றெக்கை – அத்தியாயம் 19

This entry is part 19 of 19 in the series றெக்கை

ஆண்டு 1896

 நான் அல்பி என்ற ஃப்ரன்ஸ் அல்பெ.

ஜெர்மெனியில்  பெர்லினில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரெடில்  மருத்துவனாக ஊழியம் செய்கிறேன், என் மனைவி இந்தியப் பெண்மணி. அவளும் என்னோடு மேட்ரிட் மருத்துவமனையில் மருத்துவ ஊழியம் செய்கிறாள். 

மருத்துவனான நான் அலோபதி மருத்துவத்தில் தான் பட்டம் வாங்கி டாக்டர் என்ற உரிமத்தோடு தொழில் செய்து வருகிறேன். என் மனைவி நிர்மலாவும் அப்படித்தான்.

 நினைவு வந்துவிட்டது என் மனைவியின்  பெயர். இதை எழுதத் தொடங்கியதில் இருந்து நினைவில் வராமல் இருந்தது. நல்ல வேளை, இதை எழுதி முடிக்கும் வரை ஞாபகம் இல்லாமல் போனால், இதை வாசித்து விட்டு இந்த அல்பி டாக்டர் என்ன மாதிரியான வைத்தியன், பெண்டாட்டி பெயர் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத வினோத ஜந்து என்று ஆச்சரியப்பட்டு அங்கலாய்க்கக் கூடும்.

 நான் எழுதப் போகிற, எழுதி வரும் இந்த பெரும் வியாசத்தில் நிர்மலா அவ்வப்போது வந்து தலைநீட்டி என்ன எழுதுகிறேன் என்று கண்காணித்து விட்டு நீங்கக் கூடும். 

நான் எழுத வந்தது லிஸ்பனில் இருந்து மேட்ரிட் மாநகருக்கு நான் போன பயணத்தை விவரிக்கும் பயணக் கையேடு தான். இது வேறு யாருக்கு பிரயோஜனப்படும் என்று வினாவினால் என்னிடம் அதற்கு பதிலில்லை. 

வெறும் டாக்டர்களுக்கும், மனைவி பெயரை மறந்து போன டாக்டர்களுக்கும் கலவி நேரத்தில் மனைவி மற்றும் சகசயனம் செய்ய   வந்தவர்களும் நினைவு இருந்தாலும் இல்லாமல் போனாலும் உடலாட்டில் ஈடுபட்டிருந்த விவரங்கள் சிலது இந்தக் கையேட்டில் காணப்படலாம். 

அதை கலிதச் செலவாகக் கருதி – இங்கு உடலில் இருந்து வெளிப்பாடு என்று பொருள், அதேபடி செலவு இந்த பயணக் கையேட்டை வாசிக்கும்போதெல்லாம் ஏற்படலாம்.

ஏற்பட்டு   உடல் பெலகீனமாக, ஓமியோபதி மருத்துவனிடம் குளிகை வாங்கி ரசித்து தின்ன வேண்டி வந்தாலோ இந்தப் பயணக் கையேட்டையோ இதை யாத்த என்னையோ குற்றப்படுத்த வழியில்லை. 

 இந்தக் கையேடு விலைக்குத் தரப்படுவதில்லை. கர்த்தபமென குறி நிலைத்த நேரத்தில் வாசிக்க  இக்கையேடு கையில் ஏந்தக் கூடியதல்ல. இனி நூல் உள்ளே சஞ்சாரம் செய்ய வருக. 

இடவல மாற்றல் கொண்ட ஸ்வஸ்திகா மெல்ல வெற்றி பெறட்டும். 

லிஸ்பன் மாநகர் வெளிவட்டத்தில் இருந்து எஸ்பேனியா தலைநகர் மாட்ரிட்டுக்கு வந்து சேர இப்போது கிடைக்கும் வாகனம் வண்டி சாரட் குதிரை, நடை என்று எல்லா ஊரும் ஊடகங்களின் ஊடே பயணம் வைத்து ஏழு அல்லது எட்டு நாள் சென்று பயணம் பூர்த்தியாகும். 

ஞாயிறு விடிகாலை நான்கு மணிக்கு என் போர்சுகீஸ் நண்பரும் லிஸ்பனில் பெயர் பெற்ற சர்ஜ்ஜனுமான சந்தைப் பேட்டை பூதம் என்ற பெயரில் அறியப்படுகிற மருத்துவர் ஏற்பாடு செய்து கொடுத்த சாரட்டில் லிஸ்பன் சந்தைப்பேட்டை நோக்கி புறப்பட்டோம். 

