வேணு தயாநிதி கவிதைகள்

குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு 
புயலாகி 
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்

வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

மூன்று கவிதைகள்

அவர்
கடந்து செல்லும் பாதையில்
எட்டுத் திசைகள்
பன்னிரண்டு ராசிகள்
மற்றும் பஞ்ச பூதங்கள்
துவைத்த ஆடைகளாய்
தொங்குகின்றன
கிளைகளில்.

திரை விலகிய அறையின் அதிசயங்கள்

கண்ணாடி இழைகளின் நெடுஞ்சாலைகளில்
முட்டி மோதிக்கொண்டு
முடிவற்று அலைந்த
பதில் வரப்பெறாத
அஞ்சல்களின் சமிக்ஞைகள்,
உருவம் பெற்று
பேச ஆரம்பித்து விட்டன
ஒலிபெருக்கியில்.

கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்

கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.

வேணு தயாநிதி கவிதைகள்

பனி பூத்து 
பனி கொழித்து
உப்பளம் போல் 
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும், 
பிடுங்கி 
தலைகீழாய் நட்டது போல் 
இலையின்றி நிற்கும் 
பிர்ச் மரம்.

ஷாங்க்யா கோஷ் கவிதைகள்

தலையில்
மின்மினிப்பூச்சிகள் சூடி.
உயரே
ஓரியனின் வாள்
போர் முடிந்து
காலம்
அமைதிக்கு திரும்பிவிட்டது

சுடோகுயி – பாகம் 2

“சுடோகு விளையாட்டில் வருபவை அனைத்துமே வெறும் வரிகள் அல்ல, கதைகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை குறுங்கதை எனும் ஏழு வரிகளில் எழுதப்படும் கதை ரோம் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. ரோமின் இரண்டாவது இருண்டகாலத்தின்போதும் சிறு குழுக்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டது. அக்கதைகளுள் சில புலனாய்வுத்துறையின் கணினிகளின் பொருள்கூட்டுகளையும் தாண்டி சங்கேத குறியீடுகள் கொண்டிருந்ததால், புலனாய்வு அதிகாரிகள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத செய்திகளின் ரகசிய பட்டியலில் நெடுங்காலம் வைத்திருந்தார்கள்.

உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்

கவிஞனின் ஒரு சிறு எண்ணத்துளியை, அவன் வாழ்க்கையின் சிறு கணத்தையே ஒரு நவீனக்கவிதை காட்சிப்படுத்துகிறது என்பதால் எல்லா சமயங்களிலும் அது சமநிலை கூடிய சிந்தனையின் புள்ளியிலிருந்து உருவாகி வருவது சாத்தியமில்லை என்பதும், தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் கொண்ட கவிஞனின் ஒட்டுமொத்த அகத்திற்கு அவனின் ஒரு சிறு எண்ணத்துளி மட்டுமே மாதிரியாக அமையாது என்பதும், எந்த வாசகனும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.

ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்

1.    அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி   அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”

சுடோகுயி

”வீ வாண்ட் சுடோகுயி!

வாசகங்கள் ஒளிரும் மின்பலகைகளை உயர்த்தி ஆட்டியபடி பலர் உரக்க கத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரதமரை நோக்கி ஓடிவர முயன்றவர்களை ரோபோக்களின் சைகையை கவனித்து ஸ்டாமினாக்கள் தடுத்து நிறுத்தின.

மூதாதையின் கவிதை

நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.

மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்

கழுத்தை சுற்றி
படமெடுத்து நிற்கும்
நாகத்துடன்
நீலநிறத்தில்
தியானிக்கும்
பரமேஸ்வரனின் படம்
படபடக்கும்
கிராமத்து சலூன் நாற்காலியின்
நினைவு

மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி

முற்றத்து மணியசைத்து
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.

பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்

அது வெல்ஷ் இளவரசனின் ஆவியோ
இட்வால் ஏரியின் அருகில்
தன் சகோதரனால் கொல்லப்பட்ட பிறகு
அந்த ஏரியின் மீது
எந்த பறவையும்
இதுவரை பறக்கவில்லை

மேசன்களின் உலகம்

இன்று காலை வீட்டை விட்டு வெளியேறி சாலையில் இறங்கியதும் கருப்புக் கண்ணாடியுடன் மோதி விடுவதுபோல் வந்த மேசன் எவர் செய்த புண்ணியமோ, என்று எண்ணும்படி லாவகமாய் வாகனம் திருப்பி நொடிப்பொழுதில் இடிக்காமல் சென்றார். நரை கூடிக் கிழப்பருவம் எய்தி காதிகிராப்ட் கைத்தடியில் வெள்ளை ஜிப்பாவுடன் சந்தனத்தை திருநீறாய் அணிந்து “மேசன்களின் உலகம்”

