சரபம்

கண்மணி அப்போது ஊரில் புதிதாக உருவாகி கொண்டிருந்த மசாலா பூரி கடை ஒன்றை அப்போதுதான் திறந்திருந்தான். வீட்டிற்கு மூன்று பெண்களுக்கு பின் பிறந்ததால். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டான். எப்படியோ மீசைக்கார தண்டல்காரரிடம் கடன் வாங்கி இந்த கடைய போட்டு விட்டான். புதிய தின்பண்டங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைத்து பையன்களும், நாக்குக்கு சுவை தேடும் பெரியவர்கள் என்று மாலை வேலையில் பெரும் கூட்டம் இருக்கும்.

அரவு உறை புற்று

ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

பூனையும் கோமதிசங்கரும்

“உன் காதுல விழுந்த, நீ அலட்சியப்படுத்தின உரையாடல்கள், நீ கண்ணால் பார்த்து மனதில் பதிவு செய்யாத காட்சிகள், அலசிப் பார்க்காத சம்பவங்கள் இப்படி ஏராளமாக இருக்கும் உன் மூளையோட பதிவில். உன் மூளையில் கடந்த காலங்களில் பதிஞ்சிருக்கிற, ஆனால் நீ கவனம் செலுத்தாமல் இருந்த சில பதிவுகளை மறுபடி ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். 

அறிவுப்புருசன்

“அவரும் ஐ.ஏ.எஸ் அகாடமி வச்சு நடத்திட்டிருக்காரு. அவர் எம்.ஏ.எம்.பில் முடிச்சுவரு. பி.எச்.டி. படிச்சுட்டு இருக்காரு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலே. ஆந்தரபாலஜிப்பா. உணவைப்பத்தி ஆராய்ச்சி பண்றாரு. சரியான ஆளு. மோத்தேபாளையம் சொந்த ஊராம். இங்கேயே வந்துட்டாங்களாம். 

இலைகளுதிர்ந்த பின் மலைகள்

அந்த நீண்ட திண்ணையில்  ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்

மாதாவின் செவி

“மாதா ஆலயத்தப் பார்த்து மரியசூசை ஜெபிச்சாருன்னா அந்த மாதா எங்க இருந்தாலும் வந்துருவாங்க… இது நானே ஆலயத்துல பல தடவ சாட்சி சொன்ன வார்த்த…” அங்குள்ள பலரும் சொல்லும் வாடிக்கையான வார்த்தைகள் அவை. மரியசூசை வேண்டாமென்றாலும் அப்போதைக்குக் குருவானவர் இடத்தில் இருந்து திங்கி மக்களின் துயரங்களை மாதாவிடம் கொண்டு செல்லும் சக்தி மரியசூசைடுக்கு இருப்பதாகப் பேசி வந்தனர்.

நதி

அந்தக் கடிதம் வந்ததிலிருந்து மூன்றாவது மாதம் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்ப்போர்ட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். வேஷ்டியுடன் தான் வந்திருந்தார். மேலே வெளிர் கருப்பில் போன முறை சென்றபோது அவருக்கு நான் கொடுத்திருந்த சட்டை. அன்றிரவு ஆஷா சொன்னாள் ‘ஸீம்ஸ் லைக் அ ஜென்டில்மேன்” என்றாள். ஆஷா நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என இருப்பவள். ஆனால் இருப்பது வெறும் செருக்கு. சக மனிதரை ஆணவத்துடன் திமிருடன் எதிர்கொள்ள வாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. ஒரு வாரத்தில் அவள் சொன்னாள் “ஐ லைக் யுவர் தாத்தா”.

இரண்டொழிந்தது

எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள்

டெர்மினல்

ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

மெட்ரோ மோஹினி

அப்போதுதான் தலையில் பல்பு எரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக காலை நேரங்களில் மெட்ரோவில் மூன்று தற்கொலைகள். போலீசாரால் இறந்தவர்கள் எதற்காக தன்னையே மாய்த்துக்கொண்டனர் எனச் சரியாகக் கூறமுடியவில்லை. இதனால்தானோ அதிகம் கூட்டமில்லை?

