சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் “சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்””

மனித ஆன்மாவின் நெசவு

இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்

ஆதியும் இறுதியுமான ஒற்றைவினா  மறைந்த மாத்திரத்தில், கேளிக்கைகள் பொருளற்றதாகும். யார் கண்டது, பசியும் ஓய்வும் உறக்கமும்கூட இல்லாமல் போகலாம். இருளும் ஒளியும் இரண்டற்று ஆகலாம். ஆந்தைகளும் மின்மினிகளும் பகலை ஆள, பகல்பொழுதின் உயிரிகள் இரவுக்கு இடம் பெயரலாம். 

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சிகையடர்ந்த நெஞ்சில்
மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து
அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே
நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன்
இனி இந் நதியின் கரையெலாம்
நின் பொன்னொளியால் சுடரட்டும்

சேரன் கவிதைகள்

என் கையெழுத்தில் எஞ்சியிருந்த கவிதைகள்,
முத்தம் பதிந்திருந்த சில நூல்கள்
சில கடிதங்கள்
சில மாவிலைகள்
அம்மாவின் படம்,
எப்போதோ கைக்கெட்டிய ஒரு சயனைட் குப்பி
காய்ந்து போன மூன்று

மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றன

வெள்ளைத் தங்கம்
சாயங்காலத்தின் மேல் விழும் மழைத் தூறல்
புத்தாண்டுக் கொண்டாட்டம்

தேவதச்சனின் கவியுலகம்

வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில்  நம்ம வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம பாத்திருக்கலாம் – மழை பெய்யும் போதோ, இல்ல அது நின்ற  கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய  துளிகள்  ஒரு நத்தையோட முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும்.

வேனிற்காலம்

அருகிலிருக்கும் போதுதான்
நாம்
அநேகரை
பார்க்க இயலாமல் போகிறது
கை விட்டவர்களையெல்லாம்
காலத்துக்கும் நினைத்துக் கொண்டு
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம்
இந்த வேனிற் காலத்தில்

பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்

வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

அடர்க்கருமை இருள் போர்த்தியபடி

ராத்திரி விளக்கின் ஊதா நிறம் குடித்து
அது அந்த அறையெங்கும்
மின்மினியாய் மினுக்கி அலைந்தது
அவனோ அந்தக் கொடும் இருட்டைப் போர்த்தியபடியே
பஞ்சு பறக்கும் படுக்கையில்
நாளான எண்ணெய்ச் சிடுக்கின் நாற்றம் பழக்கியவனாய்
அவன் உயிரை வளர்த்தியபடி
அறைக்குள் கிடந்தான்

ஊடாடும் பெருநிழல்

பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும்  பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி.  உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம்,   அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

பறவைகள் பறந்துவிட்டன
மீன்கள் ஆழங்களுக்கு
அந்த ஒருத்தியை காணவில்லை

அவள் நின்ற இடத்தில்
இப்போது வெயில்

சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து

குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.

கு.அழகர்சாமி கவிதைகள்

அவசரப்படுத்தும் இரவுக்கு
அந்தி வழி விட-
பறவைகள் வீடு திரும்ப
அதைக் கண்டு நான்
வீடு திரும்ப-
எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி
என்னைக் கூப்பிடுவதாய்த்
திரும்பிப் பார்க்க
திரும்பிய கணத்தில்
மின்னலடித்து
உள்ளுணர்ந்தேன்

இறவாமை – பகுதி இரண்டு

இந்தக் கண்களா ? மனம் வேறெங்கோ இருந்தால், கண்ணில் படுபவை அனைத்தையும் நாம் பார்ப்பதில்லையே. அப்போது மனமா ? மனம் பார்க்கிறது அல்லது பார்க்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறதே. அப்போது வேறொரு ஆற்றல் இந்த மனதையும் கவனிக்கிறது

இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்

என் மனம் முழுவதையும்
கரிச்சான் ஆக்கிரமித்திருந்தது
மரத்தில் எங்கோ
அப்போது ஒரு பறவை இட்ட முட்டையின்
கதகதப்பின் நெடி காந்தலாக வீசிற்று.

பெருங்காய கச்சோடி

நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்.” இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும்  இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன

கவிதை என்ன செய்யும்

எல்லோருக்கும் எப்போதும் நேசிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு காலமோ சூழ்நிலையோ நல்லூழோ அமைந்துவிடுவதில்லை. கல்வியின் பொருட்டோ பணியின் பொருட்டோ அல்லது வாழ்வின் அழுத்தத்தினாலோ பிரிவு அமைகிறது. இதில் பேரன்பும் பெருங்காதலும் பிரிவின்றி நிறைவு கொள்ளாத தெய்வங்கள்.  தொலைத்தூர உறவில் காதலில் இருப்பவர்கள் சாலையில் பயணிக்கும் போது  எல்லை பலகையில் தெரியும் ஊரும் அவற்றின் கிலோ மீட்டர்களும் அளிக்கும் கிளர்ச்சியையும் துயரையும் நன்கு அறிவார்கள்.

சாப விமோசனம்

சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர்  மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.

