சாம்பல் பூத்த நிலம்

அபர்ணாவின் அடி நாக்கில் ஒரு அமிலச் சுவை. எங்கோ மின் இயந்திரங்களில் கசிவினால் உண்டான வாடை அவளது மூக்கைச் சீண்டியது. அவளது சிசுவினுடைய நோட்டக்காட்சிகளில் வந்தது தனது குழந்தையா அப்பாவா எனும் குழப்பம் அவளுக்கு மின்னல் போல வந்து வந்து போனது. கூடவே ராஜேஷின் குரலும். சிறு குழந்தையாக, சிறு தீண்டலாக, கெஞ்சலாக, மன்றாடலாக, ‘அம்மா, அப்பா, இடக்கையா வலக்கையா எங்க இருக்கு தொடுங்க’, எனச் சிணுங்கும் ஒரு குரல்.

அந்தரத்தாமரை  – இரு முன்னுரைகள்

ஒவ்வொரு தாவரத்தின் படத்தையும், மரங்கள், மலர்கள், மிருகங்களின் படத்தையும் நூலில் தக்க இடங்களில் சேர்த்திருப்பது புரிதலைக் கூட்டுகிறது. இந்தத் தாவரங்கள் எந்தெந்த பழமையான நூல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன, அதன் மருத்துவக் குணம் என்ன என்று சொல்லியிருப்பதும் நூலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.

காமம் காமம் என்ப

நான் நீங்கள் எனக்கு யார் என்று சொல்லிவிட்டால் போதும், அப்படியே ஆடிவிடுவார். ஒரு முறை எனக்கு குற்றாலம் போக ஆசை, கூட்டிப் போக யாரும் இல்லை என்றேன், அடுத்த நாளே நாங்கள் மூன்று பேரும் குற்றாலம் போனோம். அங்கே நான் குளிக்கும் கோலத்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாள் கழித்து எவனோ ஒரு சனியன் சார் உங்க பொண்ணு கிட்டே அங்கே போக வேணாம்னு சொல்லுங்க ரொம்ப வழுக்குது என்றான்.

முத்தச்சிறுகிளை – இரு முன்னுரைகள்

பழங்காலத்தில் அரச வாழ்வை அல்லது இல்லற வாழ்வை துறந்து காடேகுபவர்கள் மரவுரியாடை  அணிவது  இனி அவர்கள் மேற்கொள்ளப்போகும் இயற்கையோடு இணைந்த எளிய வாழ்விற்கான் குறியீடாக கருதப்பட்டது.  இன்றும் பல பழங்குடியினரின் உடையாக மரவுரியாடையே இருக்கின்றது

கதவு

கண் மங்கலாக தெரிவது போல் இருந்தது அவனுக்கு.  மரப்பலகையின் மேல் அடித்த தகரம் மறைந்து முழு கதவும் கெட்டி இரும்பால் ஆனது போல் தோன்றியது. கதவின் பளபளப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது போலவும், எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலவும் தோன்றியது, கூர்மையான மெல்லிய ஒளியை எதிரே நிற்பவர்கள் மீது பாய்ச்சி கொல்லத் துடிப்பது போலவும், மங்கலாக அதன் மேற்புறம் தெரியும் அனைவரையும் அது விழுங்கிவிடுப் போகிறது என்றும் தோன்றியது. 

விலக்கப்பட்ட கனி

மாணவர்களுக்கு தாவரங்களின் லத்தீன் பெயர்களை அவற்றின் பொருளை அறிந்து நினைவில் வைத்துக் கொள்வதற்காக பயிற்சியளிக்கையில் தமிழில் அவற்றின் பொருளை சொல்லுவது பெரிதும் பயனளித்தது. கூடவே  இந்த துறையின் பல சுவாரஸ்யங்களை பல புதிய தகவல்களை எல்லாம்  இணைத்து சொல்லுகையில் வகுப்பறையின் இறுக்கமான சூழல்மாறி, இரு மொழிகளிலான கற்பித்தலும் கற்றலும் எளிதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

சுஜய் ரகு கவிதைகள்

கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்

பாரிய காதல்

மகிழ்ந்த பொழுதின்
நினைவுகளின்
சாரம் தின்று
உடற்க்கூட்டில்
உயிரென ஒன்று
வாழ்ந்து.
ஒவ்வொரு முறை
வீடு மாற்றும்போதும்
ஒடித்து
உருவாக்கிய
ஒற்றைச்
செம்பருத்தி செடி
உருமாற்றிவிட்டது