நாய்வால்

வாழ்க்கைச்சக்கரத்தில் வயோதிகம்  எவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஆக்கிரமிக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் ஆயிற்று. தலை நரைத்தது. கண்  முகம் தோல்  சுருங்கிப்போனது.  முட்டிவலி  நெட்டிக்கொண்டு வந்தது.  இயலாமை  அன்றாடம்  அனுபவமானது.  சர்க்கரையும் இரத்த அழுத்தமும்  கொலஸ்ட்ராலும்  உன்னை விட்டேனா பார்  என்று ஒன்றன் பின் ஒன்றாகத் துரத்திக்கொண்டு வந்தன.

எதிர் (பாரா) வினை

ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும் கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான் ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்? லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் தாண்டணுமே…!

குடப்பாம்பில் கைவிட்டான்

முற்றத்தில் நுழைந்தவுடன் கண்ணெதிரில் சிறு மண்டபத்தில் சீதா சமேதராக இராமபிரான் கொலுவிருக்கப் பக்கத்தில் லட்சுமணனும், கீழே கைகட்டி வாய்பொத்தி மிக பவ்யமாக ஆஞ்சநேயரும் அருள் பாலித்தனர். நாள்தோறும் இடைவிடாமல் நடக்கும்  பூஜைகளும் அப்போது ஒலிக்கும் பாடல்களும் கண்ணுக்கும் செவிக்கும் இன்பமளித்துக் கொண்டே இருக்கும்.

ஓடும் தேர் நிலையும் நிற்கும்!

நினைத்தால் அந்தத் தட்டச்சு செய்து தரும் ஆப் வரட்டும் என்று அவன் நளி பேசுவான். வந்தாலும் வந்துவிடும். வாட்ஸ் ஆப்பில் எட்டுச் சொற்களில் செய்தி அனுப்ப தமிழில் தட்டச்சு செய்தான். ‘நீங்கள் செய்த இந்த உதவிக்கு உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்’ என்று செய்தி அனுப்புவது அவன் உத்தேசம். புண்ணியம் என்று தட்டச்சு செய்ய உத்தேசித்து, ‘புண்’ என அடித்தவுடன்

வரிசையில் ஒரு சிநேகம்

தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்

தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.

பின்வரும் நிழல்

வெயில் ஏறிவிட்டது. இனி அங்கு அமர முடியாது. கைகள் ஊன்றி எழுந்தேன். கொல்லை சின்னதுதான். வீடு கட்டும் போது கொல்லைக்கு இடம் விட்டு கட்ட வேண்டும் என்ற என்னுடைய பிடிவாதமே வென்றது. ஆற அமர உட்கார்ந்து காபி குடிக்க கொல்லைப்படிக்கட்டுகள் இல்லாமல் வாழ்வதெப்படி. கோடை வெயிலுக்கு கதவை திறந்து வைத்து விட்டால் மாலை நேரம் வெள்ளமாய் காற்று வரும்.

ஒன்றரை அங்குலம் மேலே 

வெகு நாட்களாக காஸ்ட்டோபி போலீஸ் அவளை கண்காணித்து வந்ததாக பிறகு எனக்கு தெரியவந்தது. அவளிடம் சட்டத்துக்கு விரோதமான சில நோட்டீஸ்களும் துண்டு பிரசுரங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. இவை அந்நாட்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜெர்மனி அதிகாரிகளின் பார்வையில் இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.

அக்குரு அம்மா

இந்த சின்ன வயசுல அவளுக்கு ஏன்டா கல்யாணம் பண்ணி வைக்கிற, வேண்டாம் டா, சொன்னா கேளு, அந்த பய வீமசேனன் மாதிரி இருக்கான், நம்ம புள்ள கோழிகுஞ்சி மாரி. இரண்டுக்கும் ஒத்து வராது.பாவம் வந்து சேரும் டா முருகு, ஊர் பேச்சை கேட்டுகிட்டு ஆடாத, நான் சொல்றத கேட்டு நடந்துக்க, கூட்டமா இருந்த பொண்ணு, அங்க தனியா இருக்க சிரமப்படுவா