நானும் என் டயாபர் – லங்கோடு கால நண்பன் லெவியும் மட்டும் பயணப் படுவதாக திட்டம். பார்த்தால், இரண்டு இளம் பெண்கள் -மெக்ஸிகோக்காரிகள் -கூட ஏறி ஒருத்தி லெவி மடியில் உட்கார மற்றவள் என்  அந்தரங்கத்தை வருடியபடி என்னை   சுகப்படுத்தவும் என்னால் அவள் சுகப்படவும் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்ய அவளுக்கு இயலும் என்றாள். 

காலை நேரத்தில் பிரக்ருதி என்னும் இயற்கையும், செடிகொடிகளும், விருட்சங்களும், குழந்தைகளும் உயிர்த்து சகல ஜீவனிலும் அவற்றில் இளையவை ஜீவன் நம்பிக்கையோடு இயங்கி வர,மிக நீளமாக வாக்கியம் எங்கே தொடங்கியது என்று புரியாமல் சடுதியில் நிறுத்திப் போட்டேன்.  

இந்த முன்னுரையோடு நான் இக்கையேட்டை தொடர்கிறேன்.  சொற்குற்றம், பொருட்குற்றம் ஏதும் இருந்தால் மன்னித்தருளுக.

மேட்ரிட்டிலிருந்து லிஸ்பன் போக 366  மைல் தூரம் பயணப்பட வேண்டும். லிஸ்பன்னிலிருந்து மாட்ரீட் போக 388 மைல் சஞ்சரிக்க வேண்டும்.லிஸ்பனை விட்டு வரும்போது ஒருபக்க போக்குவரத்து ஆக அரண்மனைகளை ஒட்டி வரும் சாலைகள வகைப்படுத்தி இருப்பதால் சுற்றிக்கொண்டு போக வேண்டிவரும்.

 சாரட் சாரதி இந்த சமாசாரம் தகவல் எல்லாம் தெரிந்தவராக இருக்கக் கூடும். தெரியாத பட்சத்தில் சகபயணி அல்லது சகசயனம் கருதி கூட வரும் பெண்டிர் இதெல்லாம் தெரிந்த வாய்சாலகியராக இருப்பர்.

 பயணம் நீண்டு நெடியதாக இருப்பதால் அடுத்து அடுத்து வரும் சிறு நகர்களில் ராத்தங்கிப் போக ஏற்பாடு முன்கூட்டியே செய்து வைத்திருப்பது நலம். 

மேலும் சகசயனியர் ராத்திரி தான் உம் மனதுக்கு திருப்தியளிக்க சேவையளிக்க முடியும்.

 நானும் நண்பர் லெவியும் சான் லோரன்ஸோ பட்டிணத்துக்கு சாயந்திரம் வந்து சேர்த்தோம். அது  அழகான சிறு நகர் அழகான பெண்கள் நிறைந்தது, மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்ததால் சால்சா நடனம் ஆடியபடி ஆப்பிரிக்க மதுவை சிறு மிடறாக சுவைத்து மகிழ நிறைய நேரம் கிடைத்தது. 

மாலை படரும் முன், வெகுமுன் வந்ததால் பகல் உணவு இன்னும் கிடைத்தது வினோதமாக இருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு கன்றுக்குட்டி கழுத்தெலும்பு சூப், மாட்டு மாமிசத் துண்டில் ஊறிய கோதுமை ரொட்டி, ஊறுகாய் தினுசுகள் என்று 

அந்த நேரத்தில் அரம்பையரின் நடனம் பார்த்தபடி பகல் உண்வு உண்ண தேவாமிர்தமாக இருந்தது. ஐயா டெக்வில்லா என்று அரம்பையரில் ஒருத்தி பணிவாகக் கேட்க, அவள் காது மடலை வருடியபடி லெவி எங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு சின்னஞ்சிறு கிண்ணம் டெக்வில்லா கேட்டான். 

குமிண் சிரிப்போடு அந்த நாட்டியக்காரி இங்கே கிடைப்பது போல் உசந்த தரத்தில்  டெக்வில்லா வேறெங்கும் கிடைக்காது என்று கொஞ்சலாகச் சொல்லவே லெவி ஆளுக்கு ரெண்டு சிறு தம்ப்ளர் டெக்வில்லா கொண்டுவரப் பணித்தான,  ஒரு தட்டில் உப்பும் டெக்வில்லாவோடு வந்தது. 

எனக்கென்னமோ அந்த மது உச்ச போதையை தரும் என்று தோன்றவே உஷாரானேன். ஐரோப்பியப் பயணம் முதல் தடவையாக வைத்து புறப்படுகிறவர்கள் மது, மாது ரெண்டு விஷயத்தில் சாக்கிரதையாக இருப்பது நல்லது. 

