- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

எல்லாருமே முடிவுகளை எடுக்கிறோம். ஒரு நாளைக்கு தெரிந்தும் தெரியாமலும் நிறைய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதில் சில முக்கியமான முடிவுகள். சில அத்தனை முக்கியமில்லாத முடிவுகள். காஃபி அல்லது டீ, என்ன குடிக்கலாம் என்பதில் தொடங்குகிறது. ஆல்பர்ட் பண்டுரா அவர்களின் சமூகக் கற்றல் கோட்பாட்டின்படி, நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை அவதானித்து கற்றுக்கொள்கிறோம். காஃபி குடிப்பதுதான் நமக்கு பிடிக்கும் என்றாலும் பெரும்பாலும் பலருக்கு டீ தேர்வு என்றால் நாமும் டீயைத் தேர்வு செய்தால் ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. நம்மைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல தெரிவை விட அவ்வளவு உகந்த தெரிவு இல்லை என்பதைவிட.
வாழ்க்கையில் சில முடிவுகள் சிறியவை – ஒரு பானத்தைத் தேர்ந்தெடுப்பது போன்றவை. ஆனால் பல முடிவுகள் – குறிப்பாக இளம் வயதினருக்கு – பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. 14 வயது ராகுல் புதிய பள்ளியில் சேர்ந்தவுடன் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டான். புதிய நண்பர்களை உருவாக்க ஆவலாக இருந்த அவனை, ஒரு குழு மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி புகைப்பிடிக்கச் செல்ல அழைத்தனர். இது அவனுக்கு ஒரு முக்கியமான முடிவெடுக்கும் தருணமாக அமைந்தது.
சமூகக் கற்றல் மற்றும் முடிவெடுத்தல்
ஷாம்பு வாங்கச் சென்றால் எத்தனை எத்தனை தெரிவுகள் இருக்கின்றன? அதில் எப்படி ஒன்றைத் தெரிவு செய்வது? அது ஒவ்வாமை தரக்கூடியதாக இருக்கக் கூடியதாகவும் அதிக வேதிப்பொருள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் அல்லவா? அது போல வாகனங்கள் வீடு வாங்குதல் போன்ற அதிக முதலீடு செய்யும் முடிவுகள், படிப்பு, பணி, திருமண வாழ்க்கைக்கு உரியவரைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வாழ்க்கைத் தொடர்பான முடிவுகள் என பல முடிவுகள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளில் பெரும்பாலானவை சமூகக் கற்றல் மூலம் பாதிக்கப்படுகின்றன – நாம் மற்றவர்களின் நடத்தை மற்றும் அதன் விளைவுகளை அவதானித்து கற்றுக்கொள்கிறோம்.
ராகுலுக்கு இது எப்படி வேலை செய்தது என்பதைப் பார்ப்போம். அவன் பள்ளியில் “புகழ்பெற்ற” மாணவர்களை கவனித்தான். அவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டனர், மற்ற மாணவர்கள் அவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கினர். ஆனால் ராகுல் ஆசிரியர்கள் அவர்களைப் பற்றி அதிக மதிப்புடன் பார்க்கவில்லை என்பதையும் கவனித்தான். இந்த அவதானிப்புகள் அவனது முடிவெடுக்கும் செயல்முறையில் முக்கிய பங்கு வகித்தன.
இது தனிப்பட்ட முடிவுகள். எதுவானாலும் அது நம் உடல் மன நல ஆரோக்கியத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். முடிவெடுத்த பின், விளைவுகளுக்கும் முழு பொறுப்பேற்க வேண்டும். முடிவுகள் பிறரைப் பாதிக்குமானால், அவர்களுடையை நலத்திற்கும், சமூகத்தின் நலத்திற்கும் பொறுப்பெடுக்குமாறு நமது முடிவுகள் இருக்கும் வகையில் ஆலோசிக்க வேண்டும். பண்டுரா குறிப்பிடுவது போல, சமூக அவதானத்தின் மூலம் நாம் சுய-ஒழுங்குப்படுத்துதல் மற்றும் சுய-திறமையை வளர்த்துக்கொள்கிறோம்.