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

ஜம்பம்

குப்பைக்காரனுக்கு  ஒரு நாள் ஈரக்குப்பை மறுநாள்  உலர் குப்பை என்பதாய்க்கணக்கு. உலர் குப்பை போடும் நாள் என்றால் எனக்கும் மகிழ்ச்சி.  குப்பைக்காரன் விசில் சப்தம் வீட்டருகே நெருங்குகிற மாதிரிக்கு உணர்ந்தேன். ஆமாம் என் வீட்டருகே வந்துவிட்டான். தமிழ் உச்சரிப்பில் வீணாய்ப்போன தெலுங்கு பேசும் ஆந்திரப்பெண் கையில் வெள்ளை சாக்கு வைத்துக்கொண்டு குப்பை வண்டியோடு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள்.

ரோபோ தமிழ்க் குழப்பம் 2075

அடுத்த கட்சி கூட்டத்தில், பெரும்பாலும் ஆண்களே இருந்தார்கள். ஒரு தலைவர், ஒரு மணி நேரம், ஏதேதோ பேசினார். பெண்களின் கூந்தலை அழகுபடுத்துவதுதானே, தமிழில் ‘பின்னல்’? அவர் பேசி முடித்தபின், அங்கு ஒருவர், ‘பிண்ணிட்டாருடா தலைவர்’ என்று சொன்னவுடன் எனக்கு ஒரே குழப்பம். தலைவர் வெறும் பேசத்தானே செய்தார். இதில் பெண்களின் கூந்தல் எங்கு வந்தது?

பூட்டிய வீடு

அந்தப் பையன் கவனம் சிதறிய ஒரு கணத்தைத் தேர்ந்தெடுத்து எழுந்து சரேலென்று கதவை நோக்கி ஓடினாள். அவள் கை தாழ்ப்பாளைத் தொட்டு இழுப்பதற்குள் அந்தப் பையன் சுதாரித்து விட்டிருந்தான்.  அவளைத் தடுத்து அவள் முடியைப் பிடித்திழுத்து தரையில் தள்ளிவிட்டான். அவள் முகம் சுவரில் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். ‘அம்மா..’

வீண்

‘உரம்’ என்ற பெயரில் அறக்கட்டளையும் வலைதளமும் தொடங்கினோம். எல்லாவற்றையும் நண்பர்களே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக செலவோ தேவைப்பட்ட உதவியோ செய்து கொடுத்தார்கள். எனக்குப் பெரிய வேலை இல்லை. அவர்கள் சொல்லும் இடத்திற்குச் சென்று சொல்லும் ஆளை பார்க்க வேண்டும் அவ்வளவுதான். நான் எனது கையில் இருந்து எந்தப் பணமும் செலவழிக்கவில்லை. அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையில் கூட எனது பணம் சொற்பமே.

ஓயமாரி

அதிலேயும் தெலுங்கு ஆட்கள் வீடுன்னா தெலுங்குலயே பாடல்கள் பாடுவேன். சைவ சமயத்திலேயே, தீட்சை பெற்றவங்க வீடுன்னா, அவங்க இறுதி சடங்குகள் ரொம்ப அதிகம். அவங்களுக்கு ஆறு கலசங்கள் வைச்சு, நீராட்டி, புதைக்கனும், அந்த இடத்தில் லிங்கம் வைக்கனும், அதுக்கு அபிஷேகம், பூஜை செய்யனும்.

அடையாளம்

‘ஏய்’களுக்கு அவள் எந்த ஏவல்களும் செய்வதில்லை. அப்படியும் வித்து முளைத்து எழுந்தது. மருத்துவ மனையில், சீமந்த விழாவில். எங்கெங்கு நோக்கினும் அவள் மிசஸ். சரவணன். அது ஒரு மரியாதை என்று கூட அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவள் ஆறு மாத கர்ப்பம். சரவணன் தன் வணிகத்தில் படு தோல்வி அடைந்தார். விட்டதைப் பிடிக்கிறேன் என்று சூது, மாது, குடி என்று அழிய ஆரம்பித்தார். வருண் பிறந்தான்.

