யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது. நாவலில் பயிலும் மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு, ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும் வித்தியாசமான உரையாடல்களும் சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.
