- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்
பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மத்ஸ்ய தேசத்தை கௌரவர்கள் தாக்கிய சமயத்தில் அவர்களை எதிர்கொள்ள மத்ஸய தேசத்துப் படைகளோ தளபதிகளோ அங்கே இல்லை. தேசத்தின் மற்றொரு எல்லையில் பகைவனை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அனுபவமற்ற இலவசரன் உத்திரகுமாரனே போர்க்களத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு அலியாக உருமாறி அரசவை பெண்டிருக்கு நாட்டியம் கற்பித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அவனுக்கு ரதமோட்டினான். உத்திரகுமாரனுக்கு தைரியம் ஊட்ட தான் யார் என்பதை அவனுக்கு கூறினான் அர்ஜுனன்.
அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த தேவதத்தம் என்ற தன் சங்கை எடுத்து சங்கநாதம் முழங்கி, தன் வில்லான காண்டீபத்தை நாணை சுண்டினான். இரு சப்தங்களையும் கேட்ட துரோணர் உடனடியாக அவற்றை கண்டுகொண்டார். துரியனை நோக்கி “துரியோதனா! நாம் கைப்பற்றிய கால்நடைகளை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு நாடு திரும்புவது நல்லது. இல்லையனில் அர்ஜுனன் நம்மை தோற்கடித்து இவற்றை மீண்டும் கைப்பற்றி சென்றுவிடுவான்” என்றார்.
“ஆச்சார்யரே! படையினரை மனம் தளர வைக்குமாறு ஏன் இப்படி பேசுகிறீர்கள்? கால்நடைகளைக் கைப்பற்றுவது நம் நோக்கமில்லை என்பது உங்களுக்கு தெரியும். முடிவதற்குள் நாம் அம்பலப்படுத்தினாலும் அவர்களை மீண்டும் பன்னிரெண்டு வருடம் வனவாசம்அனுப்பிவிடுவேன் . எனவே எதிர்காலத்தை உத்தேசித்து இப்பொழுது அர்ஜுனனை அவர்களை தாக்குவோம்” என துரியோதனன் வேண்டினான்.
அவர்களை இடைமறித்த கர்ணன் “வேண்டுமானாலும் ஆச்சார்யரின் வார்த்தைகளை கேட்டு மனம் தளரலாம். ஆனால், நான் பயப்படவில்லை. எதிரே இருப்பது இந்திரனாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக கடந்த பதிமூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். என் வில்லில் இருந்து அலையென கிளம்பும் அம்புகள் அவர்களை துளைக்கப் போவதை பார்க்கக் காத்திருங்கள்” என கர்வத்துடன் கூறினான்.

“போர் இன்றி நல்லது நடக்க வாய்ப்பிருக்கும் பொழுது, சண்டையிட நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? தனி ஒருவனாக அர்ஜுனன் எதிரிகளை பலரை தோற்கடிக்க இயலும் என்பதும் உன்னால் அது இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கந்தர்வர்கள் துரியோதனனை பிடித்து சென்றபொழுது யார் விட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும் யார் அவனை காப்பாற்றினார்கள் என்பதும் உள்ளதா? நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்பதே வெற்றியை தரும்” என க்ருபாச்சாரியார் கூறினார்.
இது கர்ணனை கோபத்திற்குள்ளாகியது.
“துரியோதனா! அர்ஜுனனை கண்டு க்ருபாச்சார்யார் பயந்து விட்டார் போல. சடங்குகளை செய்யும் பொழுதும், தானங்கள் கொடுக்கும் பொழுதும் மட்டுமே ப்ராமணர்களிடம் ஆலோசனை கேக்க வேண்டும். போரின் பொழுது ஆலோசனை கேக்கக் கூடாது !” என துரியனிடம் கர்ணன் கூறினான்.
இதை கொண்டிருந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான்.
“துரியோதனா! பசுக்களை காக்க நீ எதுவும் செய்யவில்லை. கர்ணா! வெட்டி பேச்சு பேசாதே! ப்ரமாணர்கள் நல்லறிவும், அடக்கமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நீ இதுவரை என்ன செய்துவிட்டாய் என இப்படி பேசுகிறாய்?”
“துரியோதனன் ராஜ்யத்தை என்ன போரிலா வென்றான்? தர்மரை பகடையில் சூழ்ச்சி செய்து வென்றான். அதுவும் அவன் ஆடவில்லை . அவனுக்கு பதில் சகுனி ஆடினார். அது சத்ரியனுக்கு அழகா? இப்பொழுது “அவன் ராஜ்ஜியம்” என பேசுகிறான்.”
“எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!”