அவம்

டத்திற்கு மட்டும் வாடகை என்பதால், மற்ற இடங்களைவிட வாடகை குறைவாக இருக்கும், பெரும்பாலும் தென்னை ஓலை வைத்து கட்டிக்கொள்ளவேண்டும், தளக்கட்டுமானம் கூடாது என்று கட்டளை. எப்போது வேண்டுமானாலும் இடத்தை காலி செய்யவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. எங்களுக்கு மட்டும் நாட்டு ஓடு வேய்ந்து கொள்ள அனுமதித்திருந்தனர்.

நிழல் மகன்

இறந்த மனைவி ரத்னா பரமசமுத்திரத்தில்  டீச்சராக, அதுவும், பெண்கள் உறைபள்ளியில் வேலை செய்தாள். அவளும் கர்னூல்காரி. ஜொன்ன ரொட்டியில் கெட்டிக்காரி. கடப்பா காரதோசை செய்வதில் எக்ஸ்பெர்ட். அவளுடைய மிளகாய் ஊறுகாயிக்கும் கோங்குராப் பச்சடிக்கும் நானும், என் மகளும் மாத சந்தாதாரர்கள். 

சதுரங்கம்

உள்ளிருந்து இறங்கிய இரு இந்திய ஆடவர்களிடம் உள்ளிருக்கும் சிசுவைக் காட்டினான் ஆதி. அவர்களுள் ஒருவன் சிசுவைத் தூக்கும் வேளையில்‌ மற்றொருவன் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் செல்ல ஆதிக்கு கடப்பிதழையும் , பணத்தையும்  கொடுத்தான். பணத்தைப் பெற்று போக்கேட்டில் சொருகும் போதும், தன்னைக் கடந்து சென்ற சிசுவை அவன் ஒரு போதும் கவனிக்கவில்லை. வாகனத்தில் ஏறும்போது சிசுவின் அழுகுரல் சத்தம் அன்பின் கதறலாகவே ஆதியின் காதுகளில் வலியை ஏற்படுத்தியது.

உயிர்மெய்

தனியார் வங்கியில் அடிமைதன வேலையிலிருக்கும் அவளை, உடற்கல்வி ஆசிரியர் என்ற சுகபோக அரசாங்க வேலை பார்க்கும் நான், ஏகத்தாளமாய் குறை சொன்னால் கோபம் வருமா?வராதா? கோபத்தில் சிவக்கும் அவள் முகத்தை, பைக்கின் முன்புறக் கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன். அவள் கோபத்தை ரசிக்கும் “சேடிஸ்ட்” இல்லை நான். அவள் என்றால் உயிரெனக்கு. இருந்தும் அவளை இப்படி வம்புக்கிழுப்பதில் ஒரு சுகம்

புனரபி ஜனனம்….

நான் செய்த எத்தனையோ செயல்களுக்கு அவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதற்கு, சத்தமே செய்யாமல், சந்தோஷமாக, என்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் செய்த அத்தனை செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, எனக்கும் அவருக்குமேயான பிரத்தியேகமான தருணங்களில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருப்பதற்கு,

வேர்முள்

அந்த நேரத்தில் தான் செழியனின் வரன் வந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம். முடிவு ஏதும் ஆகி இருக்கவில்லை. ஆனாலும் கலையரசி “அச்சச்சோ இப்பதான் என் மகளுக்கு மாணிக்கராஜ் வீட்ல பேசி முடிச்சோம், நீ அப்பவே வந்திருக்கக் கூடாதா” என்று ஏதோ சோப்பு விற்க வந்தவனிடம் பேசி அனுப்புவது போல் பேசினாள். அந்த வரன் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் ஏதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

பாரபட்சம் 

கீழ் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் எங்கோ மறைமலை நகர் உறவினர் வீட்டுக்குப்போய்த் தங்கிவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். கீழ் வீட்டு தோட்டக்கதவு, ரூம் கதவு  இவை பொல பொல என உதிர்ந்து தூளாய்க் கொட்டியன. தரை தள வீட்டில்  குடியிருந்தவர் ஆந்திரா ஊறுகாய் வியாபாரம்,  எல் ஜி கூட்டுப் பெருங்காயம்  இத்யாதிகளை லொட லொட  டூவீலரில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்பவர்.

கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது

அவர், எல்லா தலைப்புகளிலும். எந்த நேரமும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். சமூகவியல் கருத்தரங்கமா? அவருடைய உயர்ந்த சமூகப் பார்வை இருக்கும். உளவியல் கருத்தரங்கமா?  உங்கள் மனதை புட்டு புட்டு வைப்பார். இயற்பியல் கருத்தரங்கமா? அவருக்கு தெரியாத குவாண்டம் பிஸிக்ஸா? எல்லாம் கூகுள் அப்பாவின் உதவிகள். சரியா தவறா – கிடையாது. சும்மா, அடித்து விளையாடுவார்.

நான்கு நாட்கள் கொண்டாட்டம்

சரசுவின் வேலை மேய்ப்பதும் தோய்ப்பதும். மாடு ஆடு கோழி தாரா வாத்துகள் எனப் பலவற்றைப் பராமரிக்கின்றாள். அத்தோடு உடுப்புகள் தோய்க்கின்றாள். சிலவேளைகளில் தோட்டத்திற்குள் களையும் புடுங்குவாள். இவையெல்லாவற்றையும் விட, கமலத்தின் முழுத்தொட்டாட்டு வேலைகளையும் அவளே செய்வாள்.

கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும்.

தூண்டில்

விண்ணிலிருந்து வீழ்ந்த ட்ராகோவின் கலத்தில் நிறைந்திருந்த நீர்/திரவத்தின் உப்பு மற்றும் வளிகளின் செறிவை அடையாளம் கண்டு, அதை பன் மடங்காக உற்பத்தி செய்து பெரும் தொட்டியில் நிரப்பி, கலத்தினுள் நினைவிழந்திருந்த ட்ராகோவை அதற்குள் இட்டுச் சென்று, பல்வேறு வகையான திரவ புரதசத்து கலவைகளை ட்ராகோவின் உணவுக்காகப் பரிட்சித்து, ட்ராகோவின் ஓட்டில் எழும் வண்ணங்கள் பாஷை என்பதை அவதானித்து, அதை மொழியாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பழக்கி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு திறமையானக் குழுவை அடையாளம் கண்டு அமர்த்தி என்று செயல்கள் மூலமாகவே அவன் தன் துக்கத்தை மறந்தான். 

சலூன் சிந்தனைகள்

இன்க்ளூசிவான அன்பு, கருணை மூலமா உருவாகிற ஒழுங்குக்கு ஒற்றைப்படைத் தன்மை வந்து சேராதா? அது அதிகாரமா ஆகாதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் இங்க ஒரு முரண் இருக்கு. அதாவது நீங்க சொல்ற அந்த அன்போட விளைநிலம், அல்லது அதை ஒரு தனி ஆன்மா கண்டுகொண்ட முதல் இடம்ங்கிறது குடும்பம் தான். குடும்பம் அப்படின்னாவே அது எக்ஸ்க்ளுசிவ் அமைப்பு தான். அப்பா அம்மா பிள்ளைகள்ங்கிற பிரத்தியேக தன்மை. அங்க தான் அன்பு முதல்ல அடையாளம் காணப்படுகிற இடம்,

சரோஜாதேவி புத்தகம்

மன்சூருக்கு ஏன் மல்லிகா மீது மட்டும் காம உணர்வு எழவேண்டும்? மல்லிகா வயதுடைய அவயங்கள் கொண்ட வனப்பான பெண்கள் இந்த விடுதியிலேயே இருக்கிறார்களே? அவர்களிடமெல்லாம் அவன் காமுறவில்லையே? அது ஏன்? பார்க்கப்போனால், இதே வாதத்தை பெண்கள் மீது காமுறும் ஆண்கள் எல்லோர் மீதும், அதே போல் ஆண்கள் மீது காமுறும் பெண்கள் எல்லோர் மீதும் வைக்கலாம். இல்லையா? ஒரு பெண் மீது காம உணர்வு கொள்பவனுக்கும் பிடிக்காத, அவனால் காம உணர்வு கொள்ள முடியாத பெண்களும் இருப்பது எதைக் காட்டுகிறது

