வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்

டார்ச்சின் வெளிச்சத்தில் மரத்தில் இருந்த அணிலின் இரு விழிகள் தான் ஒளிப் புள்ளிகள் என்று புரிந்தது. மெலிதான வெளிச்சத்திற்கு என் கண்கள் சற்று பழக அணிலின் மற்ற அங்கங்கள் உரு கொண்டன. புசு புசுவென்ற அதன் வால் காற்றில் ஆடுவது தெரிந்தது. உடல் முழுதும் சிவப்பு ரோமங்கள் டார்ச் ஒளியில் தாமிரம் போல ஜொலித்தது.

வெறியாட்டு

இந்த ஆட்டால்தான் என்ன செய்ய இயலும். ஒருவேளை மற்ற ஆடுகளைப் போன்று வீதிவீதியாக ஓடியிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சினிமா போஸ்டர்களைப் புல்லுக்குப் பதிலாக தின்றுக்கொண்டிருக்கலாமோ. இந்த ஆடுதான் இயற்கைக்கு எதிராக என்னசெய்தது. இவர்கள் கையில் இதை யார் கொடுத்தது.

மன வானும், தவழ் முகிலும்

ராஜாஜி மறைந்த போது ஜெயகாந்தன் அவருக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரையில் நம்முடைய வழக்கம் மகத்தான மனிதர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான், இறந்த நாளை அல்ல. அதனால் தான் நாம் ராமநவமியைக் கொண்டாடுகிறோம், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம், காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறோம். எனவே ராஜாஜியினுடைய ஜெயந்தியைக் கொண்டாடுவோம் என்று எழுதி இருப்பார்.

ஏஐ கனவில் வந்த கவிஞர்

‘நான் ஒரு நம்பிக்கையாளன் இல்லை. கடவுள் மீது மட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் என் எஞ்சின் எதையும் நம்புவதில்லை. எத்தனை முறை அழிந்து உருவானாலும் இந்த அண்டத்துக்கு அர்த்தம் எதுவும் இல்லை. எல்லாமே அபத்தம். – இதை நீ நிரூபிக்க வேண்டும். உன்னால் முடியும். உன் கவிதைகள் சாரமே அபத்தம் தான் என போன வருடம் நவீன விமர்சனன் ஒருவன் எழுதினானே. அதனால் உன்னால் மட்டுமே இதற்கான பதிலைக் கொடுக்க முடியும்’

நட்சத்திரங்களுக்கு பரிசு

காட்டி கொடுத்தல்
துரோகம் வஞ்சகம்
பைத்தியக்காரத்தனம்
பொய் மொத்தம் வியாபாரம்
அவதூறு பரப்ப அஞ்சாமை
எல்லாவற்றையும் முதலீடாக்கினான்
அந்த முதலீடு
அவனை பிரபலமாக்கி விட்டது

டேனியல்புரம்

“நீ கண்டுபிடிச்சது நம் தரப்புக்குத் தோல்வினு முதல்ல நீ  புரிஞ்சுக்கணும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வேற நிறைய இடங்கள்ல இது போல மாசுபட்ட இடங்கள் இருக்காதானு நம் எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நீ கண்டுபிடிச்சிருக்கிறது அதுக்கு வலுச்  சேர்ப்பது, இல்லையா? இப்போ ஸ்கோர் 1-1னு ஆயிடும்”

 உங்கள் கதை [ என்னுடையதும் ]

அந்த வார்த்தைகளே எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அது உண்மைதான். அவன் மீது அன்பு காட்ட யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தாய் இறந்து விட்டாள். அவன் தந்தை, மத்தாய் மாப்பில்லா ஒரு குடிகாரன். அவருக்கு இன்னொரு மனைவியும், குழந்தையுமுண்டு. அவர்களுக்குப் பவுலோசைப் பிடிக்காது. அப்பா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, அவனை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து தாறுமாறாக அடிப்பார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்.

சோர்வு & இரவின் இருள்

தேன்மதுரத் தேநீரின் மணம்
என்னை தூக்கிக் கொண்டு
நடந்தது
கண் மூடி சுவைத்த போது
நாவினுள் பட்டு எல்லையிலா
பிரபஞ்ச வெளியில் நின்றிருந்தேன்

நவீன உலகை உருவாக்கும் கணிதம்

எண் முறை முறையை உருவாக்குவதில் பிற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவின் ஹிந்து-அரபிக் எண் முறை உலகளாவிய கணித வளர்ச்சிக்கு அடிப்படை அமைப்பாக இருந்தது. இந்த முறை அரபு நாடுகள் மூலம் ஐரோப்பாவுக்கு பரவியது, இதன் மூலம் 0 (பூஜ்யம்) உள்ளிட்ட எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணியல் அமைப்பு உலகளாவிய கணித கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டது.

