நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.
Tag: வெங்கட் சு.
தன்னறம்
அவ்வாகனங்கள் மறையும் இடத்திலிருந்த மரத்தடியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் “உதவி” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடல் பருத்து தலைமயிர்கள் கலைந்து அவள் தோளிலிருந்த ஒரு கனமான பை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவளுக்குப் பின்புறம் ஒரு சிறு பெண் மர நிழலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை மடியில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என் முன்னால் நின்றிருந்த ஒரு கனரக வாகனத்திலிருந்து சட்டென வெளியேறிய கண்ணுக்குத் தெரியாத வெப்ப புகை ஏற்படுத்திய கானல் நீரில் அவர்கள் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்திற்குச் செல்வதுபோல இருந்தது. முன்னால் இருந்த அனைத்து வாகனங்களும் நகர நானும் முன்னகர்ந்து விரைந்தேன். எனக்குள் அவர்கள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருந்தார்கள்.
விடுதலை
அவன் சட்டென என்னிடம், “இங்கிலிஷ் சொல்லிக்கொடு” எனக் கேட்டான்.
நான் சற்றுத் தடுமாறி அவன் சொல்வதை மீண்டும் நினைவுபடுத்தி, “என்ன?” எனத் திருப்பிக் கேட்டேன். பின்பு ஏன் அவ்வாறு கேட்டோம் என நினைத்துக்கொண்டேன்.
அவன் மீண்டும், “இங்கிலீஷ். பேசணும்” என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டான். அப்படி அவன் கேட்டபொழுது, அத்தனை பற்களும் தெரியச் சிரிப்பும், கூச்சமும், வெட்கமும் தெரிந்தது.