நெருஞ்சில்

லீலி பயந்தவாறு இல்லாமல் சிறியபுஷ்பத்திற்கு ஒரு தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த எட்வின் கணவராக அமைந்தார்.  நல்ல வீடு வாசல் என்று இருந்தாலும் சிறியபுஷ்பமும் எட்வினும் தங்களுக்கென்று தனியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலவில்லை.  பெரிய குடும்பம் தம்பி தங்கைகள் என்று எட்வினுக்கு பொறுப்புகள் அதிகம். சிறிய புஷ்பமும் தான் படித்த படிப்புக்கு எப்படியாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பள்ளிகளில் வேலை பார்த்தாள்.

மலையோதிகள் 

இயற்கை செதுக்கிய ஓதிமலை.  மனிதர்கள் இது வரைக்கும் தன்னை எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றி – என்பதைபோல – இளவெயிலில்  மின்னியது. அந்த மினுப்பில் “எத்தனை முறை நான் பகைகளைப் பார்த்தவன்”  “நான் கடவுள்- கடவுள் மோதலைப் பார்த்தவன் மட்டுமல்ல, கடவுள்-அசுரன் பகை மோதலையும் பார்த்தவன்” என்கின்ற நயதொனியில்,

சுழல்

எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும்

முளைக்கா  விடைகள்

முல்லைக்கு எப்பொழுதும் அறைகளில் அடைந்து உறங்குவது பிடிக்காது. வராந்தாவில், முற்றத்தில், மாடியில் இப்படி.  இடி மின்னல் நாட்களில் உள்ளே இழுத்து வரவேண்டி இருக்கும். அன்றும் அப்படித்தான் வராந்தாவில் படுத்திருந்தாள். உடல் உள்ளே இருக்க இடதுகை பரப்பி வாசலில் உள்ளங்கையில் நிலா வெளிச்சம் வாங்கிக்கொண்டு படுத்திருந்தாள். உறங்கும் மகளை இப்படி உற்று பார்ப்பதே குற்ற உணர்ச்சியாக இருந்தது . வேறு வழி இல்லை. ஆனால் எதை கண்காணிப்பது என்று புரியவில்லை.

வேதாந்த் வேதாந்தம்

என் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து இங்கே குடியேறியவர்கள். இல்லத்தில் பூஜைக்கு ஒரு தனி அறை, கோவிலுக்கு வாரம் தவறாமல் போவது, முக்கியமான ஐந்தாறு பண்டிகைகள் கொண்டாடுவது என ஹிந்து மரபை ஓரளவு பின்பற்றுகிறவர்கள். எனக்கு ஹிந்து என்றால் என் பெற்றோர்களின் நண்பர்கள் மற்றும் என்னைப்போல சத்யா, (புன்னகையுடன்) வித்யா என்று ஹிந்துப்பெயர்கள்

விளிம்பின் வெளியில்

பத்து நாளைக்கு முன்னால ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அழகான பொண்ணு வெண்ணிற கலர்ல ஃப்ராக் மாதிரி ஒரு ட்ரெஸ்ல அசத்தலா இருந்தா! யாருக்காகவோ காத்துக்கிட்டிருந்தா. உங்களுக்கு மர்லின்மன்ரோ படத்துல வந்த, செவென் இயர்ஸ் இட்ச்னு நினைக்கிறேன், பிரசித்தமான அந்த வெள்ளை  கலர் ஃப்ராக் காட்சி நினைவிருக்கா? அந்த மாதிரி இப்ப நடந்தா எப்பிடி இருக்கும்னு நினைச்சேன்!  அதே மாதிரி  அந்த டிரஸ் காத்துல பறக்கற மாதிரி  பறக்க ஆரம்பிச்சது. அவ தன்னோட டிரஸ்ஸை தன் கைகளால் கட்டுப்படுத்த முயன்றாள். முடியலை.

