ஜூரிச் (Zurich) பல்கலையில் சேர்ந்த பிறகு, இயற்பியல் கல்வியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1905ம் ஆண்டில்,அக்காலத்தின் முதன்மையான அறிவியல் இதழான Annalen der Physikக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார். அந்த ஒவ்வொரு கட்டுரையும் நோபல் பரிசு பெறும் தகுதி கொண்டது. முதல் கட்டுரை பொருட்களில் அணுக்கள் இருப்பதை உறுதியாக விளக்கியது.
Category: இதழ்
கதவு
” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.
பாழ் நிலப் படுவம்
தீவு கப்பல் விமானம் விசைப்படகு
சொகுசு வாகனம் வணிக வளாகம்
மருத்துவப் பொறியியல் கலைக் கல்லூரி
மருத்துவமனை வணிக வளாகம் சாராய ஆலை
மாளிகை நட்சத்திர விடுதி மலைத்தோட்டம்
கடலலைகள் கால் தழுவும் பங்களா
சினிமா கொட்டகை காடுகள் தோட்டம் துரவு
எட்டு கவிதைகள்
மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?
சண்டிகா
என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்
மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8
90 -களில், லோடஸ் என்ற நிறுவனம் நோட்ஸ் (Lotus Notes) என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இந்த மென்பொருளை நிறுவி நான் வேலை செய்த நிறுவனத்தில் பயனர்களிடம் போராடிய தருணங்கள் இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில், மிகவும் நொந்து போகும் ஒரு விஷயமாக இருந்தது. இந்த நோட்ஸ் மென்பொருளில், ஒத்துழைப்பு மற்றும் மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் அடக்கம்.
தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்
நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன்
அதிரியன் நினைவுகள் -26
மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன்.
வாள்போல் வைகறை
ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது.
சிவிங்கி – அத்தியாயம் நான்கு
எல்லாப் போர்களும் நிகழ்ந்ததாகக் கருதப்பட்டன. ஒரு துப்பாக்கி வெடித்துக்கூட சம்பவம் ஆனதில்லை எதுவும். ஏதேதோ காரணம் காட்டி நடந்ததாகக் கருதப்படும் யுத்தங்கள் அவை. யுத்தம் எதையும் பிரபஞ்சம் இனித் தாங்காது. ஏழு இரவு, ஏழு தினம் வானத்தைப் பார்த்து விளையாட்டுத் துப்பாக்கி சுட்டு நடைபெற்ற சமர் இவற்றில் முக்கியமானது. அரசு இரண்டாகப் பிரிந்து இரு வகுப்புக்கும் நிதி உதவி செய்து நிகழ்த்திய வீடியோ விளையாட்டுப் போர் இது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவமாகும்.
காணாமல் போன ஐந்து நாட்கள்
பால்கனி தொட்டிச் செடியில்
புதிதாய் டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி
லாவண்டர்
லாவண்டர் தீக்காயங்களை ஆற்றும், நல்ல உறக்கம் வரவழைக்கும் படபடப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல அமைதியை அளிக்கும். தசை பிடிப்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கும் லாவண்டர் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். லாவண்டர் உண்ணத்தக்கதும் கூட
தொட்டால் பூ மலரும்
ப்ரோஸ்தெடிக் கரங்கள் அல்லது ரோபோடிக் கரங்களின் பரப்பில் இந்த உணரிகள் இடம் பெறும்போது, அவை இலாகவமான, தொட்டுணரும் தன்மையைக் கொடுக்கின்றன. இந்த உணரிகள் இடம் பெறும் தோலினால் அமையும் ரோபோக்கள், முட்டையை உடைத்தல், சிறு பழத் துண்டுகளை எடுத்துச் சுவைத்தல் போன்ற சின்னஞ்சிறு செயல்களுக்கும் உதவும். மனிதத் தோலைப் போலவே இந்த உணரியும் மிருதுவாக இருப்பதால், மனிதர்களுடன் செயல்படும்போது ஆபத்து விளைவிக்காமலும், மென்மையாகவும் மனித வாழ்க்கைக்கு ஒத்துப் போகிறது.
