தத்தெடுக்கப்பட்ட சீனப் பெண்

சீனர்களும் வெண்தோலினரும் வெவ்வேறு விகிதத்தில் வாழும்  ஒரு வித இடைப்பட்ட வாழிடத்திலேயே நான் எப்போதும் வசித்து வந்தேன். குறிப்பாக வட அமெரிக்காவில் இனங்கள் ஊடே தத்தெடுக்கப் பட்டவர்களுக்குரிய  புறவெளிகளும் வசதிகளும் (spaces and resources) போதிய அளவில் அமைக்கப் படவில்லை  இனத்தின் மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், புறவெளிகளும் வசதிகளும் .வெகு குறைவாக, தொலை தூரத்தில் இங்கும் அங்குமாக, பயன்படுத்திக் கொள்ள  முடியாத வகையில் அமைந்துள்ளன.