கலி 

ஆனால்  அதற்கு முக்கிய காரணம் வளர்மதிதான். இன்று அந்த அம்மாள் கலியாணம் ஆகி விட்டதா என்று கேட்ட போது சட்டென்று அவன் மனதில் தோன்றி மறைந்தது வளர்மதிதான். இப்போதும் அவன் நினைவில் மஞ்சளும் லேசான பழுப்பும் கலந்த அவள் உருவம் வருகிறது. அவளும் அவனும் நாயகமும் ஒரே ஸ்கூலில் படித்தார்கள். நாயகம் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்தான். அவன் அப்பா சப்-ரிஜிஸ்திரார் ஆபீசில் இருந்தார். கே.ஆர். புரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை ரிஜிஸ்தர் பண்ணும் போது அவர் இடது கையால் வாங்கியது அவரது இரண்டடுக்கு வீட்டின் ஒவ்வொரு செங்கல் மீதும் படர்ந்திருந்தது

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்

This entry is part 53 of 72 in the series நூறு நூல்கள்

எழுத்தாளர் காலத்துகள் தனது அண்மைய சிறுகதை தொகுப்புகள் இரண்டை அனுப்பி வைத்திருக்கிறார், அவற்றில் ஒன்றன் பெயர், _முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்._ “சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்தாக வேண்டும்,” என்று ஆல்பர் காம்யூ எழுதியதாக நினைக்கிறேன் (அவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை – பிரஞ்சு மொழியில் “முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்”

எலும்புச் சடங்கன்கள்

அவன் சதிஸ். காமாட்சி உயிரோடு இருந்திருந்தால், ’டேய், சதிஸ், பெரியவன் வீட்டுக்கு போனியா, எப்படிறான் இருக்கான்?, அவனுக்கு உடம்பும், கட்டினவளும் சரியில்லப்பா என்று சொல்லி அவனுக்கு காபிபோட்டு பெரியவன் வீட்டு சங்கதிகளைக் கேட்டிருப்பாள். சதிஸும், காபியோடு கலங்கியிருந்த பால் போல, சுவைத்துச் சொல்லியிருப்பான். சதிஸைப் பார்த்ததும், இங்கேயும் கோள் வைக்க வந்துவிட்டான் என்பதைப் போல், வண்டிக்கு ஒரு வெள்ளிக்கோள் வேகம் எடுக்கவைக்கப்பட்டது. 

நிழல்கள், நீட்சிகள்

அவர்கள் கூட யாரோ ஒருவரின் நிழலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முற்றத்தில் படர்ந்த கொடி சம்பங்கியாக, மலைக் காட்டில் பூக்கும் பொன் கொன்றையாக, அடர்ந்த கிளைகளின் உள்ளே கூவும் குயில்களாக, அவர்களின் சிறப்புக்களை தங்கள் பெருமைகளாகக் கூவும் அதிகாரிகளின் ஆணவத் திமிரை சகித்துக் கொள்பவர்களாக….

கொடை

கண்ணன் தனது பாதத்தை தூக்கி அர்ஜூனன் மடியில் வைத்துக்கொண்டு “அர்ஜூனா! கர்ணன் கொடை வழங்கும்போது சொல் பொருள் அறிவு உணர்வு என்ற நான்கு படிகளில் நகர்ந்து நகர்ந்து ஏறுவதில்லை. உணர்வு என்ற நான்காவது   படியில் துள்ளி ஏறி அக்கணத்திலே சென்று நின்று வழங்குகின்றான். நீ சொல் பொருள் அறிவு என்று மூன்று படிகளை நகர்ந்து நகர்ந்து கடக்கிறாய். அதனால் அறிவு படியில் களைத்து நின்று விடுகின்றாய். சரியா? தவறா? அதிகமா? குறைவா? என்ற கேள்வியின் கொக்கியில் மாட்டி துடிக்கிறாய். பின் எப்படி நீ உணர்வுப்படியை தொடுவாய்