தமிழ் நாவலின் விரியும் எல்லைகள்

ஆவணப்படுத்துதல் நாகரிக வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம்.  சினம், வன்மம், வீரம் முதலியவை மனித வரலாற்றில் தேவையான அளவு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. பகைவரை வெற்றி கொள்வதற்கான கருவிகளாக இவை கருதப்பட்டன. இதற்கு மாறாக  ஒத்துழையாமையைக் கருவியாகக் கொண்டு பகைவரை வென்றெடுக்கும் முறையை மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த  மெய் காக்கும் போராட்டம் என்னும் இந்த ஒத்துழையாமைத் தத்துவப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தன் சொந்த அனுபவமாக அமைத்து மூன்று பாகங்களாக சி.சு.செல்லப்பா எழுதிய  சுதந்திர தாகம் (1997) நாவல் ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் புதியதொரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல்

‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக்கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும் என்பதுதான்.

யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி

தனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்) வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். ….பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடைசெய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந்தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார்.

வெறுமையில் பூக்கும் கலை

இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள்.