப்போதாவது கோபத்தில் கையை ஓங்கி அடித்தால் ராமினால் கூட தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். கோபத்தினால் மட்டுமல்ல செவியில் கேட்கும் ஏதேனும் சத்தம், நாசியைத் துளைக்கும் வாசனை போன்றவற்றால் சிலவேளைகளில் நிலையழிந்து ஒருவித பதட்டத்துடன் இருப்பாள்

மறு ஒருமுறை, காலம்

பெருந் தோல்விகளோ சிறு வெற்றியோ கூடக் கண்டு உணர்ச்சிகள் இனி எழாதபடி மரத்துப் போகட்டுமே!
என் அஞ்சாமை அதனால் என்னை விட்டுப் போய்விடுமா?
மறு ஒருமுறை எழுந்து விடமாட்டேனோ?
ஆழ் இருளையும் போராடி வென்றுவிடமாட்டேனோ?

வெள்ளைக் குழந்தை

அம்மாவின் குரல் தன் காதுகளில் எதிரொலிப்பது போல அவன் உணர்ந்தான்.எழுந்து உட்கார்ந்து காதுகளைத் தேய்த்துக் கொண்டு விட்டு மீண்டும் படுத்தான். வீடு, சுற்றுப்புறம், மாஸ்டர், எஜமானி என்று அவர்கள் மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தனர். மனம் போராடிக் கொண்டிருந்தது. எப்படித் தப்பிப்பது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் கிடைக்கவில்லை.

கொடைகளின் தாயகம் குச்சிங்

அம்மையிடமிருந்து தொப்புள்கொடி வழியாகப் பிள்ளை எப்படி உயிர்ச்சத்துகளை எடுத்துக்கொள்கிறதோ, அப்படி இந்த உயிரினமும், பிரண்டைக்கொடியிலிருந்து தனக்குத்தேவையானச் சத்துகளை உறிஞ்சி, பின் மொட்டு வைக்கிறது. ஒரு இரஃப்லேசியா துவான் முதே பூ மலர ஒன்பது மாதங்கள் எடுக்கும். விரிந்தப் பூவின் விட்டம் ஒரு மீட்டர் அளவுக்குக்கூட இருக்கும். ஆனால் மலர்ந்த பின்னர் ஏழு நாட்களுக்குள் அது உதிர்ந்து விடும்.

மூன்றாவது கண் – பரிமாணம்

கண்ணீரை வர்ணமாக மாற்றும் வரைபடங்கள்
எழுதப்பட்டன,
காலத்தின் அரைக்கதவுகளின் மீது —
நாங்கள் திறக்காத அறைகளில்
மறைந்திருந்த ஒவ்வொரு பருவமும்
ஒரு ஞாபகமல்ல,
ஒரு சாஹித்ய சித்தரிப்பு.

மேப்பிள் பாகு

வட அமெரிக்காவின், வடகிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மேப்பிள் சாறு அங்கே யூரோப்பியர்கள் வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே  மரத்திலிருந்து சேகரிக்கப்பட்டு காய்ச்சிப் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது.  அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் சடங்குகளில் மேப்பிள் சாறு காய்ச்சி பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தபட்டது. வசந்தகாலத்தின் முதல் முழுநிலவில் மேப்பிள் சாற்றை அருந்தி மேப்பிள் நடனமிடுவதும் அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. 

றெக்கை– அத்தியாயம் 9

This entry is part 9 of 18 in the series றெக்கை

லெவி  எஜமான் மூணு வேலை செய்து முடிக்க உத்தரவு பண்ணியிருந்தார் முதலாவதா, ஒரு பொருளை, இல்லை, ரெண்டு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கணும், சேர்த்தாச்சு. ரெண்டாவது உத்தரவு ஆல்பி எஜமான் டாக்டர் கடை நடக்க ஏற்படுத்தி இருக்கற ஸ்தலத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியாச்சு. உங்க மூணு பேருக்கும் காலை தீனியும் சாயாவும் உண்டாக்கி இங்கே எடுத்து வரணும்னு மூணாவது கட்டளை

மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?

தொட்டு உணர்வு, பார்வை, கேள்வி, மணம், சுவை“ என்று நம்மால் வரையறுக்கப்பட்ட ஐந்து உணர்வுகளின்  பட்டியல் முழுமையல்ல என்று  நவீன நரம்பியல் இந்த வரைபடத்தை விரிவுபடுத்தி, மேலும் பல உணர்வுகளை வாழ்வியல் அமைப்பிற்குள் கொண்டு வருகிறது. உடல் உறுப்புகளின் நிலையை அறியும் ‘ப்ரோப்ரியோசெப்ஷன்’, சமநிலை உணர்வு, வெப்பம் உணர்வு, வலி உணர்வு, உட்புற உறுப்புகளின் இயக்கம் உணரும் ‘இன்டரோசெப்ஷன்’ ஆகியவை இவற்றுள் அடங்கும்.

ஓர் வார்த்தை & அன்பின் அளபெடைகள்

அத்தனை நியாயங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
எதிர்க்கும் ….

விரலிலிருந்தும் இதழிலிருந்தும்
விழும் முன் வார்த்தைகள்
விழுந்த பின் வெறும் எச்சங்கள்…

தடுப்பூசிகளின் வரலாறு

This entry is part 13 of 10 in the series பொது நலம்

எட்வர்ட் ஜென்னரின் பங்களிப்பு ஒரு நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் நோய்த் தடுப்பு என்ற முற்றிலும் புதிய அணுகுமுறையை உருவாக்கினார். அவரது முறை பிற்காலத்தில் லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளுக்கு வழி காட்டியது. பாஸ்டர் ரேபீஸ் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி உருவாக்கினார்.

