மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்

This entry is part 51 of 72 in the series நூறு நூல்கள்

இப்படி மேற்கிலக்கிய அழகியலில் ஒரு கால், தமிழ்/இந்திய இலக்கிய அழகியலில் மறு கால் எனக் கட்டுரைகளில் நம்பியுடன் நாம் பயணிக்க ஏதுவாக அவரது கட்டுரையின் அடி நாதம் அமைந்திருக்கிறது. Cape Cod Noir புத்தகத்தைப் பற்றிய கட்டுரை (பயணக்கட்டுரை போலவும், தன்மையக்கட்டுரை போலவும் இருப்பதால் இந்த நூலிலேயே செபால்டியத் தனமான கட்டுரை இதுதான்) முடிக்கும் போது feeling good was good enough என்பது சித்தரைப் போல இழப்பதற்கு எதுவுமில்லாத மோன நிலை என்பதிலும் இந்த மேலை கீழை தொட்டு மீட்டல் நடக்கிறது

தூண்டில்

விண்ணிலிருந்து வீழ்ந்த ட்ராகோவின் கலத்தில் நிறைந்திருந்த நீர்/திரவத்தின் உப்பு மற்றும் வளிகளின் செறிவை அடையாளம் கண்டு, அதை பன் மடங்காக உற்பத்தி செய்து பெரும் தொட்டியில் நிரப்பி, கலத்தினுள் நினைவிழந்திருந்த ட்ராகோவை அதற்குள் இட்டுச் சென்று, பல்வேறு வகையான திரவ புரதசத்து கலவைகளை ட்ராகோவின் உணவுக்காகப் பரிட்சித்து, ட்ராகோவின் ஓட்டில் எழும் வண்ணங்கள் பாஷை என்பதை அவதானித்து, அதை மொழியாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பழக்கி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு திறமையானக் குழுவை அடையாளம் கண்டு அமர்த்தி என்று செயல்கள் மூலமாகவே அவன் தன் துக்கத்தை மறந்தான். 

கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

This entry is part 1 of 4 in the series குடாகாயம்

அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள்

வெளிமானின் வெளிப்பாடு

பறவையின் வருகையும்
குழந்தையின் வருகையும்
சில பொழுது ஒன்று போல் இருந்தாலும்
ஓர் அழகைத் திறக்க சாவிகளற்ற கைகள் தேவைப்படுகின்றன.

சலூன் சிந்தனைகள்

இன்க்ளூசிவான அன்பு, கருணை மூலமா உருவாகிற ஒழுங்குக்கு ஒற்றைப்படைத் தன்மை வந்து சேராதா? அது அதிகாரமா ஆகாதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் இங்க ஒரு முரண் இருக்கு. அதாவது நீங்க சொல்ற அந்த அன்போட விளைநிலம், அல்லது அதை ஒரு தனி ஆன்மா கண்டுகொண்ட முதல் இடம்ங்கிறது குடும்பம் தான். குடும்பம் அப்படின்னாவே அது எக்ஸ்க்ளுசிவ் அமைப்பு தான். அப்பா அம்மா பிள்ளைகள்ங்கிற பிரத்தியேக தன்மை. அங்க தான் அன்பு முதல்ல அடையாளம் காணப்படுகிற இடம்,

வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்

This entry is part 8 of 11 in the series கவிதாயினி

பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர்  காக்கைபாடினியாார்.  இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 15 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெண்கள் உடைமாற்றும் அறையை ஆரம்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார்கள் மாடசாமி கோஷ்டியார். ஒப்பனையாளர் மற்றும் டீச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. பெண்களும் சன்னல் மூடியிருக்கிறது என்ற நினைப்புடன் சன்னலை ஒட்டிய மூலையில் உடைமாற்றியிருக்கிறார்கள். ( ஆனால் சன்னல் கதவின் கொக்கியை ஒட்டி ஈர்க்குச்சி நுழையும் அளவு அறுக்கப்பட்டிருந்த நுண்ணிய இடைவெளி,

கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்

This entry is part 52 of 72 in the series நூறு நூல்கள்

தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி),  தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான்  சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான்

சரோஜாதேவி புத்தகம்

மன்சூருக்கு ஏன் மல்லிகா மீது மட்டும் காம உணர்வு எழவேண்டும்? மல்லிகா வயதுடைய அவயங்கள் கொண்ட வனப்பான பெண்கள் இந்த விடுதியிலேயே இருக்கிறார்களே? அவர்களிடமெல்லாம் அவன் காமுறவில்லையே? அது ஏன்? பார்க்கப்போனால், இதே வாதத்தை பெண்கள் மீது காமுறும் ஆண்கள் எல்லோர் மீதும், அதே போல் ஆண்கள் மீது காமுறும் பெண்கள் எல்லோர் மீதும் வைக்கலாம். இல்லையா? ஒரு பெண் மீது காம உணர்வு கொள்பவனுக்கும் பிடிக்காத, அவனால் காம உணர்வு கொள்ள முடியாத பெண்களும் இருப்பது எதைக் காட்டுகிறது

இடம் மாறினும் மணம் மாறுமா?

அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள்.

நெருஞ்சில்

லீலி பயந்தவாறு இல்லாமல் சிறியபுஷ்பத்திற்கு ஒரு தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த எட்வின் கணவராக அமைந்தார்.  நல்ல வீடு வாசல் என்று இருந்தாலும் சிறியபுஷ்பமும் எட்வினும் தங்களுக்கென்று தனியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலவில்லை.  பெரிய குடும்பம் தம்பி தங்கைகள் என்று எட்வினுக்கு பொறுப்புகள் அதிகம். சிறிய புஷ்பமும் தான் படித்த படிப்புக்கு எப்படியாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பள்ளிகளில் வேலை பார்த்தாள்.

ரேபிஸ் தொடர்ச்சி

ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய்களில் இருவகையான நோய் அறிகுறிகள் உண்டாகும்  furious எனப்படும் வகையில்  நாய்களுக்கு வெறிபிடித்திருக்கும்.  அரிதாக  dump எனப்படும் வகையில் ரேபிஸ் தொற்று உண்டான நாய்கள் மிக அமைதியாக உணவின்றி ஒரே இடத்தில் படுத்திருக்கும்.  பெரும்பாலும் சிறுகுட்டிகளே இவ்வகையில் அதிகம் பாதிப்படைகின்றன.

மலையோதிகள் 

இயற்கை செதுக்கிய ஓதிமலை.  மனிதர்கள் இது வரைக்கும் தன்னை எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றி – என்பதைபோல – இளவெயிலில்  மின்னியது. அந்த மினுப்பில் “எத்தனை முறை நான் பகைகளைப் பார்த்தவன்”  “நான் கடவுள்- கடவுள் மோதலைப் பார்த்தவன் மட்டுமல்ல, கடவுள்-அசுரன் பகை மோதலையும் பார்த்தவன்” என்கின்ற நயதொனியில்,

எடின்புரஃஹ் – செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 9 in the series பயணங்கள்- லண்டன்

கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

சுழல்

எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும்

மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு

அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து இறுகி வந்த அவன் குறியை வேஷ்டியோடு பற்றி இழுத்து, வாரும் வாரும் உம் கருங்கல் வளர்ச்சியெலாம் நானறிவேன். உமக்கு வாய்த்த நிலைக்கு நீர் இந்த ராத்திரி முழுக்க நிமிர்ந்து நிற்பீர். கலந்து உழைப்போம் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.

சீர்மையற்ற சீர்மை

கூகுளை நாம் அத்தகைய ஒரு சீர்மையற்ற இலக்கத்தை உருவாக்க சொல்லி கேட்டால் அது தூய்மையான சீர்மையற்ற கணித மாதிரிகளைக் கொண்டு முடிவுகளை கொடுப்பதில்லை. அது சீர்மையைக் கொண்டு சீர்மையற்ற இலக்கத்தைத் தருவதாக நம்மை நம்பச் செய்துவிடும். அதன் வழிமுறையோ, அதற்கான உள்ளீடுகளோ, எவையுமே நாம் அறியாதவை. இவ்விதத்தில் கிடைக்கப்பெற்ற எண்களும் போலிச் சீர்மைகளே.

