காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.
Tag: ராமராஜன் மாணிக்கவேல்
சரணாகதி
அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது
கொடை
கண்ணன் தனது பாதத்தை தூக்கி அர்ஜூனன் மடியில் வைத்துக்கொண்டு “அர்ஜூனா! கர்ணன் கொடை வழங்கும்போது சொல் பொருள் அறிவு உணர்வு என்ற நான்கு படிகளில் நகர்ந்து நகர்ந்து ஏறுவதில்லை. உணர்வு என்ற நான்காவது படியில் துள்ளி ஏறி அக்கணத்திலே சென்று நின்று வழங்குகின்றான். நீ சொல் பொருள் அறிவு என்று மூன்று படிகளை நகர்ந்து நகர்ந்து கடக்கிறாய். அதனால் அறிவு படியில் களைத்து நின்று விடுகின்றாய். சரியா? தவறா? அதிகமா? குறைவா? என்ற கேள்வியின் கொக்கியில் மாட்டி துடிக்கிறாய். பின் எப்படி நீ உணர்வுப்படியை தொடுவாய்
தொடுதிரை
நூறாண்டு நின்று செழித்துப் படர்ந்த வேம்புதான் சாமி. கிழக்கே உதித்து மேலேறும் சித்திரை மாத முழுநிலா, வானம் குழந்தை முகம்போல தெளிந்து ஒளிர்ந்தது, செவ்வந்திப் பூக்கள் சிரித்திருக்கும் வயல், குலதெய்வம் வேம்புக்கு முன்னால் சக்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, பூ பழம், பொறிகடலை படையல், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவைக்கும் அம்மா, ஆற்றுநீரில் தெரியும் மணல்போன்ற அம்மாவின் வண்ணம். இலைவழி வழியும் நிலவு அம்மாவின்மேல் பொன்பொழியும் கணம். இடுப்பு வேட்டியில் இறுக்கிக்கட்டிய துண்டோடு, திறந்த மார்போடு, கற்பூரதீபம் ஏற்ற பனை மரம்போல் நிற்கும் அப்பா.
ருருவின் பிரம்மத்வாரா
“எனக்கு என்ன? ஏன் என் பிரிய ருரு என்னைவிட்டு புழுழுவாக மாறி ஓடுகின்றான். இந்த கனவின் அர்த்தம்தான் என்ன? யாரிடம் கேட்பேன்“ அவள் பயத்தால் தவித்தாள். காரணம் இன்றி கண்கள் அடிக்கடி நனைந்தது. காலையில் இருந்து அந்த கனவு அவளை அலைகழிக்கிறது. தோழிகளிடம் சொல்ல கூச்சமாக இருந்தது. “அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் தேடி. பெரும்பாலையில் அலைகிறேனோ?“ கனவை உதற முயற்சித்தாள், அவளால் முடியவில்லை. கனவு அவளை வாகனமாக்கி பயணம்போனது.