“என் தந்தையும், மாமாவும் சொன்னது பயத்தினால் அல்ல. அவர்களின் வலிமையை அறிந்ததால். ஒருவரை புகழ வேண்டிய சமயத்தில் புகழ்வது தவறல்ல. கர்ணா! அவன் மேல் உனக்கு இருக்கும் பொறாமை அவனை சிறியவனாக்காது” என கோபத்துடன் கூறிய அஸ்வத்தாமன் கீழே எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டான்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் தலையிட்டு “துரியோதனா! துரோணரும், க்ருபாச்சார்யரும் கூறியதெல்லாம் உண்மைதான்.அர்ஜுனனை தோற்கடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அஸ்வத்தாமனின் கோபமும் சரியான ஒன்றாகும். ஆனால், அஸ்வத்தாமா! படையினரை உற்சாகமூட்டவே கர்ணனும், துரியனும் அவ்வாறு பேசினார்கள். அதனால் கோபம் கொள்ளாதே! நாம் அனைவரும் இணைந்து போரிடுவோம்” என அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதனால் ஓரளவு சமாதானம் அடைந்த அஸ்வத்தாமன் “துரியோதனுனும், கர்ணனும் தன் தந்தையிடமும், மாமாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறித்தினான்.
சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த துரியோதனனும், கர்ணனும் ஆச்சார்யர்கள் இருவரின் மன்னிப்பை வேண்டினார்கள்.
“பீஷ்மர் பேசியபொழுதே என் கோபம் போய்விட்டது. நாம் இப்பொழுது செய்யவேண்டியது அனைவரும் இணைந்து அர்ஜுனன் துரியோதனனை தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால், தற்பொழுது அவன் மேல் அர்ஜுனனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்கக் கூடும். அதேபோல் , அவர்கள் தலைமறைவாய் இருக்கவேண்டிய காலம் முடிந்துவிட்டது. எனவே , அவர்களை வெளிப்படுத்தினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது” என துரோணர் கூறினார்.
இதைக் கேட்டு குழப்பம் அடைந்த துரியன் பீஷ்மரை பார்த்தான். அவரும் துரோணர் கூறியதை ஆமோதித்தார். அத்துடன் துரியனின் படையெடுப்பின் நோக்கம் ஒன்றுமில்லாமல் ஆனது.
கண் திறந்த தருணம் . ..
பிறப்பிலேயே குருடனாக பிறந்த திருதராஷ்டிரனுக்கு மனைவியாக காந்தாரா நாட்டு இளவரசி காந்தரியை கேட்டு தூது அனுப்பினார் பீஷ்மர். காந்தார அரசனுக்கு தன் ஒரு குருடனுக்கு இல்லை. ஆனால், காந்தாரியோ குரு வம்ச இளவரசனான திருதராஷ்டிரனனை மனப்பூர்வமாக சம்மதித்தாள். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனின் கஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளவேண்டி தன் கண்களையும் துணியால் கட்டிக்கொண்டாள். அதன் பின், ஒரே ஒரு முறை மட்டுமே தன் கண் கட்டை அவிழ்த்தாள் .
அவளுடைய இந்த தவத்தினால் அவளுடைய கண்களுக்கு விசேஷ சக்தி கூடியது. குருஷேத்திர போரின் பொழுது, துரியன் பீமனால் கொல்லப்பட்டுவிவிடுவானோ என்ற பயத்தில் அவனைக் காப்பாற்ற தன் சக்தியை உபயோகிக்க முடிவு செய்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, கங்கையில் குளித்து ஈர உடலுடன் பிறந்தமேனியாக தன்னை சந்திக்க அனுப்பினாள்.
அந்த கோலத்தில் துரியனை காந்தாரி சந்தித்தால், துரியன் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு பலம் பெற்றுவிடுவான் என ஊகித்த கிருஷ்ணன், கங்கையில் குளித்து அன்னையை சந்திக்க சென்றுக் கொண்டிருந்த துரியனை வழிமறித்தான்.
“துரியோதனா! உன் ஆடை எங்கே? ஆடைகளுடன் உன் வெட்கத்தையும் கழற்றி எறிந்து விட்டாயா? பிறந்தமேனியாக எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?”
“கிருஷ்ணா! என் அன்னையை காண அவர் இட்ட கட்டளைப்படி நிர்வாணமாக செல்கிறேன். அன்னை முன் நான் நாண வேண்டும்?”
“துரியோதனா! நீ இப்பொழுது வளர்ந்த மனிதன். அன்னையே என்றாலும், அவள் முன் நிர்வாணமாக இருக்க முடியும்?”
இதைக் கேட்ட துரியோதனனுக்கு வெட்கம் தோன்றியது. அருகே இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை இலையை வெட்டி, தன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டான். அவன் தொடைகளையும் அது மறைத்தது.
தன் முன் துரியோதனன் வந்து நின்றவுடன் தன் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்த காந்தாரி, இடையில் அவன் வாழை இல்லை அணிந்து அதிர்ச்சி அடைந்தாள். மேலும் , பீமன் துரியனின் தொடை பிளந்து கொல்வேன் என சபதம் எடுத்ததையும் அவள் அறிவாள். துரியனின் இந்த செய்கை, அவளது சக்தியை முறியடித்தது. இனி, தன் சக்தியால் அவனை காப்பாற்ற என்பதை புரிந்து கொண்டாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
