அவருடைய கச்சேரி அமைக்கப்படும் விதம் எல்லோரையும் கவர்வது. கச்சேரிக்கு முன்னால் கச்சேரி நடைபெறப் போகும் சூழலைக் கருத்தில் கொண்டு பாடல் தேர்வு செய்யப் படுகிறது. பாடலுக்கேற்ப பேஹாக், கமாஜ், காபி, மேக், யமன் போன்ற ராகங்களில் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுப்பார். அந்த பாடலின் உணர்வுக்கு ஏற்ப ஒப்புமையுடைய மற்ற கவிதைகளின் வரிகளையும் சேர்த்துக் கொண்டு பாடும் தன்மையால் கேட்பவர் உணர்வை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல அதுவும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
