இரண்டொழிந்தது

எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள்

பள்ளம்துறை பங்கிராஸ்

ஒரு கடையில கணக்கு எழுதற வேலை மோளே. மாமன் சரியா படிக்கேல்ல, ஆனா மோளே எனக்க இங்கிலீஸ இந்தப் பள்ளம் மண்ணுல எவனும் பேச முடியாதுல்லா! கேட்டியா. அதோட மாமன் கடல்மீனா உண்டு வளந்த ஒடம்புல்லா. பெரிய பெரிய பெட்டி மூட்டை எல்லாம் கூட அசால்ட்டா தூக்குவேன் மோளே. அந்த வேலையுஞ் செஞ்சேன். அதுல கொஞ்சம் தப்பிச்சேன்.

கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும்.