இரவானால் தண்ணியடிக்காமலும் இருந்தததில்லை. மாதம் நான்கைந்து முறை “பெண்” கூடுதலும் உண்டு. அப்படித் துரை பாட்டாவிற்கும், கேசவன் பிள்ளைக்கும் அறிமுகம் ஆனவள் தாள் இந்த “வெத்தலபட்டி”. வறுமையில் பிறந்து, புத்தி குறைந்த கணவனுக்கு மனைவியாகி, பின்னர் வயிற்று பிழைப்புக்காக “உடல் தொழில்”-லுக்கு உட்பட்டவள். இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையைத் தவிர வேறென்ன இருக்க முடியும். காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா…. ?
Author: தெரிசை சிவா
கசம்
ஏப்ரல் மாத கோடை மழையில் கவர்ச்சியாய் நனைந்திருந்தது நிலம். ஈரம் சொட்ட நனைத்திருந்தால் எதுவுமே கவர்ச்சிதான். ஈரம் சொட்ட நனைந்த ஆப்பிள். வெள்ளத் துளிகளை “பருக்களாய்” தாங்கி நிற்கும் ரோஜா. சொட்ட சொட்ட குளித்துக் கரையேறும் விடலைப் பெண், தெப்பக்குளத்தில் நனைந்திருக்கும் தாமரை. மழையில் நனைந்திருக்கும் மிதிவண்டி. என எல்லாமே கவர்ச்சிதான். ஆனால் ஜீப்புக்குள் இருந்த “இருவரும்” இம்மாதிரியான “லௌகீக ரசிப்புகளில்” ஈடுபட முடியாத அளவிற்குப் பரபரப்பாயிருந்தனர்.
இடுகாட்டு மோட்சம்
ஆயிரம் இடைஞ்சல்கள் இருந்தும், “பெருவெள்ள நாட்களை” அவ்வூரின் அநேக பேருக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. இயற்கையின் மழையை எந்த உயிருக்குத்தான் பிடிக்காது. நடைமுறைப் பணிகளிலிருந்து ஒய்வு கொடுக்கும் ஒரு ரகசியத் திருவிழாவாகவே, மொத்த ஊரும் பெருவெள்ளத்தை கொண்டாடிக் களிக்கிறது.
அந்தண அம்பேத்கர்
இருண்ட முகத்துடன் இருந்த மாரிமுத்துவுக்கு பியூன் மாசானம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“விடுங்க சார்… பணத்தக் கொடுத்து போஸ்டிங் வாங்கிருக்கானுக்கோ… நியாயப்படி பார்த்தா நீங்கதான் ரெவனியூ இன்ஸ்பெக்டர் ஆயிருக்கணும்…”
“போஸ்டிங் வராதது கூட பிரச்சனை இல்லை மசானம்… சீனியாரிட்டில முதல்ல இருக்குற எனக்கு, போஸ்டிங் தாராததுக்கு பொய்யா ஒரு காரணம் சொன்னாங்க பார்த்தியா… அந்த பழியைத்தான் என்னால தாங்கிக்க முடியல…”
தாச்சி
விதிச்சத மாத்தணும்… ஆம்பளைங்க போல பொம்மனாட்டிகளும் எல்லா வேலையும் செய்யணும்… – உள்ளுக்குள் ஊறிய ஆளுமை உணர்வோடு கிசுகிசுத்தாள் செண்பகத்தம்மா.
ஆம்பளைங்க செய்யுற வேலையெல்லாம் செய்யுறது பொறவும்மா… மொதல்ல இப்ப ஆம்பிளைங்க போனது மாதிரி, வெட்ட வெளியில பொம்பளைங்களால ஒண்ணுக்கு போக முடியலையே… முடிஞ்சா அதுக்கு ஏதாவது பண்ணுங்க … – உடல் அனுபவிக்கும் துயரம் என் வாயின் வழி வார்த்தைகளாய் வெளியேறியது.
வள்ளியம்மை
ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு சராசரி ஆணுக்குள் தோன்றும் முதல் உணர்ச்சி “காமமாகவே” இருக்கிறது.. பத்து நிமிடம் அவளிடம் பழகியபின்பு, அவளின் நம்பிக்கையை பெற்று, அந்த பழக்கத்தை நீடிக்க முயற்சி செய்கிறது ஆணின் மனம்.