பெட்டைப் புலம்பல்

ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று

தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்

‘மனைமாட்சி’ அவருடைய மற்றொரு பெரிய நாவல். அதன் முதல் வரைவில்  ஆயிரத்து நானூறு பக்கத்திற்கும் மேல் இருந்தது. அதை எனக்குத் தெரிந்து மூன்று நான்கு தடவை திரும்பத் திரும்ப மாற்றி எழுதினார். கணினியில்தான் என்றாலும்  இதுவெல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத உழைப்பு. சமீபத்திய காணொளி வாயிலான நேர்காணல் ஒன்றில் தனது அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கப்பாலும் தன்னால் எப்படி இவ்வளவு அதிகமாகவும் தீவிரமாகவும் எழுத முடிகிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார்.

அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

This entry is part 22 of 22 in the series இசைவாணர்

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.

செல்வம் அருளானந்தம்- நேர்காணல்

 குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும்  நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன.

நித்தியம்

“டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?” கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.

பொற்பாதை

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”

விளைவு

லாமு தீவில், இந்திய பெருங்கடலின் கரையோரம் சிமோன் கோமுவின் பிரம்மாண்டமான வீடு அமைந்திருந்தது. பழைய அரபுப் பாணியிலான வீட்டின் வெள்ளைச் சுவர்களும், செதுக்கப்பட்ட மர ஜன்னல்களும், பச்சை நிறக் கதவுகளும் சூரிய ஒளியில் ஜொலித்தன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட லாமுவின் குறுகலான தெருக்களில் கழுதைகள் மட்டுமே பயணிகளைச் சுமந்து சென்றன. மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத இந்த பழங்கால நகரத்தில், சிமோனின் வீடு கடலை நோக்கியபடி பனை மரங்களால் சூழப்பட்டிருந்தது.

அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் algorithm-களின் பயன்பாடு, மற்றும் நாளாக நாளாக உருமாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த automated system-த்தின் எல்லைகளற்ற அதன் தன்மையானது மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என கூறும் புத்தகமே Code Dependent. இதில் கூறப்படும் உண்மை சம்பவங்கள் யாவும் Silicon Valley-யிலிருந்து கூறப்படுபவை அல்ல.

செஞ்சீலை

காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது. 

இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர்  ஜே .பி.

ஜூன் 5 1978 ல் ஜேபி   ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான்  பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’  என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.

பலி

“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.

வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்

துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு  சுல்தான் புரி, பிறகு மச்சிலி

கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்

ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ”   நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல்  புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது. 

பழையவரால் என்ன பயன்?

கவிதை குறித்துப் பிளேடோவில் தொடங்கி, ஆடன் வரை ஏறத்தாழ எழுபது கவிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளைச் சிறிய கட்டுரைகளாக இந்த இரண்டு புத்தகங்களிலும் அளித்திருக்கிறார் பேராசிரியர். இது ஒரு பெரிய பிரயாணம் தான்.(சமஸ்கிருதத்திலுள்ள கவிதைக் கோட்பாடுகளையும் இது போல் ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அவரது மறைவு நிகழ்ந்து விட்டிருக்கிறது.)

வாகை மனம்

வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது.  வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது.  தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது.  கோல்டன் பாய்  வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார்.  அவர்  அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது.  இந்தப் பக்கம் அவர்  திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.

6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.

பசுமையின் மனம் பாடும் ரகசியம்

இந்த தொட்டாற் சுருங்கி (Mimosa pudica) இலைகளை பாருங்கள். அதைத் தொட்டால், அதன் இலைகள் உடனே மூடிக்கொள்கிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் தொட்டால், அதன் எதிர்வினை குறைகிறது. ஏனெனில் அது தொடுதல் ஆபத்து இல்லை என்று புரிந்துகொள்கிறது. தொடும்போது, மிமோசா செல்கள் கால்சியம் அயனிகளை, ஒரு இரசாயன அலாரம் போல வெளியிடுவதால், இது இலைகளை மூடச் செய்கிறது. மீண்டும் மீண்டும் தொடும்போது, தாவரம் தன் ஆற்றலைச் சேமிக்க அதன் பதிலை மாற்றுகிறது.

தெய்வ நிமித்தம்

 “உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு  பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம், 

சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.

பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்

This entry is part 3 of 12 in the series சமூக உணர்ச்சி

இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

This entry is part 9 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன

சுட்ட சட்டி சட்டுவமும் கறிச்சுவையும்   

வேமனவின் குரு லம்பிகா சிவயோகி வீர சைவர். வீரசைவர்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவினர். பன்னிரண்டாம்  நூற்றாண்டில் பசவன்னா என்பவரால் உருவாக்கப்பட்ட பிரிவு. கர்நாடகாவில் லிங்காயத் என அழைக்கப்படுபவர்கள் வீரசைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிவனை மட்டுமே வழிபடுபவர்கள்., உருவ வழிபாடு, ஜாதி வேறுபாடு இரண்டும் இவர்களுக்கு கிடையாது. வேமன  குருவின் வீரசைவ மரபைப் பின்பற்றுகிறார். ‘அசல’ என்ற மெய்யியல்தத்துவத்தை கடைப் பிடித்து வாழ்கிறார். 

ஏகலைவன்

ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது.

கலைச் செல்வம் சேர்க்கும் பணியில் ஒரு கை

இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.

தமிழ் நாவல்கள் 2025

ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.

ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்

மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.

நமக்குத் தேவை நவீன நாடகங்கள்

உலகம் முழுவதுமே வெகுஜனக் கலைகளுக்கும் செவ்வியல் கலைகளுக்குமான பிரிவு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் யுகசந்திகளிலும் பெரும் சமூக மாற்றங்களின் காலகட்டங்களிலும் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையிலான வேற்றுமைகள் மறைந்து, இவற்றுக்கு இடையில் பாலமாக அமையும் புதிய கலை வடிவங்கள் உருவாகி, அவை சமூகத்தை மறு வரையறை செய்யத் தொடங்குகின்றன. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக ஆங்கிலேய ஆட்சியாலும் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தாலும் இந்தியாவெங்கும் உருவான நவீன சிந்தனைகள் மற்றும் கலைகளின் பேரலையின் ஒரு பகுதியாகவே உருவானது நவீன நாடகம். 

குறுங்கதைகள் – ஓர் உரையாடல்

பொதுவாக எழுத்து ஊடகம் காட்சி ஊடகத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது என்பது என் எண்ணம். காட்சித் துணுக்குகள் கவனக்குறைவை உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆனால் அக்கவனக்குறைவு ஒட்டுமொத்த வாசிப்பை குறைக்கிறதேயன்றி குறுங்கதை எழுதப்படுவதை ஊக்குவிக்கிறது என்று நான் எண்ணவில்லை. அப்படியெனில் குறுங்கதையைவிட குறைவான சொற்களில் எழுதப்படும் கவிதை அதற்கு அனுசரணையான வடிவமல்லவா!

ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்

நாவலில் அல்புனைவுத் தன்மைகள் அதிகம் உள்ளன.  டிவிட்டர் நாவல் வந்து விட்டது.  சென்ற வருட புக்கர் பரிசை வென்றது முழு உருவக நாவல். யுத்திகளில் பல மாறுதல்கள் செய்து நூல்கள் வருகின்றன.  போரா சுங் அபத்தவியலை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டார்.  ரெபெக்கா யாரோஸ்  காதல்கதையையும் பான்டஸியையும் இணைத்து Romantasy என்ற புதுவகைமையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மைச் சுற்றி ஏராளமான மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  

ஒரு கடற்கன்னியும் சில செர்ரி மலர்களும்

என்னை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்;பயந்தவாறே அவனை விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.கதவு வழியாக உற்றுக் கேட்ட போது குளியலறைச் சுவர்களில் கடற்கன்னியின் நீச்சலால் எழுந்த நீர்த்தெறிப்போசையின் எதிரொலி மட்டுமே காதில் விழுந்தது.எனோமோட்டோ எந்த சப்தங்களையுமே எழுப்பவில்லையென்றாலூம் கூட அவனுடைய இருப்பு எனது குடியிருப்பு முழுவதும் கனமாகப் படர்ந்திருந்தது.இரண்டு மணி நேரங்கள், மூன்று மணி நேரங்கள் கடந்தன, எனோமோட்டோ வெளிவரவேயில்லை

முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி

எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தியென குறிப்பிடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசைகளால் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். 

தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்

எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.