அதிரியன் நினைவுகள் -29

This entry is part 28 of 33 in the series அதிரியன் நினைவுகள்

சூரியன் மேற்கில் மறையும் நேரம், கடைசி  நீர்த்தேக்கத்தின் விளிம்பில், ஷப்ரியாஸ் மடித்த  ஆடையொன்றையும், மிதியடிகளையும் பார்த்தார். வழுக்கும் படிகளில் நானும் இறங்கினேன். சேறு மூடிய உடல் நீரின் அடியில் படுத்திருப்பதுபோல நதியில் கிடந்தது. உடலை எடுத்தபோது பாறாங்கல்போல திடீரென்று கனத்த பேதிலும் ஷப்ரியாஸ் உதவியுடன் உடலைத் தூக்க என்னால் முடிந்தது.   அவர் படகோட்டிகளை கூவி அழைத்தார், அவர்களும் கிடைத்த துணியைக்கொண்டு ஒரு தூக்குப் படுக்கையை உருவாக்கியிருந்தார்கள்

எண் சாண் உடம்பிற்கு

மேஜையின் மீது ஒன்றின் அருகே ஒன்றாக அடுக்கப்பட்ட எழுதுகோள்களை மனதில் நினைத்துக் கொண்டால் நமக்கு இந்த கிடைமட்ட அடுக்குகள் புரியும். தூண்டப்பட்ட pluripotent திசுக்களில், மென்மையான உயிர் மையைக் கொண்டு,அதில், மூளை அணுக்களை வளர்த்து, கிடைமட்ட அடுக்குகளில் பொதிந்து, மூளை அணுக்கள் மற்றும் தொடர்புகள் இவற்றை வெற்றிகரமாக இந்த இழைகளில் செய்திருக்கிறார்கள்.

முளைக்கா  விடைகள்

முல்லைக்கு எப்பொழுதும் அறைகளில் அடைந்து உறங்குவது பிடிக்காது. வராந்தாவில், முற்றத்தில், மாடியில் இப்படி.  இடி மின்னல் நாட்களில் உள்ளே இழுத்து வரவேண்டி இருக்கும். அன்றும் அப்படித்தான் வராந்தாவில் படுத்திருந்தாள். உடல் உள்ளே இருக்க இடதுகை பரப்பி வாசலில் உள்ளங்கையில் நிலா வெளிச்சம் வாங்கிக்கொண்டு படுத்திருந்தாள். உறங்கும் மகளை இப்படி உற்று பார்ப்பதே குற்ற உணர்ச்சியாக இருந்தது . வேறு வழி இல்லை. ஆனால் எதை கண்காணிப்பது என்று புரியவில்லை.

புத்தக அறிவிப்பு – மாயக் குரல்

This entry is part 56 of 72 in the series நூறு நூல்கள்

என்னுடைய சிறு கதைகள் தொகுப்பு ”  மாயக்குரல்”  என்ற பெயரில் வெளிவந்திருப்பதை  உங்களுக்குத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொகுதியில் பெரும்பாலான கதைகள் சொல்வனத்தில் வெளியிடப் பட்டவை

இலாசடி – ககோலியன்

இத்தனை ரூபாய் முதலீடு போடுகிறோம், இத்தனை செங்கல் செய்கிறோம். எவ்வளவு குறைவான செலவில் எவ்வளவு அதிகம் செங்கல் செய்ய முடிகிறதோ, அவ்வளவு எப்பிஷியன்ட்டாக கம்பெனி நடக்கிறது. இது சரியான கணக்குதான். ஆனால் பல பத்து பில்லியன் டாலர் லாபம் காட்டும் பெருநிறுவனங்களும் இந்த மாதிரி கணக்கு போடுகின்றன,