மூளை வளர்ச்சியும் முடிவெடுத்தலும்
நாம் நல்ல முடிவுகளை எப்படி எடுப்பது? மூளை இதில் பெரும்பங்கு வகிக்கிறது. 25 வயது ஆகும்வரை மூளை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. சிந்தித்து செயலாற்றும் ப்ரிபிராண்டல் கார்டெக்ஸ் பகுதி வளர்ச்சி அடைவதில்லை. அதனால் குழந்தைகளும் பதின்ம வயதினரும் இளைஞர்களும் உணர்ச்சிகளைத் தூண்டும் அமிக்டாலாவைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கிறார்கள். அதனால்தன் அவர்களின் எழுச்சியை எளிதாகத் தூண்ட முடிகிறது. சமூகக் கற்றல் கோட்பாட்டின்படி, அவதானிப்பு கற்றலின் நான்கு அம்சங்கள் – கவனம், நினைவில் வைத்தல், மறுஉருவாக்கம், மற்றும் ஊக்கம் – இளைஞர்களின் முடிவெடுக்கும் திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ராகுலின் விஷயத்தில், அவனது பதின்ம வயது மூளை இன்னும் முழுமையாக வளரவில்லை. அவனது நண்பர்கள் புகைப்பிடிப்பதன் “புகழ்” உணர்ச்சிவயப்பட்ட அமிக்டாலாவை தூண்டியது. ஆனால் அவனுக்கு நன்மை-தீமை பற்றிய அடிப்படை புரிதல் இருந்தது. அவன் இந்த தூண்டுதலை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
கற்பித்தல் உத்திகள்: சமூகக் கற்றலின் செயல்முறை அணுகுமுறை
அப்படி என்றால் அவர்களைச் சிந்திக்க வைப்பது எப்படி? இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள். பண்டுராவின் “போபோ பொம்மை” சோதனைகளைப் போலவே, இளைஞர்கள் பெரியவர்களை அவதானித்து, அவர்களின் நடத்தைகள் மற்றும் அதன் விளைவுகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
SODA முறை: சமூகக் கற்றலை ஊக்குவிக்கும் செயல்முறை
இதைச் சொல்லித் தர நிறைய வழிகள் இருக்கின்றன. ஒன்று SODA – Situation, Opportunities, Disadvantage, Advantage சூழ்நிலை, தெரிவுகள், சாதகம், பாதகம் – என்ன தெரிவுகள் இருக்கின்றன, அதைத் தேர்ந்தெடுத்தால் வரும் சாதகங்கள், பாதகங்கள் என்ன மாதிரியான சூழ்நிலை.
ராகுல் தன் முடிவை எடுக்க SODA முறையைப் பயன்படுத்தினான்:
சூழ்நிலை: நண்பர்கள் அவனை பள்ளியைத் தவறவிட்டு, புகைபிடிக்கச் செல்ல அழைக்கின்றனர்
தெரிவுகள்:
- நண்பர்களுடன் சென்று, அவர்களின் செயல்களில் பங்கேற்க
- நண்பர்களுடன் செல்ல, ஆனால் புகைபிடிக்க மறுக்க
- தான் வரமுடியாது என மரியாதையுடன் மறுக்க
- ஒரு மாற்று நடவடிக்கையை முன்மொழிய (மதிய உணவுக்குப் பிறகு ஏதாவது செய்ய)
பாதகங்கள்:
- அவர்களுடன் சென்றால்:
- பள்ளி விதிகளை மீறுதல்
- அபராதம் விதிக்கப்படலாம்
- பெற்றோரின் நம்பிக்கையை இழக்கலாம்
- சுகாதார பாதிப்புகள் (புகைபிடித்தால்)
- மதிப்பெண்கள் பாதிக்கப்படலாம்
- எதிர்காலத்தில் இது போன்ற அழுத்தங்களுக்கு இலக்காகலாம்
- அவர்களுடன் செல்ல மறுத்தால்:
- குழுவிலிருந்து புறக்கணிக்கப்படலாம்
- தனிமையான உணர்வு இருக்கலாம்
- கேலி செய்யப்படலாம்
சாதகங்கள்:
- அவர்களுடன் செல்ல மறுத்தால்:
- தன் மதிப்புகளுக்கு உண்மையாக இருப்பது
- சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பது
- தன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது
- பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெறுதல்
- மாற்று நட்புகளைத் தேட வாய்ப்பு
- மாற்று நடவடிக்கையை முன்மொழிந்தால்:
- நண்பர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்
- ஆரோக்கியமான சமூகத் தொடர்புகளை உருவாக்கலாம்
- தலைமைப் பண்பை வெளிப்படுத்தலாம்
உதாரணமாக மாணவர்கள் ஒன்று சேர்ந்து வகுப்புக்குச் செல்லாமல் புதிதாக வந்த ஒரு திரைப்படத்திற்கு செல்ல திட்டமிடுகிறார்கள். அவர்களின் இதயத் துடிப்பு அந்த நடிகர். முதல் நாள் முதல் காட்சி, பார்க்க நுழவுச் சீட்டு கிடைப்பதே அரிது. இந்தச் சூழலில் உணர்ச்சி பூர்வமாக அந்த வயதில் போக வேண்டும் என்ற ஆர்வமும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உந்தித் தள்ளும். எந்த விலையானாலும் பார்க்கச் சொல்லும்.
