நவநீதம் பிள்ளை

நிறவெறி ஆட்சியில் எந்தவொரு வெள்ளையினச் சட்ட நிறுவனமும் தன்னை ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ள மறுத்த சூழ்நிலையில், 1967-ஆம் ஆண்டில் நடால் மாகாணத்தில் தனது சொந்தச் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம், அந்த மாகாணத்தில் சொந்தமாகச் சட்ட நிறுவனம் தொடங்கிய முதல் பெண்மணி மற்றும் முதல் வெள்ளையரல்லாத பெண் வழக்கறிஞராக நவி பிள்ளை அறியப்பட்டார். நிறவெறியை  எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), கருப்பு மனசாட்சி இயக்கம் (Black Consciousness Movement) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல அரசியல் போராட்டக்காரர்களுக்காகவும், சித்திரவதைகளுக்கு ஆளானோருக்காகவும் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்

நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்

ஒவ்வொன்றோடும் நாம் முரணப்பட்ட உறவை வளர்த்துக் கொள்கிறோம். “இயற்கை” (கட்டமைக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் பொருளுடைய சொல்) என்பது நம் கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று; மாறிக்கொண்டே இருக்கும் நதிகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன, மரபணுக்கள் மாற்றப்படுகின்றன, கச்சா எண்ணெய் எரிப்பொருளாய் மாற்றப்படுகிறது. 

பிள்ளை மொழி

கிளம்பி வரும் புதிய அர்த்தங்கள்
வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்
நசுங்கிப் புழுங்கும் சொற்களை
விடுதலைச் செய்யும்
நல் மீட்பர் நாவுகள்

படைப்பின் தருணம்

அண்டை விலங்குகளின் மெல்லிய உரையாடல் முயற்சிகள்
பூந்தொட்டியிலிருக்கும் பூவின் அர்த்தமற்ற இளிப்பு—
மெல்ல மீண்டு, வடிவம் கொண்டு, வாழ்வை மீட்டெடுப்பது போல்;
அனைத்தும் ஒன்றாக — கருஞ்சிவப்பு மலர்களும், ரகசிய புழுக்களும்
சாத்தியமற்ற அனைத்தும்.