கல்பதரு

’உலக வரலாறுல யோசிச்சுப் பாத்தா மண்ணை வச்சு வீடு கட்டறதுக்கு முன்னாடியே முறிஞ்சு விழுந்த கிளைகளை வச்சு கீத்தை வச்சு மனுஷங்க தங்க வாழிடத்தை உருவாக்க முயற்சி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படின்னா கார்பெண்டரி உலகத்தோட தொன்மையான தொழில்கள்ள ஒன்னு

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

அதன் கோரைப் பற்களும் கண்களும்
அதன் காதுகளும் கொம்புகளும்
அதன் பிடரியும் கால்களும்
அதன் வாலும் வயிறும் மழையால் செய்யப்பட்டவை
மழை ஒரு திரை போல
யாரும் தான் இல்லையே
இனி நான் அழலாம்

உயிரில் கலந்து

ஒருநாள் தூக்கம் கண்ணை இழுக்கும்போது திடுப்பென விழித்துக்கொண்டேன். காரணமின்றி கண்ணீர் பெருகியது. கேவலாக மாறியது. சத்தம் கேட்டு மாதவன் எழுந்து “ப்ரியா, என்னாச்சு? ஒடம்பு சரியில்லியா? ஃபோன் ஏதாவது வந்துதா? அழுகைய நிறுத்திட்டு என்னன்னு சொல்லேன்! ப்ளீஸ், என்னாச்சு?” என்று பதறினார். இத்தனை காலம் தாண்டியும் இன்னும் அகாலத்தில் ஃபோன் அடித்தால் எனக்கு ஏற்படும் நிலைகுலைவு அவர் அறிந்ததுதான்

3. மரணமின்மையின் முதற்துளி

நோய்களுக்கு காரணம் கடவுளர், இயற்கை போன்றவற்றிலிருந்து  உடலளவில்  நாடிகளில் ஏற்படும் சமநிலைக்குலைவு நோய்களை உருவாக்கக்கூடும் என்ற தத்துவம் எகிப்திய மருத்துவத்தில் தோன்றிவிட்டது. மேலும் நோய் வருவதற்கு முன் தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், மருத்துவ அறிவை தொகுத்துக்கொள்ள பாப்பிரஸ் சுவடிகள் போன்ற வழிமுறைகளும் உருவாகிவிட்டன.

ஹர்ஷ சரித்திரம்

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.

மைக்கேல்:  புலங்களும் ஒளியும்

கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச்  சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு – விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

ஸ்வப்ன வாசவ தத்தா – 8

This entry is part 8 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

அவந்திகா, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கை கூப்பி மனதால் வணங்கி விட்டு வெளியேறினாள். இவ்வளவு கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு முதன் மந்திரி செய்த திட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு இங்கு வந்து பணிப்பெண் போல இருந்து வருகிறேன், அனைத்தும் வீணாகும் என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ளியது. இருந்தும் கட்டிலில் தேடுவது போல இருந்த உதயணனின் கையை எடுத்து  அருகில் படுக்கையில் வைத்து விட்டு, யாரும் பார்க்கும் முன் போய் விட வேண்டும் என்ற பரபரப்புடன் வெளியேறவும்.  உதயணன் விழித்துக் கொண்டு யாரது,  வாசவதத்தே என்று அழைக்கவும் சரியாக இருந்தது.  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 6

This entry is part 6 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

ஏறக்குறைய 80 -களின் கடைசி வரை பல வித முயற்சிகள், பலன் அளிக்காத பட்சத்தில், விஞ்ஞானிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். தங்களிடம் உள்ள லேசர் கதிர்களை உருவாக்கும் எந்திரங்கள், இவ்வித அளவீடுகளுக்குத் தகுந்த சக்தி வாய்ந்தவை அல்ல. இன்னும் சக்தி வாய்ந்த லேசர்கள் தேவை.

தூக்கணாங்குருவி கூடு

இந்த நுண்ணிய உறவில், மனிதனும் பறவைகளும் ஒரு தனித்துவமான இணை வாழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதனால் வடிவமைக்கப்பட்ட உலகத்தைப் புரிந்து கொள்ளவும் அதில் தங்களைத் தழுவிக்கொள்ளவும் பறவைகள் கற்றுக்கொண்டுள்ளன. நூற்றாண்டுகளாக, நகரச் சூழலுக்கு தங்களைச் சீரமைத்து, மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. மின்கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களை கூட தங்கள் கூடு கட்டுவதற்காக பயன்படுத்தி, உயரமான கட்டிடங்களின் நடுவிலும் தழைத்து வளர்ந்து வருகின்றன

கொலையாளியை ஜீரணித்தவர்

வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும்.

கவிதைகள் மாதம் – கற்பனைத் தோட்டம்

கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்

அறுபது நொடிகள்

கடைக்கு ஒட்டினாற்போல இருந்த அவருடைய வீட்டுக் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் அவசரமாக பணம் வேண்டும் என்றான். கடைக்கதவை திறந்து இவனை உட்கார வைத்தவர், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘பதினைந்தாயிரம் வேண்டும், அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீட்டு விடுகிறேன்’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தான். அதனை உரசிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாயை எண்ணி இவன் கையில் கொடுத்தார். அதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.