மெயில் படிக்க ஆரம்பித்தான். “உங்களுடைய அனுபவமும், திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. உங்களை போன்ற ஒருவரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு வேலை அளிப்பதில் நாங்கள் பேரு மகிழ்ச்சியடைகிறோம்.” அவனுக்குளிருந்து ஆனந்தம் வெளியே சிரிப்பாக பொங்கி வந்தது. மனதில் என்றும் அவன் அனுபவிக்காத மகிழ்ச்சியொன்று பரவியது. வாழ்கையில் ஜெயித்துவிட்டோம். இனி எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம். நமக்கும் திறமை இருக்கிறது. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்தான். இனி வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான். இவர்கள் தேடுவார்கள். தேடட்டும்.
Author: எஸ்.சுரேஷ்
எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்
ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்?
கயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர்
கயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி.
மிருத்யுஞ்சய்
‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் “மிருத்யுஞ்சய்”
தீதின் உணவுச் சங்கிலி: ஒடிய மொழிப் புத்தக அறிமுகம்
நாவலின் ஆழம் அதன் கூறுமொழியால் வருவது. கதைசொல்லி எல்லாம் தெரிந்தவர். நடப்பது அத்தனையையும் ஒவ்வொரு காட்சியாக தன் கருத்துக்களோடு விவரிக்கிறார். ஆனால் என்ன நடக்கிறதோ, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பட்டுக்கொள்ளாமல் கதை சொல்கிறார். இது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பது ஒன்று என்றால், இந்த நடுநிலைமை நம்மை உறுத்தவும் செய்கிறது. கதைசொல்லியின் நகைமுரண் பார்வையும் கச்சிதமான நகைச்சுவை கூடிய அவரது கருத்துக்களும் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அபத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பருவம் – எஸ்.எல்.பைரப்பா
துரியோதனன் தர்மம் குறித்து ஒரு முக்கியமான கேள்வி எழுப்புகிறான், அதுதான் பாரதப் போரின் மையத்தில் உள்ள கேள்வியாகவும் இருக்கிறது: “பாண்டவர்கள் எப்படி குரு வம்சத்தினராக முடியும்? நியோக முறைப்படி குந்திக்குப் பிறந்த அவர்கள் பாண்டுவுக்குப் பிறந்தவர்களல்ல”. நியோகம் என்பது பிள்ளைப் பேற்றை நோக்கமாய்க் கொண்டு கணவன் அனுமதியுடன் வேற்று மனிதனுடன் உடலுறவு கொண்டு கருத்தரித்தல். பாண்டு ஆண்மையற்றவன் என்பதால் தேவ குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஆண்களுடன் நியோகம் பயிலும்படி பாண்டு குந்தியிடம் கேட்டுக் கொள்கிறான். அந்நாளைய பண்டிதர்கள் நியோக முறைப்படி வம்ச விருத்தி செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் துரியோதனன் இப்போது அதைக் கேள்விக்குட்படுத்தி, நிராகரிக்கிறான். இது குந்தியை கள்ள உறவு பூண்ட நிலைக்குச் செலுத்துகிறது.
எம்எஸ்வி: விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு
எம்எஸ்வி இசை பற்றி பேசுமுன், தமிழ் திரையிசையின் வளர்ச்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தி விட்டுச் சென்ற தாக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழ் திரையிசையை கர்நாடக சங்கீதத்தின் பிடியிலிருந்து விடுவித்து நவீனப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதை ஏற்கனவே பேசிவிட்டோம். அதையடுத்து இரண்டாவது முக்கியமான விஷயம், 1961-65 வரையான ஐந்து ஆண்டுகளின் இசை என்பதே இவர்களின் இசை என்று சொல்லுமளவு ஆதிக்கம் செலுத்தியவர்கள் இவர்கள் என்பதுதான். இந்தப் பாடல்களில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
எம்எஸ்வி இசையும் காலமும் – 3
இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை”யின் ஆண்டு. இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல், மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்ட பாடலும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல்கள்- அனைத்தும் இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்ந்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-பைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்து வருகிறது.
எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2
இந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம்? விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம்.
எம்எஸ்வி – 1 இசையும் காலமும்
ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்வியல் இசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும். விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.
ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்
ஒரு முறை நான் என் ஸ்டாஃப்பிங் மானேஜரிடம், ஏன் கிளையண்டுகள் அதிகரிப்பதில்லை என்று கேட்டேன். “கிளையண்ட் மட்டன் பிரியாணி கேட்கிறார், நாம் வெண்பொங்கல் தருகிறோம்,” என்றார் அவர். இந்த ஆல்பத்தின் வெண்பொங்கல் “பிட்லி” பாடல்தான். பொறுப்பில்லாத சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் முன்வரிசையில் உட்காரும் படிப்பாளி. இதில் ராஜாவின் முத்திரைகள் பல இருக்கின்றன, எனவே இதை ரசிப்பதில் பிரச்சினை இல்லை. அமிதாப் பாடியுள்ளவற்றில் மிகச் சிறந்த பாடல்கள் என்ற பட்டியலில் இது நிச்சயம் இடம் பெரும், அவரும் ஓரளவு பரவாயில்லையாகத்தான் பாடியிருக்கிறார்.
கச்சேரி
சில நாட்கள் கழித்து சரண்யா அந்த புது ஐட்டத்தை வீட்டில் பாடிக் காண்பித்தாள். காவடிச்சிந்து போல இருந்தது. ஒவ்வொரு சரணமும் வேறு வேறு ராகம், வேறு நடை. கடைசியில் கண்ட நடையில் உச்சச்தாயியில் ‘தக தகிட, தக தகிட, தக தகிட’ என்று ஜதியை நான்கு முறை சொல்லி ஆவேசமாக முடித்தாள் சரண்யா. வீட்டுக்கு வந்திருந்த ஏ.கே மற்றும் இதர சிஷ்யகோடிகள் பலமாக கைத்தட்டினார்கள். ரொம்ப catchyஆக இருந்தது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல். பாட்டி மட்டும், “என்ன கண்றாவிடீ இது?” என்று கேட்டாள்.
“நீ எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிப்ப!” என்றாள் சரண்யா.
“யார் பாட்டுடீ இது? இவ்வளவு இரைச்சலா இருக்கு?”
ஏ.கே. பதில் சொன்னான், “மாமாவோட மச்சினர் பண்ண பாட்டு. கர்நாடக இசையும் பரதத்தையும் கலந்து குடுத்திருக்கார்”
“என்ன எழவோ. இதையெல்லாம் யாரவது கேப்பாளா?”
சிதம்பர ரகசியம் – பூர்ணசந்திர தேஜஸ்வி
தேஜஸ்வியின் கத்தி மிகக் கூர்மையானது. சாதி சமயம் பார்க்காமல் அது அனைவரையும் கண்டதுண்டமாக்குகிறது. மூடத்தனம், பேராசை, மடமை போன்ற நற்குணங்கள் உலகளாவியவை. தன் சாதியின் வசதிகளையும் சமயப் பிரிவினைகளையும் பயன்படுத்திக் கொண்டு லம்பாடி பெண்களைச் சுகிக்க விரும்பும் வேசையாக இருக்கும் பிராமணன்; அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சட்டத்துக்குப் புறம்பாக காட்டு மரங்களை வெட்டும் இசுலாமியனான சுலைமான் பேரி, பணித்திறமையற்ற கல்லூரி முதலாளி; ஒரு நாவலாசிரியனிடம் மர்மக்கதை எழுதச் சொல்லி கொலைக் குற்றவாளியைத் துப்பறியும் அபத்த உளவாளி அங்காடி; திருடும் லம்பாடிகள்; சாதி அமைப்பைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலித்துகள் – தேஜஸ்வி யாரையும் விட்டுவைப்பதில்லை.
ஸ்பிதிக்கு ஒரு பயணம் – பகுதி 2
எங்கு நோக்கினும், திசைகள் அனைத்திலும், மலைத்தொடர்கள் உயர்ந்து தாழ்ந்தும் விண்கரையில் அலையாடுகின்றன. மரம் ஏதும் இல்லாத வெற்றுப் பரப்பாய் விரியும் மலைகள், எங்களைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நீள்கின்றன, சூரியனின் கதிர்கள் அனலாய்த் தாக்க அவை ஒளிர்கின்றன, தகிக்கின்றன. இமயவரம்பென்றால் இதுதான் – மலைகளுக்கு அப்பால் மலைகள், அவற்றுக்கப்பால் வேறு மலைகள் – தொலைவில் ஒளிரும் தொடுவானில் மலைச் சிகரங்கள் ஒன்றி மறைகின்றன.
ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1
எங்களைக் கீழே இறங்கி வரச் சொல்கிறான். சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் நான் அவனருகே போய் நிற்கிறேன். “பொய் சொல்லக்கூடாது. உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும். பார்க்க முடியவில்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். பார்த்தால் மட்டும்தான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்,” என்கிறான். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. வெகுதொலைவில் தெரியும் பனி போர்த்த சிகரங்களைக் காட்டி. “நடுவில் உள்ள மலையைப் பார்த்தீர்களா? அதன் உச்சியைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். என்ன தெரிகிறது?” நான் உற்றுப் பார்க்கிறேன், எதுவும் பிடிபடுவதாயில்லை. “வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை,” என்கிறேன். “நடுவில் உள்ள மலையின் உச்சியை கவனமாகப் பாருங்கள்,” என்று மீண்டும் வலியுறுத்துகிறான் அமித். இப்போது மறுபடியும் அந்த மலையைப் பார்க்கிறேன், இப்போதுதான் ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது…
வன்மம்
“பழசெல்லாம் மறக்க முடியுமா பாய்? பழசெல்லாம் மறைக்க முடியுமா பாய்? கடந்த காலத்தை அழிக்க முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஆதங்கம் இருந்தது.
“முடியாது” என்று வெங்கடேஷ் உரக்க சொன்னான். “நாம்ப என்ன பண்றமோ அதுக்கு அனுபவிச்சே ஆகணும்”
தாபசாந்தி – எம் டி வாசுதேவன் நாயரின் வாராணசி
வாராணசி: முரணுரைகளின் நகரம்: எந்நேரமும் சிதையில் பிரேதங்கள் புகையும் நகரம், அமைதியை மனிதர் அறியும் நகரம்: மாண்ட மிருகங்கள் மிதந்து செல்லும் கங்கை நதி, அனைவரின் பாபங்களையும் கரைக்கும் கங்கா ஜலம்: காமமும் மரணமும் அருகிருக்கும் நகரம். நீண்ட காலத்துக்குப்பின் இந்த நகருக்குத் திரும்புகிறான் சுதாகரன். ஒரு காலத்தில் தன் நண்பனாகவும் ஆசானாகவும் இருந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் அழைப்பை ஏற்று வாரணாசி வந்தடையும் சுதாகரனுக்கு இப்போது வயது 60.. இந்தப் பயணம் சுதாகரனின் கடந்த காலத்துக்குச் செல்லும் பயணம், அதன் தாக்கங்கள் அவனது நிகழ்காலத்தை பாதித்திருப்பதை உணரும் அறிவுப் பயணம்.
செகந்திராபாதிலிருந்து
கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தேவைப்பட்ட கதைக்களத்தை உருவாக்கினார். அவர் மனிதர்களை விவரித்ததில் ஒரு மெய்ம்மை இருந்தது. எப்படியோ அவரால் மனிதர்களை மறைக்கும் அரசியல், சமூக, சமயப் பூச்சுகளை நீக்கி அவர்களை சாமானியர்களாகக் காட்ட முடிந்தது. அது ஒரு தமிழ் பிராமணர் மனைவியாக இருந்தாலும் சரி, திரைப்படங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா, தொழிலில் திண்டாடும் முஸ்லிம் பிசினஸ்மேன், ரப்பர் ட்யூபைச் செருப்பாகப் போட்டுக் கொண்டு சாலைப்பணி செய்யும் தொழிலாளி என்று யாராகவும் இருக்கட்டும், அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. புற அடையாளங்களை நீக்கி மனிதர்களின் அடிப்படை மானுடத்தை வெளிப்படுத்தினார் அசோகமித்திரன்.