சிவிங்கி – அத்தியாயம் மூன்று
அழுக்கான ஈரச் சிறகுகளை உடம்போடு உயர்த்தி மடித்துச் செருகிச் வழுவழுப்பான கால்கள் வெளித்தெரிய இரண்டு தேவதைகள் கிணறுகளைச் சுற்றித் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஈரவாடையோடு அங்கங்கே நகம் உதிர்ப்பது போல் சிறு சிறகு உதிர்த்துக் களைந்தபடி கண்ணில் மையிட்ட அத்தேவதைகள் வாய்ச் சண்டையிட்டுக் கிணறுகளை சுற்றிப் பறந்தபடி
ஜகன்னாத பண்டித ராஜா -3
இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;
நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு
மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது.
அதிரியன் நினைவுகள் -25
இத்தகைய தருணத்தில் ஒழுக்கவாதிகளுக்கு என்னை வெற்றிகொள்ள ஓர் எளிதான வாய்ப்பு கிடைத்தது. நான் படும் இன்னல்களுக்கு, என்னுடைய மிதமிஞ்சியபோக்கும், நெறிமுறைகளில் நான் இழைத்த தவறுகளும் காரணம் என்பது என்னை விமர்சிக்கும் மனிதர்களின் குற்றசாட்டு. ஆனால் எனக்கோ நெறிமுறைகளில்தவறுதல், மிதமிஞ்சியபோக்கு என்பதெல்லாம் கடினமான விஷயங்கள், அத்தகைய சிரம்ங்கள், அவர்கள் கருத்திற்கு முரண்படும் விஷயத்திலும் இருந்தன. எனது குற்றத்தை, அப்படியொன்று உண்டெனில், கூடுதல் குறைவின்றி திரும்ப பரிசீலிக்க விருப்பம். இக்காலத்தில், தற்கொலை என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம், அதிலும் இருபது வயதில் இறப்பது பரவலாக நிகழ்கிறது.
கடன்காரன்
எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.
காலத்தைக் கைப்பிடித்து கண் விழிக்கும் புதைநிலம்
என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை
வாலு போச்சி கத்தி வந்தது
சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான். அவன் சொல்வதுதான் கணக்கு. எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான்.
காத்திருப்பின் கனல்
இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.
வலிவிடு தூது
இப்பாடலில் சில சொற்கள் இரட்டுற மொழிதலாகப் (சிலேடையாக) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, えやはいぶき என்ற சொல்லின் இறுதியில் வரும் いぶき என்பதற்கு இயூபெக்கி – சொல்ல வேண்டியது என்றும் இபுக்கி – மலையின் பெயர் என்றும் இருபொருள் கொள்ளலாம். சஷிமொ என்ற சொல் மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் இருவேறு பொருள்களில் பயின்று வந்துள்ளது.
வேணு தயாநிதி கவிதைகள்
குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு
புயலாகி
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்
தீர்த்தம்
எல்லா திசைகளிலும் தேடி அலைந்தவளுக்கு இன்னும் கீழத்தெரு மட்டும் பாக்கியிருந்தது.நேற்று தேடிவிட்டு வரும் வழியில் வாரியூர் வெற்றிலைக் குறிகாரரை பார்த்துவிட்டு வந்தாள்.’ஒன்னோட மாடு இந்நேரம் வண்டியேத்தி அறுப்புக் கடைக்கு போயிருக்கும்’ என மை தடவி கை விரித்த குறிகாரரின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.கல்யாணிக்கு இரண்டு நாட்களாக சரியான உறக்கமில்லை
என்னுடைய கடவுள் – கவிதைகள்
பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி
நகரமா? நரகமா?
2022 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 110,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்திற்கு வந்துள்ளவர்களை எதிர்கொள்வதில் அல்லோலப்படுகிறது ‘பிக் ஆப்பிள்’ நகரம். தங்கும் இடமின்றி தவிப்பவர்களுக்கு அரசு இல்லங்களில் இரவு நேரத்தில் மட்டும் தங்கிச்செல்ல படுக்கைகளைக் கொடுக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை மாநில அரசிற்கு உள்ளது. ஆனால் அதிகளவில் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது
தெய்வநல்லூர் கதைகள் -12
உள் பிரகார சுற்றுப் பாதை கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பில் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி) சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.