சோழன் கவிதைகள்

காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன

பொன்கழங்குகள்

This entry is part 12 of 19 in the series கவிதாயினி

குளிர்ந்த அதிகாலையில் பூக்களையும் ,அதன் தாதுக்களையும்  ஈரமான மண்ணில் சேர்த்து உனக்காக நானொரு பாவை செய்தேன். அது வெயிலில் வாடும் வரை நீ வரவில்லை என்று தலைவி பாடுகிறாள். முந்தைய பாடலில் காத்திருப்பு கோடையில் பொன்னாய் மலரும் போது, இந்தப்பாடலில் ஈரம் காய்ந்து வாடுகிறது

கேட்டதும் கிடைத்ததும்

இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

மயிலையாரின் மாசிக்கடலாட்டு

This entry is part 6 of 6 in the series பருவம்

இந்தியா முழுமையே ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அறுவடைப் பண்டிகை பொங்கல், சங்கராந்தி, லோதி, பிஹு இன்னும் பல பெயர்களில் இம்மாதங்களில் கொண்டாடப்படும்.  இதன் தொடர்பாகவே முற்றிய செந்நெற்கதிர்கள் பற்றிய செய்தியைக் காளிதாசனின் ரிது சம்ஹாரத்தில் கண்டோம்.

குமார சம்பவம் மஹா காவ்யம் – 3

பகவான் சங்கரன் திடுமென அப்சர பெண்கள் பாடுவதைக் கேட்டும் தன் சமாதி கலையாமலே இருந்தார். தன்னை அடக்கியவர்கள், அனிச்சையாக எதுவும் செய்வதில்லை என்பர். நந்திகேஸ்வரர் லதா மண்டபத்தின்  வாயிலில் வந்து நின்றபடி வாயில் விரலை வைத்து, சபலத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிடுவது போல நின்றது.  அதைக் கண்டு அவருடைய பூத  கணங்கள் மட்டுமல்ல, வண்டுகள் மாமரத்தை விட்டு விலகின, முட்டையிடும் பறவை இனங்கள்,  மற்றும்  ஊர்வனவைகளும் ஸ்தம்பித்து நின்றன

அதிரியன் நினைவுகள் – 36

This entry is part 35 of 48 in the series அதிரியன் நினைவுகள்

நம்முடைய  தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு நீண்டகாலப்போரின் பாதிப்பை எதிர்கொள்ள சக்தி இன்றில்லை; நம்முடைய இன்பவிரும்பிகளுக்கு, தற்போது மகிழ்ச்சி கசக்கிறது. ஒழுக்கநெறிகளை எளிமைபடுத்துதலும், சிந்தனைகளில்  முன்னேற்றமும், கடந்தநூற்றாண்டில் நல்லெண்ணங்கொண்ட  சிறுபான்மையினரின் பணியாக இருந்துள்ளது;  இன்றைக்கும் வெகுசனமென்பது அறியாமையில் உழலும் மக்கள்;முடிந்தபோது தங்கள் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகிறார்கள்

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 4 of 4 in the series ஆத்தோரம் மணலெடுத்து

ஆரம்பத்தில் இருந்த மோகம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவள் பேச்சு வரும்போதெல்லாம் அவன் முகம் சாதாரணமாக இருக்கிறது. அதில் ஆச்சரியம் இல்லை. அவள் கடைக்கண்ணில் பார்த்து மோகிக்கும் அழகி இல்லை, நேருக்குநேர் பார்க்கும் மதிப்புக்குரிய வழிகாட்டி. கூடத்தின் ஒரு பக்கம் அவள் தன் வேலையைக் கவனிக்க இன்னொரு மூலையில் இவன் சோதனைகள் செய்திருக்கப் போகிறான். 

மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று

இத்தனை வருடம் இந்த அவையில் இருந்தும், நான் மதிப்பு வைக்கும் இளம் நண்பராக இருந்தும் சென்னாதேவி என்ற பிற உயிர்க்குத் துன்பம் நினைக்காத சமணத்தியை நீங்கள் அறியாமல் போனது என் குற்றம் தான். வாள் வீசத் தெரிந்த சமணத்தி நான். எங்கு வாளோங்குவது, எங்கே நாவோங்குவது என்று இந்த அறுபத்தேழு வயதில் நன்றாகவே உணர்ந்தவள். அதுவும் என் பிரியமான மகன் மேல், என்னோடு பேச வந்தவன் மேல், என் இன்னொரு மகனான உங்கள் மேல் ஆயுதம் வீசிக் கொலைப்படுத்த என் மதமும் சொல்லவில்லை நான் அறிந்த ராஜாங்க நெறிமுறையும் கூறவில்லை,

அட! என்ன ஊர்யா இது?