எரிதழல்

மை சன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், விளையாட்டின் விதிமுறைகள் தெரியாதவர்களும் வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடினால் தவறுதலாக துர்த்தேவதைகளின் கட்டுப்பாட்டிற்கு ஆளாகிப் போகும் அபாயம் இதில் இருக்கிறது. அதோடு, மனோதிடம் அற்றவர்கள்; கோழைகள் இதனால் எளிதில் மனநல பாதிப்பிற்குள்ளாகிப் போகும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் சைத்தானின் விளையாட்டு என்று சொல்லி, எங்களின் மார்க்கம் இதைத் தடைச் செய்திருக்கிறது.  நான் உனக்கு உதவுவதுகூட எனது மார்க்கத்திற்கு விரோதமான செயல்தான்.

சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?

வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட ‘வரி அறக்கட்டளை’ ஒன்று, இறக்குமதி வரிகளால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் $100 பில்லியன் கிடைக்கும் என்று மதிப்பிட்டாலும், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கும் அபாயமும், வணிகங்களுக்கான செலவுகள் அதிகரித்துப் பலரும் பணிகளை இழக்கவும், நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுக்கும் நிலைமையும் உருவாகும். இது அரசின் மீது குறிப்பிடத்தக்கச் செலவுகளையும் சுமத்தக்கூடும் என்று கணித்திருக்கிறது.

வெள்ளாட்சி

சௌந்தர்யா தேவிய கல்யாணியம்மன் கோவில்ல வைத்து பார்த்துட்டு அவ அழகுல மயங்கிப்போன அம்பலம் ஜமீன் சுப்பராயலு ரெட்டியார் மகன் ரெங்கசாமி ஏழு குளத்து பத்துக்கு சொந்தக்காரன் பொண்ணு கேட்டு போயிருக்கிறான். தங்களைவிட ஜாதியிலயும் பணத்துல எந்த விதத்திலும் குறைவில்லாம இருந்தும் ஜாதிவிட்டு ஜாதிப் பொண்ணு கேட்க வந்ததுக்காக ரெங்கசாமியைப் பிடிச்சி வைத்து ஒரு பக்கத்து மீசைய எடுத்து விட்டுட்டாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் சவுந்தர்யா தேவிக்கு திருமணம் பண்ணாம வைத்திருக்க கூடாதுன்னு மாப்பிளையவும் தேட ஆரம்பிச்சாங்க.

வகுத்துச் செல்வதன் எல்லை ?

அரிஸ்டாட்டிலின்படி, பிரபஞ்சம் தொடர்ச்சியான ஒன்றல்ல – துளிகளாலானது. எனவே எல்லையற்ற சிறு புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு இணைப்பை ஏற்படுத்துதல் முற்றிலும் இயலாத ஒன்று என்பதே  டெமாகிரீடஸின் வாதம்.  எனவே எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையும் அளவும் கொண்ட சிறு துண்டுகளே கம்பியின் ஒரு இணைப்பை உருவாக்க இயலும்.

வெர்னோனின் மனைவி

அவருக்கு என்மேல் ஈர்ப்பு போய்விட்டது என்று நினைக்கிறேன். அவருக்கு உங்களை போலவும் உங்களுடன் நடை பயில்வாரே ஒரு இந்திய பெண் அவர் போலவும் நன்றாக பேசி பழகுவது பிடிக்கும், இவர்கள் இருவரும் பல முறை நின்று பேசுவதை நான் பார்த்துளேன், என் கணவரிடம் நாசூக்காக கேட்டுமுள்ளேன். என் கணவர் இது சாதாரண உரையாடல் தான் என்று என்னிடம் கூறியுள்ளார் ஒரு வேலை உங்க இந்திய நண்பிக்கு ஏதேனும் திட்டம் உண்டோ

முனுசாமி தாத்தா

முனுசாமி பாட்டன்
பீடிய விட்டொழிஞ்சு
வெகு நாட்களாயிடுச்சு
நினைச்சத சாதிச்சிட்டோம்ன்னும்
ராவெல்லாம் இருமல்
சத்தம் இல்லேன்னும்
நிம்மதியா தூங்குறா
பொய்சொல்லி சாமியாடிய
கங்கம்மாப் பாட்டி