வேற்றிடவேர் படியும் கிரணத்தின் நிறப்பிரிகை

அரட்டையாக ஆரம்பித்த பேச்சு இந்திய கவிஞர்களைப்பற்றி சுற்றி வந்து தமிழ்க் கவிஞர்கள்கள், எழுத்தாளர்கள் பற்றிய உரையாடலாக நிலைபெற்றது. தமிழின் முன்னோடியான எழுத்தாளர்கள் அமெரிக்காவைப்போல பெருவாரியான இதழியல், பதிப்பக வெற்றியின் வழி அறியப்படுபவர்கள் அல்ல என்கிற விஷயம் தமிழ் எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது. பெரும்பாலோர் வாசிக்கும் பரப்பிலக்கியம் இலக்கிய தகுதிகளுக்கு உரிய செவ்விலக்கியம் என்ற வேறுபாடு அமெரிக்காவில் அநேகமாக இல்லை. ஆனால் தமிழில் அதைப்போன்ற இருமை இருப்பதன் காரணம் என்ன என்ற திசையில் உரையாடல் சென்றது. சிறிய வாசகர் வட்டம் காரணமாக பதிப்பகத்துறை பெரும் ஆற்றலுடன் இயங்கும்படியான சூழல் அமையாதது என்பதுடன் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே பதிப்பக வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணி அதை நோக்கி பாய்பவர்கள் அல்ல, கவிஞனாக எழுத்தாளனாக இருப்பதையே ஒரு வாழ்க்கை முறையாக …

படம்

கிடைத்ததெல்லாம் பல வருடங்களுக்கு முன் எடுத்தவை. நண்பர்களுடன் கூட்டமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சில படங்கள். யாரோ ஒரு நண்பர் ஊர் மாற்றிச் செல்லும்போது அவருக்கான பிரிவு உபச்சார விருந்தில் எடுத்த படமாக இருக்கவேண்டும். அநேகமாக அந்த படத்திலிருந்த நண்பர்கள் அனைவருமே பாஸ்டனை விட்டு சென்றுவிட்தால் யாருடைய பிரிவின்போது எடுத்தது என்பதுகூட உடனே நினைவுக்கு வரவில்லை. காமிராவுக்கு முதுகை காட்டிக்கொண்டு குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடும் படங்கள். தனியாக இருக்கும் படம் என்று தெரிவு செய்யும்படி ஒன்று கூட இல்லை. எப்போதும் மற்றவர்களை படம் எடுத்துக்கொண்டிருப்பவனுக்கு ஏற்படும் சிக்கல், அவனை யாருமே படம் எடுப்பதே இல்லை என்பதுதான். கிடைத்த ஒரே தனிப்படமும் முள்தாடியுடனும் குவியமில்லாமலும்.

துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையில் கரிய மொஸாம்பிக் மக்களை கண்டிருந்த போர்த்துகீசியர் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்தபோது அம்மக்களின் நிற ஒற்றுமையை முன்னிறுத்தி அவர்களையும் முக்குவா என்றே அழைக்கின்றனர் என்ற தகவலில் இருந்து விரிந்து செல்வது இதன் விவாத இழை. மாப்ள என்ற புதிய கேரள முஸ்லீம் சாதியின் தோற்றம் போன்ற தென்மேற்கு கடற்கரையோர வாழ்வின் இனவரைவியல் தகவல்களும் இந்நூலில் உண்டு. ….விஷமுள்ள நாகத்தை நல்லபாம்பு என்று அழைப்பது போல இருப்பதிலேயே வலிமையான கடல் மிருகத்தை நெய்தல் நிலத்தவர் நல்லமீன் என அழைப்பதும் ஆச்சரியமூட்டுவது.

க. நா. சு. கவிதைகள்

நான் எழுதுவதில் நல்ல காபி சாப்பிடுவதில்போல, அழகிய யுவதி ஒருத்தியைப் பார்ப்பதில்போல, நல்ல நூல் ஒன்றை படிப்பதில்போல – ஒரு ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தம் வாழ்வை நிறைவுறச்செய்ய எனக்கு அவசியமாக இருக்கிறது. எழுதுகிறேன், தினமும், இடைவிடாமல் எழுதுகிறேன் நான் – கவிதை, கதை, நாவல், விமரிசனம், சிந்தனைகள் எல்லாம் எழுதுகிறேன். இப்படி எழுதுவதிலே ஒரு விஷேஷம் என்னவென்றால் தமிழில் எழுதுவதில் – மற்ற மொழிகளில் எழுதுவதை விட – அதிக ஆனந்தம் கிடைப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறேன் – தினம் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவ்வளவில்லா விட்டாலும் – சற்றுக் குறைவான ஆனந்தம் இருக்கிறது என்று கண்டு ஆங்கிலத்திலும் வேறு சில மொழிகளிலும் கவிதைகள், கதைகள், நாவல்கள், விமரிசனங்கள் எழுதுகிறேன். ஆயினும் எனக்காகவேதான் எழுதிக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதுவதை நீங்கள் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமோ, சந்தோஷக் குறைச்சலோ இல்லை. அதனால்தான் G.M.L. பிரகாஷ் இந்த நூலை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது, முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதித்தேன்.