“பணம் எங்கே போகுதுங்க? இருக்கட்டும். இப்போ நீங்களே வச்சிக்குங்க. இருட்டிப் போச்சுங்க தலைவரே! பேசாம நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க!” என்றான்.  ஒன்றும் புரியாமல் முருகேசன் அவனைப் பார்க்க, “நாளைக்குக் காலையில விசேஷத்தில கலந்து கிட்டு ஒங்க கையாலேயே பாப்பாக்கு இதையெல்லாம் கொடுங்க தலைவரே!  அது  எங்களுக்கு மருவாதை இல்லீங்களா தலைவரே!” என்றான்  கைகளைக் கூப்பி.

புதிய அனுபவம்

ஒவ்வொன்றாக சரி பார்த்ததில் வயர் தான் சரியில்லை என உறுதி செய்து கொண்டு , வேறு வயர்கொண்டு பார்த்ததில் பேன் ஓடியது.இடையே புதிய வாடிக்கையாளரும் அவர் நண்பரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இத பாருங்க அத பாருங்க சுட்சு சரியில்லாம இருக்கும் அத பாருங்க என அருகிலிருந்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்கன் ரியலிசம் சொல்லும் பாஸ்டன் நகரக் காட்சிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியையோ, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தினையோ இந்த பதிவின் பொருட்டு கற்பனை செய்து பார்க்கலாம். அது கடினமாகத் தோன்றுகின்றதா? ரொம்ப தூரமாக இருக்கின்றதா?  சின்ன விளையாட்டு ஒன்றினை முயற்சி செய்து பார்த்தால் எளிதில் தொட்டு விடலாம். அப்பாவின் பிறந்த நாள், தாத்தாவின் பிறந்த நாள், தாத்தாவின் அப்பாவின் பிறந்தநாள் என யோசித்தால் நான்கே தாவலில் அங்குச் சென்று விடலாம்.

ரேமண்ட் வில்லியம்ஸ் – இறுதிப்பகுதி

கிராமப்புறத்தின் புரட்சி மரபை, ஒரு உண்மையான மாற்று வழியாக வில்லியம்ஸ் ஏற்கவில்லை. பெரும்பாலும், அது, உணர்ச்சி பூர்வ ஏக்கமான, எப்போதுமே இருந்திருக்க முடியாத, பழுதுபடாத உலகை நினைக்கிறது; அப்படியான ஒரு எதிர்காலமும் இல்லை. ‘மனித உள்ளுணர்வு, சமூகத்தினுடையதிலிருந்து வேறுபட்டது…. எதிர்ப்புகளை, கடந்த காலத்தை விரும்புவதாக ஆக்கி, நம் தேவைக்கேற்ற அவகாசமில்லாமல் மடிபவர்களாக நம்மை ஆக்குவது’ என்று, களவுபோன இனிய, நல்ல கிராமப்புறமென்னும் கருத்தைப் பற்றி எழுதுகையில் சொல்கிறார்.

ஓரிரவு

மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி

பாடல் பெறாதவர்கள்

ஒருவித பரவசத்துடன் முத்தழகு கொடியேற்ற நிகழ்ச்சியை கவனித்தான். கும்பினி சிப்பய்களின் ஒழுங்கான நடை, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு கொடிக்குத்தரப்பட்ட மரியாதை, முத்தழகு கேட்டே அறியாத தேசிய கீதம், அவர்கள் அடித்த ராயல் சல்யூட் அவனை புல்லரிக்க வைத்தது. கும்பினி மீது அவனுக்கு மரியாதை பன்மடங்கு பெருகி அங்கே சேர்ந்து வேலைசெய்யப்போகும் நாள் குறித்த எதிர்பார்ப்பும் கர்வமும் மேலோங்கியது.

மேரா பாரத் மகான்

மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது

வாசகர் கடிதம்

கல்வியியலில் எக்விட்டி என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது. ஒரு சித்திரம்: உயர்ந்ததொரு வேலிக்கு அப்பால் ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. வேலிக்கு இந்தப் புறம் உயரமும் குட்டையுமாக பல சிறுவர்கள் நிற்கிறார்கள். குட்டையான சிறுவர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஸ்டூல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் மீது ஏறி நிற்பதன் மூலம், உயரமான சிறுவர்கள் பார்ப்பதைப் போலவே, குட்டைச் சிறுவர்களும் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது.