நரனா? நாராயணனா?

அவன் சொன்ன விஷயம், அதைச் சொன்ன விதம், அதுவும்  என் கண்களை நேராகப் பார்த்தபடி அவன் சொன்னது, எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. என் இதயம் துடிப்பதைக் கூட ஒரு நொடி மறந்திருந்தது.  வெட்கத்தால் என் முகம் சிவந்ததை மறைப்பதற்காகத் தலைகுனிந்தேன். இதை அவனே எழுதினானா, இல்லையென்றால் யாராவது உதவினார்களா என்று யோசித்தேன்.