வாட்ஸாப்ப் தாத்தா

குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையைப் பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்?  யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.