இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்

This entry is part 9 of 9 in the series கொலம்பஸ்

துறைமுகத்தை விட்டு கப்பல்கள் நகரத் துவங்கியதும், கப்பல்களின் கீழ்த்தளங்களில் பெரும் பரபரப்பும் சத்தமும் உண்டானது. குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட குதிரைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவை கடலின் அலைகளினாலும், இடநெருக்கடியினாலும் பயந்து கூச்சலிடத் துவங்கின. விலங்குகளின் கழிவுகளாலும், காற்றோட்டமில்லாத கீழ்த்தளங்களினாலும் கப்பல்களுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியது. மாலுமிகள் மற்றும் குதிரைப்படை வீரர்கள் விலங்குகள் நிலைதடுமாறி விழுந்து கால்கள் உடைந்துவிடாமல் இருக்க, அவற்றை கயிறுகளால் பிணைத்துத் தூக்கி நிறுத்தும் பணியில் உடனடியாகத் தீவிரமாக இறங்கினர்.