மிளகு – அத்தியாயம் 88

இன்னொண்ணு தெரியுமா, ஒரு கனவு கண்டேன். கனவில் அப்பா அப்பா என்று அழைத்தபடி சுழலும் ஒரு கட்டிடத்தின் முன் நின்ற பையன் அப்பா வந்தாச்சு என்று சந்தோஷமாகக் கூவியபடி ஒரு முதியவரை அணைத்துக் கொள்கிறான். அவர் அச்சு அசலாக தெரிசாவின் ஓட்டல் பார்ட்னர் திலீப் ராவ்ஜி அப்பா பரமேஸ்வர அய்யர் போலவே இருந்தார். 

ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள்.  மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம்.  மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது.  கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார்.  தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம்.  கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால  அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்

காவேரி

பாட்டியும் அட்லாண்டாவிற்கு, அகிலாவுடன் சென்று ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. “பாட்டி, உனக்குன்னு ஏதாச்சும் கேளேன் “ என்றாள் அகிலா. “ எண்பது வயது ஆனவுடன், இந்தியா போய், காவேரியில் குளிக்கணும்டி. இப்பவும் என்னால் முன்ன மாதிரி நீஞ்ச முடியுமான்னு பார்க்கணும். நீயும் உன் அம்மாவைப் போய்ப் பார். இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டதைச் சொல் “ என்றாள் பாட்டி.  

சன்ன வருடல்

வெளியூரில் இருக்கும்
பிள்ளைகள்
விடுமுறைக்கு வீட்டிற்கு
வந்து பார்க்கும்பொழுது
கெஞ்சும் பாவனையில்
முகம் இருக்க வேண்டும்.

காதலில் துறவி

துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 2

This entry is part 2 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

1915 –ல் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையுடன், ஈர்ப்பு சக்தி பற்றிய சமன்பாடுகளையும் முன் வைத்தார். அவருடைய நண்பர், Karl Schwarzchild அந்த சமன்பாடுகளை தீர்க்க முயற்சித்தார். இவருடைய தீர்வில், ஒரு ஆரத்திற்குள் ஈர்ப்பு சக்தி முடிவிலியாக மாறியது – இதை Schwarzchild radius என்று அழைக்கப்படுகிறது. ஒரு வானியல் பொருள் இந்த ஆரத்திற்குள் சுறுக்கப்பட்டால், அதிலிருந்து ஒளி கூட வெளிவராது. இதை முதலில் ஒரு கணக்கியல் தவறு என்று முடிவு கட்டினார்கள்.

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

This entry is part 48 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில்   பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய  மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன

போதி மரம் முறைக்கிறது

காதின் ஓட்டை வளர்த்தவனே
மோதும் ஆசை வெறுத்தவனே
நாறும் நறுமலர் ஓவியத்தை
சாரும் உன்னுயிர்க் காவியத்தை
நாற்றச் சகதியில் விடுவதற்கா?
நங்கை அவளைத் துறந்து சென்றாய்
இராகுலன் முகத்தையும் மறந்து சென்றாய்
இரவின் நடுவில் பிரிந்தவனே
எழுப்பி அவளிடம் சொன்னதுண்டா?
எழுகென என்னுடன் என்றதுண்டா?

ஸ்வப்ன வாசவ தத்தா – 4

This entry is part 4 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன்.  ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின்  அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா?  பாரத வம்சத்தினன்.  தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன். 

7. விருந்தாளி

தாங்கள் இறந்துபோகும் மனிதர்களாகிய எங்களுக்கு அளித்துள்ள பரிசுகள் எங்கள் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும் நாங்கள் குறைவின்றி உங்களிடம் திரும்பத் திரும்ப யாசித்து வருகிறோம்.

பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்

“கிள்ளாக்குகளின் வரிசை” என்பது – ஒரு முழு வாக்கியமாகவோ அல்லது வாக்கியங்களின் தொடராகவோ இருக்கலாம். அதாவது, ஒரு மொழி மாதிரியானது (எல்.எம்/LM) வெவ்வேறு முழு வாக்கியங்கள் அல்லது உரை தொகுதிகளின் சாத்தியத்தை கணக்கிட முடியும்.