இந்திய கீதத்தின் சின்னம் – 1

தேசியக் கொடிக்கு சத்ரபதி சிவாஜியின் குங்குமப்பூ நிறத்தைப் போன்ற முழு ஆரஞ்சு வண்ணத்தையே உபயோகிக்கலாமா என விவேகமாகச் சிறிது காலம் சிந்தித்தது. இது மௌமார் கடாஃபியின் முழு பச்சைக் கொடியைப் போலிருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கம் இந்தப் படிகம் போன்ற தெளிவான சின்னத்தை விரும்பாததால் தூர தள்ளி வைக்கப்பட்டது. 1907ல் ஷ்டுட்கார்டில்நடந்த சோஷலிச மாநாட்டில் திருமதி. பிகாஜி காமா1 சூரியனையும் சந்திரனையும் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்.

ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?

தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார்.