கலையும் வணிகமும் மோதிக்கொண்ட கதை – கிறிஸ்துமஸ் ரிப்பன் 

ஈடன் சென்டரினுள் நுழைந்து பறந்து செல்லும் பறவைகள் போலத் தோற்றம் அளிக்கும் அந்தச் சிற்பங்கள் மக்களைக் பெரிதும் கவர்ந்தன.  “Flight Stop “ என்று பெயரிடப்பட்ட அந்த நாரைக் கூட்டத்தின் சிற்பம்  மைக்கேல் ஸ்னோ (Michael Snow ) என்ற சிற்பியின் படைப்பு. கிறிஸ்துமஸ் விடுமுறை வியாபார  உத்திக்கும், சிற்பி மைக்கேல் ஸ்னோவின் படைப்புரிமைக்கும் மோதல் உருவானது.  

வண்ணங்களே வாழ்வு

அப்பாஸ் சித்தப்பாவின் திருமணத்திற்காக காப்பே ஒன்றைப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் சித்தப்பா திரும்பி வருவதற்குள் பாட்டி இறந்துவிட்டாள். அப்பா, பாட்டியை ஒரு பசுமையான கல்லறையில் சிறப்பாக அடக்கம் செய்தார். அப்பாஸ் சித்தப்பாவிற்கு பாட்டியின் கூடாரத்தில் பாட்டி பின்னிக் கொண்டிருந்து முடிக்காமல் விட்ட பாதி காப்பேதான் பார்க்கக் கிடைத்தது. பாட்டியின் காப்பேயையாவது பார்க்க முடிந்ததே என்பதில் அவருக்கு ஒரு ஆசுவாசம்.

கொலகலூரி இனாக்

கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று  யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள்

கணிதமா இயற்பியலா?

கிட்டத்தட்ட இணையான சமன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஹில்பர்ட், ஐன்ஸ்டைனது வெற்றியை கேள்விக்குள்ளாக்காமல் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.  மேலாக, ஐன்ஸ்டைனுக்கு கணிதத்துடன் இருந்த ‘பிணக்கு’’ – பொதுவாக சொல்வதானால் இயற்பியலுக்கும் இருந்த பிணக்கினை மிக அழகாக பின்வருமாறு கூறினார்.

தெய்வநல்லூர் கதைகள்- 28

This entry is part 28 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார்.  நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார்

நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2

ரிக் வேதம் பூமியை ‘சக்தி’ எனச் சொல்கிறது. அதர்வ வேத புவி சூக்தத்தில், இடம் பெறும் 63 செய்யுள்களில், சிலவற்றைக் கீழே பார்ப்போம். பூமியை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், அதனால், உயிரினங்கள் எப்படி செழிக்கும் என்று பாடிய முனிவர்கள், சுற்றுச் சூழலின் அவசியம் தெரியாமலா இதைச் சொல்லியிருக்கிறார்கள்?

இருட்டின் வெளிச்சம்: உய்குர் கட்டாயத் தொழில் சர்ச்சை

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய பொழுது சர்வதேச மோதலின் மையத்தில் தான் வசமாக சிக்கியுள்ளதையும் சீனாவை மையமாகக் கொண்ட கட்டாய தொழிலாளர் விசாரணைகளை இனி தொடர முடியாது என்றும் அறிந்து கொண்டார் மர்ஃபி. பல்கலைக்கழக உள் ஆவணங்கள் மூலம் ஆகஸ்ட் 2022லிருந்தே ஷெஃபீல்ட் ஹாலமின் வலைத்தளங்கள், மின்னஞ்சல் தொடர்புகள் சீனாவிற்குள் தடுக்கப்பட்டுள்ளதையும் அறிந்தார். மர்ஃபியின் ஆராய்ச்சி சீன அதிகார அரசின் அதிருப்தியைத் தூண்டியதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது பார்க்கப்பட்டது.

தொடரும் விதுர நீதி

மனிதனின் உடல் ஒரு தேர். ஆன்மா அந்த தேரை செலுத்தும் தேரோட்டி. உணர்வுகள் தேரை இழுக்கும் குதிரைகள். அந்த உணர்வுகளை பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த பயின்ற ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாய் பயணிக்கிறான். உணர்வுகளை அடக்க முடியாதவன் சொல்ல இயலாத துன்பங்களை அடைகிறான்.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

இருக்கும் முதியோர் இல்லங்களில் கூட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர அவர்களுக்கு ஒரு தரமான வாழ்வுமுறையை அமைத்துத் தர வேண்டும் என்ற முனைப்பு இருப்பதில்லை. இந்நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களைப் பொறுத்து சாப்பாடு, உறைவிடம், மருத்துவத் தேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஓரளவு நன்றாகச் செய்து தருகின்றன. இந்நிறுவனங்களில் நல்ல முறையில் கவனிப்பு இருந்தாலும் இவை இங்கிருப்பவர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றன என்பது கேள்விக்குரியதே

மனசுப் போல

‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து

This entry is part 3 of 8 in the series நள சரித்திரம்

யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது.  இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம்.   இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.   

இன்ஃபோசிஸ் பரிசுகள் 2025 – இயற்பியல் அறிவியல்

இளைய விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு, இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் மந்திரமுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்புகிறது: உலகளாவிய சவால்களில் கவனம் செலுத்தி, அறிவியல் கடுமையுடன் செயல்படுத்தப்படும் துணிச்சலான இடைநிலை ஆராய்ச்சி, மற்ற குழுவினரின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை தர முடியும் என்கின்ற தொலைநோக்கு பார்வையும் தான்.