சாதகங்கள்: அதீத உணர்ச்சிப் பெருக்கால், கிடைக்கும் போலி மகிழ்ச்சி (முதல் நாள் முதல் காட்சி பார்த்ததால் நண்பர்கள் வட்டத்தில் கிடைக்கும் சின்ன மரியாதை) அதைப் பற்றி பேசி கிடைக்கும் புளகாங்கிதம்
பாதகங்கள்: வகுப்பில் ஆசிரியை சொல்லிக் கொடுப்பதை கவனிக்க முடியாதது, அதிக விலை கொடுத்தது, வீட்டில் பெற்றோர் கடிந்து கொண்டது, திரைப்படம் நன்றாக இல்லாமல் போகக் கூடிய வாய்ப்பு, சில மணி அல்லது நாட்களுக்குக்கே இருக்க கூடிய கூடுதல் கவனத்துக்கே இழந்தவை அதிகம். இதுவே பொறுத்து ஒரு விடுமுறை தினத்தில் அதே படத்தை பார்த்தால், எந்த அனுபவமும் குறையப் போவதில்லை, அதிக பணமும் செலவாகப் போவதில்லை. பாடத்தையும் ஒழுங்காகக் கற்று தேற முடியும்.
இந்த வகையான பகுப்பாய்வில், மாணவர்கள் சமூகக் கற்றலின் “அவதானிப்பு-பின்பற்றல்” செயல்முறைக்கு அப்பால் சென்று, விளைவுகளை ஆராய்ந்து சிறந்த முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்கிறார்கள்.
ICED முறை: முடிவெடுத்தலில் சமூகக் கற்றலை ஒருங்கிணைத்தல்
இன்னொரு முறை இருக்கிறது அது ICED. Identify problem, Create alternative, Evaluate alternate, Deciding on the best solution. ஒரு பிரச்சினை முதலில் புரிந்து கொள்வது. அதற்கான மாறுபட்ட வழிகள் பலவற்றை கண்டறிவது, எல்லா வழிகளுக்குமான சாதக பாதகங்களை ஆராய்வது, எது சிறந்ததோ அதைத் தேர்தெடுப்பது.
கீழ்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு T வடிவ அட்டவணையை வரைந்து ஒரு பக்கம் சாதகமும் மறுபக்கம் பாதகங்களையும் பட்டியலிட்டு எது சிறந்தது என சிந்திக்கக் கற்றுச் சொல்லித் தரவேண்டும். இந்த முறை அவதானிப்புக் கற்றலில் ‘கவனம்’ மற்றும் ‘நினைவில் வைத்தல்’ அம்சங்களை வலுப்படுத்துகிறது.
மேம்பட்ட முடிவெடுக்கும் கட்டமைப்பு: சமூகக் கற்றலை பயன்படுத்துதல்
இதுவே உயர்நிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தால் முதலில், குறிக்கோள் நிலையில் ஆரம்பிக்க வேண்டும்
உதாரணமாக பள்ளியில் ஒரு நிகழ்வு நடந்தது, தலமை ஆசிரியர் அறைக்கு நம்மை அழைத்துப் பேச/ விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிகழ்வு குறித்து தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அந்த மாணவனுக்கு. அது எப்படி நடந்தது, அது குறித்து எல்லா தகவல்களையும் சேகரித்தல் முக்கியம் அது தொடர்பாக என்ன கேட்டுத் தெரிது கொண்டார் நேரில் என்ன பார்த்தார் என்ன மாதிரியான காட்சிகள் கண்டார் என்று எழுதி வைத்துக்கொள்ளல் முக்கியம்
ராகுலின் நிலையில், அவன் தனக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்தான். நண்பர்களின் சொல்லும் செயலும் பொருந்தவில்லை – அவர்கள் “மகிழ்ச்சியாக” இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், அவர்கள் ஆரோக்கியமான வழிகளில் மகிழ்ச்சியை தேடவில்லை என்பதை அவன் கவனித்தான். அவன் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் இன்னொரு மாணவன் ரோகித், நண்பர்களின் அழுத்தத்திற்கு எப்படி மரியாதையுடன் ‘இல்லை’ என்று சொல்வதையும் அவதானித்துள்ளான்.
