வேர்முள்

அந்த நேரத்தில் தான் செழியனின் வரன் வந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம். முடிவு ஏதும் ஆகி இருக்கவில்லை. ஆனாலும் கலையரசி “அச்சச்சோ இப்பதான் என் மகளுக்கு மாணிக்கராஜ் வீட்ல பேசி முடிச்சோம், நீ அப்பவே வந்திருக்கக் கூடாதா” என்று ஏதோ சோப்பு விற்க வந்தவனிடம் பேசி அனுப்புவது போல் பேசினாள். அந்த வரன் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் ஏதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

நெருஞ்சில்

லீலி பயந்தவாறு இல்லாமல் சிறியபுஷ்பத்திற்கு ஒரு தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த எட்வின் கணவராக அமைந்தார்.  நல்ல வீடு வாசல் என்று இருந்தாலும் சிறியபுஷ்பமும் எட்வினும் தங்களுக்கென்று தனியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலவில்லை.  பெரிய குடும்பம் தம்பி தங்கைகள் என்று எட்வினுக்கு பொறுப்புகள் அதிகம். சிறிய புஷ்பமும் தான் படித்த படிப்புக்கு எப்படியாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பள்ளிகளில் வேலை பார்த்தாள்.