அயல் மகரந்தம்

உலகம் சுருங்கி தகவல் பெருகிவிட்ட இன்றைய சூழலில் தமிழிலும் உலகளாவிய கதைகளை சொல்ல தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட கதைகளை சொல்வதற்கான அற்புதமான சூழல் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்த்திருக்கிறது.அப்படிபட்ட கதைகளங்களை எழுத கிரியின் இந்த தொகுப்பு புலம் பெயர் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என கொள்ளலாம்.

வடிவாய் நின் வலமார்பினில்

அத்தையும் மாமாவும், அம்மா அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்க நரேன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் உற்சவர் வருகிறாரா என மாடவீதியில் ஒரு கண்ணும், இன்னும் என்னையே பார்த்து கொண்டிருந்த நரேனின் மேல் ஒரு கண்ணுமாய் இருந்தேன். கோலாட்டமும், பஜனைக் குழுக்களும், வேத வரிசைகளும்தான் வந்துகொண்டிருந்தன. அவன் என்னையே இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தது போலவும் இருந்தது, பிடிக்காதது போலவும் இருந்தது.

‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து

கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர் கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன…

மகிமை

இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

எண்ணிய எண்ணியாங்கு

கதிரும் சிரித்துக் கொண்டே கேப்டனைப் பார்த்து ” மாமா, நான் தொட்டேனு எனக்கு தெரியும், அங்க நின்னு ஆடி ஜெயிச்சாலும் தோக்கறத விட மோசமா பீல் பண்ணி இருப்பேன், உடு முப்பது ரன் தானே ,சதிசு தட்டிருவான், நிறைய ஓவர்ஸ் இருக்கு”.

கேப்டன் எரிச்சலுடன் ” வந்து சேர்றிங்க பார்றா எனக்குன்னு, டேய் வளத்தி ஒரு தம் குடு ” என்றான் சுரேசை பார்த்து.

மூன்று சிகரங்கள்

ஏழு பேர் போவதாக முடிவாகியிருந்தது, அதில் ஐந்து பேருடன் நான் ஏற்கனவே ஒரு முறை ஸ்னோடோன் மலை மட்டும் ஏறி இருக்கிறேன். அவர்கள் வேகத்திற்கு முடியாவிட்டாலும் பெரிதாக சிரமபடாமல் மலையேறி முடித்திருந்தேன். நண்பர் பேச பேச லேசாக ஆசை துளிர்த்தது. இம்முறை வேரோரு நண்பர் வண்டி ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளதால் நான் ஓட்ட வேண்டி இருக்காது, அதுவும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. இந்நண்பர் குழாமோடு பயணம் செய்வது எனக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் இனிய அனுபவமாகவே இருந்துள்ளது, அது இன்னோரு பெரிய உந்துதல் . அரை மணி நேரத்தில் “மூணு மலதான ,ஏறிறுவோம்” என்று சொல்லும் அளவுக்கு தயார்ஆகிவிட்டேன்.

இறைவனின் இருப்பிடம்

சுன்னி பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் பெண்களுக்கு கண்டிப்பாக நிறைய சுதந்திரம் இருக்கிறது. தெருக்களில் சிறுமிகள் சிறுவர்களோடு சேர்ந்து கால் பந்தாடிக்கொண்டிருப்பதை சாதாரணமாக காணலாம். ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் மார்பை மறைத்து போடப்படும் துப்பட்டா கணிசமான பெண்கள் அணிந்திருந்தனர். பர்தா எண்ணிக்கையில் மிக மிக குறைவு . பள்ளி கல்லூரிகள் கணிசமானவை இரு பாலர் கல்வி நிலையங்கள். எங்கள் விடுதிக்கு முன் இருந்த மருத்துவ கல்லூரி பேருந்து நிலையத்தில் நம்மூரை மிஞ்சும் அளவுக்கு கடலை வறுபட்டு கொண்டிருந்தது. பெண்கள் கார், ஸ்கூட்டர் என பல ரக வாகனங்களில் தனியாக பயணிக்கின்றனர். நான் பார்த்த வரையில் எல்லா விதமான வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவது போல்தான் தெரிகிறது.