ராகவேந்திர பாடீலின் "தேரு"
நம்பிக்கை, சடங்குகள், தொன்மம் முதலான கேள்விகளுடன் கிராமம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளையும் நாவலினூடே விவரிக்கிறார் பாட்டில். இவற்றுக்குள் மிக ஆழச் செல்லும் தேவையைத் தவிர்த்து மிக புத்திசாலித்தனமாக அவர் இந்த பிரச்சினைகளை கவனப்படுத்துகிறார். சோமப்பாவின் பாத்திரத்தைக் கொண்டு கிராம வாழ்வின் பன்முகத் தன்மையையும் எப்போதுமிருக்கும் சமய வேறுபாடுகளையும் இந்நாவலில் விவரித்திருக்கிறார். சோமப்பா ஒரு ஜைனராக இருந்தாலும்கூட அவர் விட்டலனை நம்புகிறார், தேரோட்டம் துவங்கும்போது விழாக் கொண்டாட்டங்களில் எப்போதும் அவர் முன்னிற்கிறார்.
வம்ச விருக்ஷா – எஸ் எல் பைரப்பா
சிந்தனைகளின் மோதல்’ என்றுகூட இப்புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாச ஷ்ரோதிரி, சதாசிவ ராவ், காத்யாயனி என்ற மூன்று மையப் பாத்திரங்களைக் கொண்டு இந்த மோதலை நாவல் உருவாக்குகிறது. ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரி பீஷ்ம பிதாமகர் போன்ற ஒரு பாத்திரம். தன்னைச் சுற்றிலும் துன்பகரமான நிகழ்வுகள் அரங்கேறக் கண்டும் கலங்காமல் சமநிலை காக்கும் மனத்தெளிவு அடைந்த ஆதர்ச பாத்திரம் இவர். சாஸ்திரங்கள் பயின்ற, மிகவும் மதிக்கப்படும் சம்ஸ்கிருத பண்டிதர், இந்து மரபில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு வாழப்பட வேண்டியதே வாழ்க்கை என்று அவர் நம்புகிறார்.
தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ
உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.
ராக் தர்பாரி
வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.
அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்
மிருணாள் சென்னின் படைப்புகள் திரையிடப்படமுடியாமல் போனதையடுத்து, பல கண்டனக்குரல்கள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசு கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருக்கும் முக்கியமான இந்தியத் திரைப்படங்களை மீட்கும் ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்டுவரும் பல திரைப்படங்களில் மிருணாள் சென்னின் திரைப்படங்களும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஒன்றான “கண்டர்” திரைப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’
1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விசித்திரமான வழக்கம் இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட எல்லோரின் தண்டனையையும் மகாராஜா ரத்து செய்துவிடுவார். அனால் அந்த செய்தி வரும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். மகாராஜா மரணதண்டனையை ரத்து செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப்போல, அந்த பத்திரம் வரும் முன் குற்றவாளியைத் தூக்கில் ஏற்றி விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே நடத்தப்படும் நாடகம் இது.
ஹிந்தித் திரையிசையில் கஸல்
கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்த பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.) இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரைசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.
மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம்
கடக் படங்கள் சமூகத்தின் அன்றைய நிலை பற்றியும், அகதிகளின் நிலை பற்றியும், அன்றைய குடும்பங்களின் நிலையை பற்றியும், இந்த சூழலில் தனிமனிதன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால்களை பற்றியும் பேசின. எந்த சமரசமின்றியும் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவர் படங்கள் யதார்த்தவாத படங்கள் என்று சொல்லலாம். இவர் எல்லா படங்களிலும் இசையை வெகு நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். வெகு அருமையான ஹிந்துஸ்தானி மரபிசை பாடல்களும், ரபீந்திர சங்கீத் பாடல்களும், வங்க கிராமிய இசை பாடகளும் இவர் படங்களில் நமக்குக் கேட்க கிடைக்கும்.
முக்தாம்மாவுடன் ஒரு மணி நேரம்
2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.
‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்
பெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. 91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் படித்துப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம்.
தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்
தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களை தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.
கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்
மேற்கத்திய இசையின் பல கூறுகளை இசையமைப்பாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றைத் திரையிசையில் புகுத்துவது வழக்கமானது. இக்காலகட்டத்தில்தான் கே.வி.மகாதேவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக இசையின் ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசைச் சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகும் வகையில் அவர் பாடல்கள் அமைக்க ஆரம்பித்தார்.