தேவதச்சனின் கலைக்கூடம்

ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.

மொழிபெயர்ப்பு கவிதைகள்

கேரா பென்ஸனின் படைப்புகள் நியூயார்க் டைம்ஸ், பாஸ்டன் ரிவ்யூ, பெஸ்ட் அமெரிக்கன் பொயட்ரி, ஃபென்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. சில கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். நியூயார்க், பென்ஸில்வேனியா போன்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதுடன் “சிறைக்கைதிகளுக்கு கவிதை” இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்

நந்தினி

திடீரென மரத்தின் இலை மறைவிலிருந்து சரசரவென இறங்கியது பெரிய குண்டு அணில். தரைக்கு வந்ததும் கும்பிடுவது போல முன்னங்கால்களை எம்பி உயர்த்திக்கொண்டு நின்றது. மூக்கை சிலிர்த்துக்கொண்டு மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. சீரியல் வளையங்களை அள்ளிக்கொண்டு உட்கார்ந்து தரைமீது கையை விரித்தபடி முகம் மலர்ந்து ”வா வா” என்றாள். சில நொடிகள் தயங்கி நின்று எதையோ உறுதிப்படுத்திக்கொண்டு விட்டது போல உடலை தாழ்த்தி அவளை நோக்கி தாவி ஓடி வந்தது அணில். வளையங்களை முன்னங்கால்களால் பொறுக்கி வாயில் வைத்து கவ்விக் கொண்டுபோய் மரம் தரையைத் தொடும் இடத்தில் வைத்தது. திரும்பி வந்து அவளுக்கு அருகில் சிதறிக்கிடந்த எல்லா வளையங்களையும் பொறுக்கிக்கொண்டு போய் மரத்துக்குக் கீழே வைத்தது. வளையங்களை வாய் நிறைய கவ்வி எடுத்துக்கொண்டு மரத்திலேறி இலைகளுக்குப்பின் காணமலாகியது.

உயிரின் கதை – 7

பூமியைப்போல பல கோடி நூறாயிரம் கோள்கள் நட்சத்திரக் குடும்பங்கள் நிறைந்த பிரபஞ்சப் பெருவெளியில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா? அல்லது பிரஞ்சத்தின் வேறோர் மூலையில் இன்னும் வேறு உயிரிகள் நம்மைப் போலவே கட்டுரை எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறார்களா? உங்கள் பகுதியில் பவர்கட் ஆன இரவொன்றில் வீட்டுக்குள் புழுங்காமல் மொட்டைமாடிக்குப்போய் வானத்தைப் பார்த்துக்கொண்டு இந்தக் கேள்வியை நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

உயிரின் கதை – 6

துணி வியாபாரம் செய்யும் ஆன்டன் வான் லீவன்ஹாக் (Anton Van Leeuwenhoek) என்ற டச்சுக்காரர் 1674-இல் ஒருநாள் படகில் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது கொண்டுவந்த தண்ணீரை, ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி எண்ணெய் விளக்கை ஒளி ஆதாரமாகக் கொண்டு தானே வடிவமைத்து உண்டாக்கிய நுண்ணோக்கியில் பார்த்து அதுவரை வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ’உயிரித்துணுக்குகள்’ (animalicule) என்று பெயரிட்டார்.

உயிரின் கதை – 5

நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, ”இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.

உயிரின் கதை – 4

கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?

உயிரின் கதை – 3

“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.

உயிரின் கதை – 2

உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே. பிறப்பிற்கு முன்னும், மரணத்திற்குப் பின்னும் உயிர் இருப்பதில்லை. இது நவீன அறிவியல் தரும் விளக்கம்.

உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?

மனம் என்றால் என்ன, என்ற கேள்வியைப் போன்றதே உயிர் என்றால் என்ன என்ற கேள்வியும். அறிவியல் தத்துவம் இரண்டிலும் ஆழ்ந்து சென்று அடைய வேண்டியவை. அல்லாமல் அனைவருக்குமான பொது வெளியில் சிறு விவாதத்தின் வழி கிடைக்கும் இக்கட்டுரை ஒரு எளிய சித்திரம் மட்டுமே என்பதை கவனமாக நினைவில் கொள்வோம். ஒரு எளிய தத்துவப் பயிற்சியாக ஜாலியாக மூளையைக் கசக்காமல் யோசித்துப் பார்க்கலாம். உயிர் என்றால் என்ன?