உள்ளிருந்து இறங்கிய இரு இந்திய ஆடவர்களிடம் உள்ளிருக்கும் சிசுவைக் காட்டினான் ஆதி. அவர்களுள் ஒருவன் சிசுவைத் தூக்கும் வேளையில் மற்றொருவன் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் செல்ல ஆதிக்கு கடப்பிதழையும் , பணத்தையும் கொடுத்தான். பணத்தைப் பெற்று போக்கேட்டில் சொருகும் போதும், தன்னைக் கடந்து சென்ற சிசுவை அவன் ஒரு போதும் கவனிக்கவில்லை. வாகனத்தில் ஏறும்போது சிசுவின் அழுகுரல் சத்தம் அன்பின் கதறலாகவே ஆதியின் காதுகளில் வலியை ஏற்படுத்தியது.
Tag: காந்தி முருகன்
சிதறும் கணங்கள்
சில நேரங்களில் சீயக்காய் உடல் முழுவதும் படர்ந்து விடும். பெரிய அறையைப் போல குமரேசனின் தாத்தா 50களிலே கட்டிய அந்த குளியலறை குமரேசன் காட்டும் வித்தைகளுக்கு ஒத்துழைத்து விடும். ஆள் இடுப்பு அளவு உயர கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் தலையை முக்கி நீரில் மிதக்கும் முடியைக் கண்களைப் பிதுக்கிக் கொண்டு இரசிப்பான். தொட்டியின் உள்ளிறங்கி தண்ணீரில் முடியை மிதக்க விடுவான். அதே வேளையில் கால் பெருவிரலைக் கொண்டு தொட்டியின் தக்கையைத் தள்ளித் தள்ளி விட்டு தொட்டியிலிருந்து தண்ணீரை வெளியேற்றி மகிழ்வான். பெரிய ஆள் பாதி அளவிற்குப் போடப்பட்டிருக்கும் தொட்டி கரை மீது ஏறிக் கொண்டும் அமர்ந்துக் கொண்டும் தான் சாகசம் புரிய ஏற்ற இடமாகவே கற்பனைக்குள் உருமாற்றியிருந்தான்.