காமரூபம்
படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7
மேலே சொன்ன விவரத்தை, வழக்கு தமிழில் நாம் எப்படிச் சொல்கிறோம்? “20,000 வரை தள்ளுபடி இல்லை, 60,000 வரை 2%, 100,000 வரை 5%, அதுக்கு மேல 8%”. இந்த விஷயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் சொன்னால் புரியும், ஆனால், கணினிக்கு, மிகவும் துல்லியமற்ற ஒரு கட்டளை. ஆனால், ஒரு அனலிஸ்ட் கேட்டால், பயனாளர், இவ்வாறுதான் சொல்லுவார். அதை ஒரு பயனுள்ள சட்டமாக கணினி மென்பொருளுக்கு மாற்றுவது ஒரு அனலிஸ்டின் கடமை.
லாவண்யா கவிதைகள்
ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல
சிவிங்கி – அத்தியாயம் இரண்டு
பாரவிப் பெண்கள் அவ்வப்போது மீள் உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி முடித்து மறுபடி பொம்மையாகிற, ’பகுதி உயிர்’களாகும். அவற்றோடு கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும் நினைவகத்தில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது அத்தகவலும் அழிக்கப்படும்.
ஜகன்னாத பண்டித ராஜா -2
இளம் மனைவியுடன் கருத்தொருமித்து வாழும் / வாழ்ந்த ஒருவனின் நினைவலைகளாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்தக் கவிதைகள். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது நமது சங்கக் கவிதைகளான அகநானூறு, எட்டுத்தொகை நூல்களின் சாயல் மிகுதியாகத் தெரிகின்றது. ஊடலும் கூடலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பிரிவின் வாட்டம் கனலெனச் சுடுகின்றது
சரண் நாங்களே
உண்மைதான். எப்போதும் நாங்கள் அடிக்கிற மாதிரி அடிப்போம், அவன் அழுகிற மாதிரி அழுவான். எந்த நெறிமீறலுக்கும் இதே சூத்திரம்தான். எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். அப்படி ஒரு பிம்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சுமைதான். தந்தையரிடம் பிள்ளைகளால் வெளிப்படையாக பேசவே முடிவதில்லை.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
அடுத்து ஹொன்னாவரில் இந்த சாக்கடை அடைப்பை சீர்செய்ய இருபதாயிரம் வராகன் செலவுக்கு வழி செய்வது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்ற பிரச்சனைகள் நீ சொன்னவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சரி செய்ய முயல்கிறேன். ஆனால், ஒன்று நீ கவனிக்க வேண்டும்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6
உங்களது உண்மையான நோக்கம். எதற்காக இந்த மென்பொருள் அமைப்பை உருவாக்குகிறீர்கள்? எதற்காக, இத்தனை செலவழிக்கிறிர்கள்? ஒரு டாக்டரிடம் உடல்நிலையைப் பற்றி சொல்வதைப் போல என்னிடம் உங்களது உள்நோக்கத்தைச் சொன்னால், என்னால், உங்களுக்குப் பயன்படும் ஒரு ஸிஸ்டத்தை உருவாக்க முடியும்.
கப்பை – கதையை முன்வைத்து…
மார்த்தாண்டத்துக்காரி தன்னுடைய இன்ஸடா பக்கத்துக்கு ஸ்டைலிஷ் சோல் எனப் பெயரிட்டு ஒரு மாய உலகை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு ஹார்டினும், லைக்கும், கிஸ்ஸும் அளிப்பவர்கள் அவளது / அவனது உசிரு. அதற்கு வெளியே இருக்கும் உலகம் அவர்களை பொறுத்தவரை பொய்யான ஓர் உலகம் மட்டுமல்ல, அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு மாய உலகம். அங்கு தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், உதாசீனங்களுக்கும் மாற்று இல்லை என நினைக்கிறார்கள்.
