மொழி புரியாவிட்டாலும் மனம் புரிந்த இசை

ஒருவரை நேசிப்பதற்காகத் தன்னையே மாற்றிக் கொண்டே சென்றால், ஒரு கட்டத்தில் தன்னையே இழந்துவிடலாம். உண்மையான அன்பு என்பது உன்னை நீயே அழித்துக்கொள்வது அல்ல என்ற கருத்துடன் 2018ல் வெளியான Love Yourself: tear நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல் பாடல்கள் அதுவும் தோல்வி, வலி, பிரிவு என்றால் இளைஞர்களைக் கேட்கவும் வேண்டுமா? கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த தொகுப்பு Billboard 200ல் முதலிடம் பிடித்தது. K-pop ஆல்பம் ஒன்று அமெரிக்க ஆல்பம் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை.

வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

ஓசை பெற்று உயர் பாற்கடல்

வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.