அனுபவ கற்றல் சுழற்சி: சமூகக் கற்றலின் நீட்சி
தகவல் சேகரித்தல் → பிரதிபலித்தல் → பகுத்தறிதல் → முடிவெடுத்தல்
அடுத்து பிரதிபலித்தல்: அந்த நிகழ்வில் உடனடியாகத் தோன்றிய உணர்ச்சி என்ன? என்ன மாதிரியான நினைவுகள் இருக்கின்றன? எது அல்லது யாருடைய செயல் ஆச்சரியப்படுத்தியது? எது அதிர்ச்சியை அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது? இதற்கு முன் இது போன்ற விளைவுகளைச் சந்தித்துருக்கிறாயா? அப்போது எப்படி நடந்து கொண்டாய்? என்ன மாதிரியான விளைவுகள் வந்தன? என்பது மாதிரியான பட்டியல்கள்
ராகுல் தன் உணர்வுகளைப் பற்றி சிந்தித்தான். அவனுக்கு அந்த நண்பர்களுடன் இருக்க ஆசையாக இருந்தது, ஏனெனில் புதிய பள்ளியில் தனிமையாக உணர்ந்தான். ஆனால் அவனுக்கு புகைப்பிடிப்பது பிடிக்கவில்லை, அது உடல் நலத்துக்கு கேடு என்பது தெரியும். அவன் தன் உணர்ச்சிகளையும், அறிவையும் சமநிலைப்படுத்த முயன்றான்.
அடுத்து அதைப் பகுத்தறியும் முறை: அந்த நிகழ்வைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அந்த நிகழ்வு உண்மையில் என்ன? அதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்? அது எந்த மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும்? என்ன அறிந்து கொண்டாய்? என்ன முக்கியமான பாடங்கள் இதில் இருந்து தெரிந்து கொண்டாய்?
அதன் பின் முடிவெடுத்தல்: என்ன நடந்தது, இதன் முடிவுகள் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும்? வேறு எப்படி நடந்து கொண்டிருக்கலாம்? என்ன மாதிரியான செயல்களைச் செய்திருக்கலாம்? அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
ராகுல் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தான். அவன் சொன்னான்: “நண்பர்களே, பள்ளியைத் தவறவிடுவது எனக்கு சரியில்லை. ஆனால் நாளை பள்ளிக்குப் பிறகு நாம் அனைவரும் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கால்பந்து விளையாடலாமே? என் சித்தப்பாவிடம் ஒரு புதிய பந்து இருக்கிறது, நான் அதைக் கொண்டு வருகிறேன்.”
இப்படி அவன் தன் மதிப்புகளுக்கு உண்மையாக இருந்தும், நண்பர்களை இழக்காமல் ஒரு ஆரோக்கியமான மாற்றை முன்மொழிந்தான். இது சமூகக் கற்றலின் “மறுஉருவாக்கம்” மற்றும் “ஊக்கம்” ஆகிய அம்சங்களை காட்டுகிறது – அவன் நல்ல மாதிரிகளிலிருந்து கற்றுக்கொண்டு, அந்த அறிவை புதிய சூழலில் பயன்படுத்தினான்.
இந்த கட்டமைப்பு பண்டுராவின் சமூகக் கற்றலின் “மறுஉருவாக்கம்” மற்றும் “ஊக்கம்” ஆகிய அம்சங்களை ஊக்குவிக்கிறது.
முடிவெடுத்தலில் உணர்ச்சி நுண்ணறிவு: சமூகக் கற்றலின் பரிணாமம்
இன்னொரு வழி எம்பதி என்னும் அனுதாபம், கருணையை உபயோகித்து எந்த முடிவுகளையும் எடுக்க சிந்திக்கலாம். சில சமயம், நம்முடைய சார்வுகள் சிறந்த முடிவுகள் எடுப்பதை பாதிக்கும். தன்னைத் தானறிதல் இந்த சார்புகளை அறிய உதவும். மாணவர்களை தன்னை அறிந்து கொள்ளுதல் மட்டும் அல்ல, தங்களுடைய நம்பிக்கைகளை ஆராய்வதும் தெரிந்திருக்க வேண்டும்.
இதைத் தவிர அறம் சார்ந்த சில குழப்பங்கள் வகுப்பறையில் சில நேரங்களில் விவாதங்களுக்கான வாய்ப்புக்களை அவர்கள் முன் வைக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அறம் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கவும் உதவும். அதைத் தவிர சில சமயம் முக்கிய சூழலில் சிந்திக்கவும் உதவும். சமூகக் கற்றல் கோட்பாட்டின்படி, அறநெறி விழுமியங்கள் அவதானிப்பு மற்றும் அனுகரணம் மூலம் கற்றுக்கொள்ளப்படுகின்றன.