உபநதிகள் – பதினேழு
கடைசியாக, முந்தைய தினம் அவளுடைய ட்யுக் ப்ராஜெக்ட் அறிக்கைக்கு எதிரான ராஜ் வாரனின் அபிப்ராயம். ‘இலக்கண ஆங்கிலத்தைத் தவிர வேறொரு திறமையும் இல்லாத, ‘டாம்ப்ராம்’ மானஸா’ என்ற தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டில் இதழியல் உயர்பட்டம் வாங்கிய ஒருவனுக்கு பல தகவல்ளைச் சேர்த்து கோர்வையாக எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை, அதன் பொருள் பிடிக்காவிட்டாலும், ரசிக்கத் தெரியாதா?
அதிரியன் நினைவுகள் – 24
இக்காட்சியை குறைத்து மதிப்பிடாமலிருக்கக் கடுமையாகப் போராடினேன். இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறபோது அந்நினைவு எத்தனை வலிமையானது என்பதை உணர்கிறேன். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் மிகவும் நேர்மையான மனிதன் நான், எனவே இம் மகிழ்ச்சிக்கான ரகசிய காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: மனதின் செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த அமைதி, அன்பின் மிக அழகான விளைவுகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது
நாஞ்சில் நாடன் கவிதைகள்
பெண் மக்கள் பேறற்ற
அமைச்சரை நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினரை
எண்ணி இரங்குவீர் எம்மனாரே
ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
னித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை என்று பார்த்தோம். அதேபோன்ற கருத்தை உடைய பாடல் இது. ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் தனிமையின் குறியீடு என்பதைக் கண்டோம். இப்பாடலில் இலையுதிர்காலம் வந்தது என்பதைத் தனிமை சூழ்ந்தது என்னும் பொருளிலும் பொருத்திப் பார்க்கலாம்.
படையல்
வயக்காடு போதைடா.. சேத்துல கால் வைக்காத வரைக்கும் தான் தயக்கமெல்லாம்.. காட்டுல இறங்கி ரெண்டொரு நாள் வேல செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் இந்த ருசியே பழகிடும். லாபமோ நட்டமோ செடி பயிரு மரம் மட்டை காக்கா குருவி மாடுனு இதுங்ககூடவே வாழ்ந்துடலாம்னு தோணும். அதான் அவனுங்கள காட்டுல அண்டவே விடுறது இல்ல. என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இந்த சேறு படிஞ்ச கோவணம் தானே எல்லாத்துக்கும் முதலு..
மொழியும் மண்ணும்
அவனுக்கு அனைத்துமே மிகப் பெரிதெனத் தோன்றியது.
அவன் அன்னையின் மார்பு,
எருது வெளியிடும் வெப்ப மூச்சு,
மூன்று சிறந்த ஞானிகளான கேஸ்பர், பால்தாஸர், மெல்கியர், ஆகியோர்
சிறிது திறந்த கதவின் அருகே குவித்த பரிசுகள்.
நினைவில் நின்றவை
மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.
சிவிங்கி – அத்தியாயம் ஒன்று
சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை. இவை தவிர வேறு எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போனது. திட்டமிட்டு அவை ஒவ்வொன்றாக அழிக்கப் பட்டன. பேச்சும் எழுத்தும் முழுவதும் இறந்துபட அடுத்த அடுத்த தலைமுறைகளில் மரபணு மூலம் கடத்தப்பட்ட குறைந்தபட்ச மொழி இல்லாமல் போனது. மொழி அழிப்பு முழு வெற்றி பெற்றது.
இற்றைத்திங்கள் அந்நிலவில் 4
அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.
வாழ்வென்ப அபத்தங்கள் கோர்த்த சரம்
மறக்க முடியாத எத்தனையோ இருக்கின்றன இந்தக் கதைகளில் – பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அரைத்து சிரங்குக்குப் பத்துப் போட வாங்கிச் செல்வார்கள் எனும் குறிப்பு, முந்திரிக்காய் கூஜா, ஊறுகாய் பிரதானமாக உலவும் கதைக்கு ‘வினைத் தொகை’ என்ற தலைப்பு, பேச்சிலர் தங்குமிடத்தின் மாடியைப் பார்த்து, இருக்கிறானா இல்லையா என்ற எந்தக் கவலையும் இல்லாமல் ‘சடகோபா’ என்று எப்போதும் அழைக்கும் ஆழ்வார்
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
மிளகு அத்தியாயம் ஐம்பத்தைந்து
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.