அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.
Tag: ட்ரம்ப்
முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள்
‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.
சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?
வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட ‘வரி அறக்கட்டளை’ ஒன்று, இறக்குமதி வரிகளால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் $100 பில்லியன் கிடைக்கும் என்று மதிப்பிட்டாலும், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கும் அபாயமும், வணிகங்களுக்கான செலவுகள் அதிகரித்துப் பலரும் பணிகளை இழக்கவும், நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுக்கும் நிலைமையும் உருவாகும். இது அரசின் மீது குறிப்பிடத்தக்கச் செலவுகளையும் சுமத்தக்கூடும் என்று கணித்திருக்கிறது.
இரண்டாம் இன்னிங்ஸ் சாத்தியமா?
தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்!
அமெரிக்க இடைத் தேர்தல்களுக்கான முதல் சுற்று- 2022
தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக 2020 ஜனவரியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டது பைடன் அரசு. குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தான் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிற தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.
கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்
உக்ரெயின் நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேசிக் கொண்டார்கள். அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்தார். அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் “கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்”