கலைகளை சார்ந்து இருத்தல்

மொழி வழி கலைகளில் சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில், வாழ்க்கையின் மிக சிறிய பகுதியை முன்வைத்து, அதனுள் மறைந்திருக்கும் மீதி வாழ்வை படிப்பவர்கள் தேடி தேடி அடைய செய்வது. ஒரு மனிதனின் வாழ்வு, ஒப்புநோக்க அளவில் சிறு துளி மட்டுமே.  இந்த துளியில் இருந்து காட்சிக்குள் அடங்கா பெரு மழையை, பெரு விரிவை அவன் எண்ணி எண்ணி அறிவதை போலவே சிறுகதை வாசிப்பு என நாம் எடுத்துக்கொள்ளலாம்.  

ஒதுங்குதல்

உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார்.

குழலினிது

சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.

ஏழு கவிதைகள்

இரவு வானத்தில்
தனித்துப் பறக்கிறது பறவை.
வானம் தனித்திருக்கும்
பறவை தனித்திருக்கும்
தனித்திருக்கும்
இரண்டின் சந்திப்பிலும்
தனிமையிருக்கும்
தனிமையின் கரங்களில்
வானம் புகும்
பறவை புகும்
இங்கு யாவுமே உட்புகும்

வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள்

தமிழில் எனக்குப் பிடித்த சொல் ஊரா காடா  என்பதில் எனக்குள் நிறைய போராட்டம் நடந்தது. இறுதியில் காடே வென்றது. காடு ஊரைவிடத் தன்னிறைவானது. சங்ககாலத்தில் ஊரே காடாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் காடு இருந்தது. பாலை நிலமும் பாலைவனமாகவே இருந்தது.வயலும் காடாக வயல்காடாக. மலையும் மலைக்காடாக. 

மூட்டைப் பூச்சி

நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி  ஊதி விட்டான்.

தன்னைத் தெரிந்து கொள்ளல்

This entry is part 2 of 12 in the series சமூக உணர்ச்சி

ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.

அம்பு

அது ஒரு வழி பாதை. அதன் பிறகு அல் ஷபாப் இருக்கும் வரை நான் சோமாலியாவில் கால் வைக்க முடியாது. என் மொத்த கனவும் முடிந்து போகும். லண்டனிலோ, நியூ யார்கிலோ கார் கழுவிக் கொண்டு, கட்டிட வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். அதற்கு நான் சாகலாம். இப்போதே என் சகோதரனை போல உடல் சிதறி சாகலாம்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

This entry is part 8 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது

இராஜகுமாரனின் மன விசாரங்கள்

தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும்  கவனித்துச் செய்தார்.  என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே.   ஏன் இப்படி செய்தான்?  அப்படி என்ன துக்கம் அல்லது கவலை?  தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்

அறிவு அளித்த விடுதலை

பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal).‌ ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.

முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள்

‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.

சுஜய் ரகு கவிதைகள்

வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்

ஒவ்வொரு பூவும் சொல்கிறதே

மலர்களின் இதழ்கள் கவிஞர்களுக்கு எப்போதும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டும் ஒரு கருப்பொருளாக இருக்கின்றன. இதழ்களின் மென்மை, வண்ணம், வாசனை, அழகு ஆகியவை காதல், இயற்கை, நிலையாமை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் போன்றவற்றை உருவகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளிலும், உலக இலக்கியங்களிலும் இதழ்கள் குறித்து கவிஞர்கள் பலவாறு பாடியுள்ளனர்.

மூன்று கவிதைகள்

மிகப்பெரிய அநீதி
நிகழ்ந்தது போல்
தலையில் கொத்திவிட்டு
இருளிலே அபாயத்தைத்
தோற்றுவித்துச் சென்றது ஒரு காகம்
அது இங்கும் அங்கும் பறந்து
மரணத்தின் அருகாமையை காட்டி
மீண்டும் இன்னொன்றாகப்
பறந்து போகிறது

உறங்காமை

தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட  நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள்,  சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.

கய்த பூவு

ரோசாளை முதலில் பெண் பார்க்க வநதவன் தன்னைப் பார்த்துத்தான் கையசைப்பதாக நினைத்து அவளும் கையசைத்தது குற்றமாகிப் போய் தடைப்பட்ட திருமணம் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்காட்டி தடைபட்ட மயமாகிப் போகிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணம்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான தகுதியாகப் பார்க்கப்படும் பாழாய்ப்போன சமூகத்தை சபிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?