நான் அந்த ஒழுங்கை பாலிக்க மனசின்  உள்ளே இருந்து என் மனைவி நிம்மி என்ற நிர்மலா டாக்டர் பூர்ண சந்திரன் போல் முகம் மலர்ந்து புன்னகைக்கும் பேரழகி இந்தியப் பெண் நான் கிஞ்சித்தும் மதுபானம் அருந்த வேண்டாம் என்று சொன்னபடி நேரே கன்றுக்குட்டி சூப் கொண்டு வர பணித்தேன்.

அந்த அரம்பை  என்ன கொண்டு வந்தாளோ, என்ன அதில் கலக்கினாளோ என் தலையை மார்பில் தாங்கி என்ன கலவையைப் புகட்டினாளோ மதுபானக் கடையிலேயே மேசையில் எப்போது தலை சாய்த்து உறங்க ஆரம்பித்தேனோ கண் முழித்தபோது ராத்திரி எட்டு மணி ஆகியிருந்தது. 

அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும்  லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும். பயண காலத்தை அனுசரித்து அந்த நாட்கள், மாதங்களுக்கு யெபுரோ ஆராதகனாக இருக்கலாம்.இந்த வேர்க்கடலை அச்சு எங்கிருந்தோ சால்ஸ்ஸா கிளப் உள்ளே வந்து விழ,யெபுரு அருளால் என் கீசை தீனி மேசை மேல் கிடந்தது, மூடிய கதவு திறந்து வெளியே இருந்து 

வேர்க்கடலை உருண்டை கடித்தபடி லெவி உள்ளே வந்தான். கீசை அவன் வசம் பத்திரமாக இருந்தது காண ஆசுவாசம் மாடியில் தங்க அறை வாடகைக்கு எடுத்திருக்கிறான். ராத்திரி போஜனம் அறைக்கே வந்து விடும். 

சொல்லியபடி மாடிப்புடி தடதடவென்று ஏற நான் அவன் பின்னால்    படியேறினேன். பிருஷ்டம் திண்ணென்று குலுங்க என்னோடு படி ஏறிய அரம்பை திரும்பப் பார்த்து மனதில் நிறைந்தாள்.

என் அறைக்கு பூட்டு இட்டிருந்ததை அரம்பை விலக்கினாள். கையில்  வைத்திருந்த கோழி மாமிசம் மற்றும் எண்ணெய் மணக்க பொரித்த மீன் மேலும் சந்த் தெரிசா இனிப்பு என வரிசையாக உணவு மேசை பரிமாறப்பட்டது.

 நான் ராத்திரி அத்தாழத்துக்கு எவ்வளவு கட்டணம் என்று தெரியாமல் மீனைக் கடித்து விட்டு  கண்டமேனிக்கு கட்டணம் கேட்டால் என்ன செய்யலாம் என்று பயந்து இருந்தேன்.யொருபு தெய்வ வந்தனையில் மதுவும், மங்கையும் பாதுகாப்பு தருவதில்லை. இனிப்பு மாமிசமும், ஆ ஃப்கானிஸ சர்பத்தும் உண்டு. அதை உறுதி செய்ய என்னோடு வந்த அரம்பையிடம் கேட்டேன்.அவள் அசங்கியமான சைகை ஒன்றை செய்து டெக்விலா    கிண்ணத்தையும் மாட்டு மாமிசத்தையும் விட்டுவைத்து மற்றவற்றை திரும்ப எடுத்துப் போனாள். அவள் வகையில் கஷ்டம் இல்லை என்று தீர்மானித்துக் கொள்ளத் தடையேதும் இல்லை என்று புரிந்தது.

 என்னமோ தோன்ற உப்புக் கட்டியை விரல் இடுக்கில் வைத்து சுவைத்து லெக்விலாவை ஒரே  மடக்கில் குடித்தேன். தலை சுற்ற ஆரம்பித்தது. மனசில் எண்ணம் – அது இப்படி இருந்தது-

யொருபா சேனைக்கிழங்கு விற்கும் சந்தையில் புறம் காட்டி மொச்சை ஒரு  மலைபோல் குவித்து ஒரு வீசை மொச்சை வாங்கினால் ஒரு வீசை மொச்சை விலையில்லாது தரப்படும் என்றார். 

யொருபாவுக்கு காய்கறி வியாபாரிகள் மித்ரர்கள் ஆடு ஒன்று ஜப்பனிய அரிசி மது சாக்கே அருந்தி விட்டு பல்வலி அதிகமானதாக ஜப்பானிய பல் வருத்துவன் அருகே போய் சாக்கே என்று சொல்ல ஆரம்பிக்கிறது.

 சீன  இளம்பெண் ஒருத்தி அல்பே அருகே போய்  பிரதி உபசாரம் செய்ய வா என கால் பரப்பி நின்று அழைக்கிறாள். இறகின் தூவெண்மையும் மென் துகிலுமாய் பறந்து வெளி நிறைக்கிறது ஒரு குடும்பம்..

ராஜாளி பருந்து ஒன்று பறவைக் குடும்பப் பக்கம் எச்சமிடுகிறது, கண் சுளித்து அத்தனை பறவையும் மூக்கால் ராஜாளியை தரையில் வீழ்த்தி உற்சாக கூக்குரலிடுகின்றன. 

எருமைகள் கடைத் தெருவில் மூக்குக் கண்ணாடி அணிந்து இருபது வீசை காய் வாங்கி சில்லறை இல்லாமல் வராகனைக் கொடுத்து சாணி சிதறி சிரிக்கின்றன.                             

ராட்சச வாகனம் ஒன்று எச்சமிட்டபடி யொருபு ஆல்பர்பஸ் என்ற மைதாமாவின் மெடாஃபராக விசிலடிக்கிறது. மைதாவில் சர்க்கரை கலந்து

சிறகு தழைத்து பறந்தவள் அம்மாவின் வயிற்றில் ஆடை விலக்கி தன் வெண்சிறகுகள் கொண்டு மெல்லென வருடிக் கொண்டிருந்தாள். தேவகுமாரி தன் அன்னைக்கு நோய் நீக்க ஆன எல்லா சிஷ்ருசையும் செய்து அவளையும் வெளியேகி சிறகு உயர்த்த எல்லாம் நடத்துவிக்க ஓஓஒ என சிறகொலி சூழல் நிரம்ப செய்தபடி இருந்தாள்.கொல்லுப் பட்டறையில் துருத்தியையும் தீக்குழியையும் புறக்கணித்து நல்ல கருப்பர் ஒருத்தர் ஊயாரிடமிருந்தோ கனவு திருடுகிறார். அழகுக் கருப்பி கொல்லனிடம் un துருத்தி எங்கேய்யா என்று கேட்டு அவன் உதடு பிதுக்கியது கண்டு துருத்தி துருப்பிடித்துப் போகப் போறது என்று பகடி மொழிந்து நடக்கிறாள். ஒரு நல்ல கருப்பன் மூத்தோன் என்னிடம் வந்து அல்பி பிரசவம் பார்க்கணும் என்கிறார். ஒரு பறவைப் பெண் என்னிடம் என் மகளுக்கு பிரசவம் ஆகும் நேரம் என்று வரச்சொல்லி விட்டு பறக்கத் தொடங்குகிறாள். சிறுமி அம்மா  தேர்ந்த ஷேப் ஷிஃப்டர்கள் அம்மாவும் மகளும்.

நான் ஒரு வாத்தியம்மா.கயினோ பழகி சர்டிபிகேகிட்டே மருத்வம் தெருவுலே பார்க்கிற வாத்தியம்மா. என் பெயர் பில்லை மிக்ஷு,…நான் இப்போது மலையாளம் என்ற நேர்த்தியான பாஷை பேசுகிறேன் என்கிறாள் மிஷு.மாட்டுச் சந்தை அடுத்து இருக்கிறது என்று இருட்டுக்குள் கை நீட்டிக் காட்டுகிறாள் அவள்.

ருட்டுக்குள் நிர்மலா நடந்து வருகிறாள். லெவி அவள் இடுப்பை   இறுக்கி அணைத்து அவளது உதடுகளை ஈரமாக்கி ப்ரான்ஸ் தேசத்தார் போல் முத்தமிடுகிறான்.உபசாரமும் பிரதி உபசாரமுமாக படுக்கை அறை தரையில் கிடந்து இன்புறுகிறார்கள்.

அடிமைச் சந்தையில் நக்னமாக்கப்பட்ட இளம் பெண்களை அவர்களுடைய கணவர்கள் வெந்நீர்க் குளியல் நடப்பித்து உடுப்பித்து துரைமார்  பரி சுத்தமான சுகம் அனுபவிக்க வங்களா தாழ்வாரங்களில் வரிசையாக நிற்க வைக்கிறார்கள். அரை உடலாக அவர்கள் பற்களால் மாமிசம் போல் கடிக்கப்பட வலிக்க வலிக்க இன்பம் துய்க்க ஆணையிடப்படுகிறது.

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 18

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.