ராகுலின் விஷயத்தில், அவன் தன் நண்பர்களின் நிலையை புரிந்துகொள்ள முயன்றான். அவர்களுக்கும் சேர்ந்திருக்க விருப்பம், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசை இருப்பதை அவன் புரிந்துகொண்டான். அதே சமயம், அவன் தன் சொந்த மதிப்புகளையும் புரிந்துகொண்டான். இந்த உணர்ச்சி நுண்ணறிவு அவனுக்கு ஒரு சமநிலையான முடிவை எடுக்க உதவியது.
விளையாட்டு வழி கற்றல்: சமூகக் கற்றலை செயல்படுத்துதல்
இதைத் தவிர மாணவர்களின் முடிவெடுப்பதை சில உற்சாக வழிகளிலும் பழக்கப்படுத்தலாம். சின்ன சின்ன முறைகள், வகுப்புக்குள் இரண்டு பாதை வழியாகச் செல்ல முடியும். எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள், ஏன், எதனால்?
செல்லப் பிராணிகள் வளர்க்க ஆசையாக இருந்தால், எந்த மாதிரியான பிராணிகள், நாய் பூனை, கிளி ஏன்? பறக்க, அல்லது மற்றவர்கள் பார்வைக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்ற இரண்டு தெரிவுகள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் ஏன்? இப்படி ஒவ்வொன்றுக்கும் விளையாட்டாக பயிற்சி எடுத்துப் பழகினால், முக்கியமான முடிவுகள் எடுப்பதும் பழகிவிடும்.
ராகுலின் அனுபவத்தை பயன்படுத்தி, ஒரு ஆசிரியர் வகுப்பில் பல விளையாட்டு வழி கற்றல் அனுபவங்களை உருவாக்கலாம். உதாரணமாக:
- மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, ராகுலின் சூழ்நிலைக்கு பல்வேறு தீர்வுகளை நடித்துக் காட்டலாம்
- “என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விகள் கொண்ட அட்டைகளை உருவாக்கி, மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் எடுக்கும் முடிவுகளை விவாதிக்கலாம்
- SODA மற்றும் ICED முறைகளைப் பயன்படுத்தி, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் சூழல்களுக்கான பயிற்சிகளை தரலாம்
இந்த விளையாட்டு வழி கற்றல் பண்டுராவின் அவதானிப்புக் கற்றலின் அடிப்படையில் அமைந்துள்ளது, இதில் மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் முடிவுகளை எடுத்து, அதன் விளைவுகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
ராகுலின் கதையின் முடிவு: சமூகக் கற்றலின் வெற்றி
ராகுலின் மாற்று யோசனை சில நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவர்கள் அவனை விட்டுச் சென்றனர். சில வாரங்களுக்குப் பிறகு, புகைபிடிக்கச் சென்ற மாணவர்கள் பிடிபட்டு, பள்ளி அவர்களுக்கு தண்டனை அளித்தது. ராகுல் தான் எடுத்த முடிவு சரியானது என உறுதிப்படுத்திக்கொண்டான்.
அவனது ஆசிரியர் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வகுப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அவர் பண்டுராவின் சமூகக் கற்றல் கோட்பாட்டை விளக்கி, அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில் அதன் பங்கைப் பற்றி விவாதித்தார். இந்த அனுபவத்திலிருந்து, வகுப்பிலுள்ள பல மாணவர்கள் சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க கற்றுக்கொண்டனர்.
இந்த உதாரணம் காட்டுவது போல, சமூகக் கற்றல் கோட்பாட்டின் அடிப்படையில், மாணவர்கள் முடிவெடுக்கும் திறனை வளர்ப்பது அவர்களின் வாழ்க்கைத் திறன்களில் ஒரு முக்கிய அம்சமாகும். ராகுலின் கதை காட்டியபடி, அவதானிப்பு, நினைவில் வைத்தல், மறுஉருவாக்கம், மற்றும் ஊக்கம் ஆகிய நான்கு அம்சங்களை ஊக்குவிக்கும் கற்பித்தல் முறைகள் மூலம், பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுக்க மாணவர்களை தயார்படுத்த முடியும்.
சமூகக் கற்றல் வழி கற்பித்தல் பின்வருவனவற்றை வளர்க்கிறது:
- அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன்
- விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன்
- தன் மதிப்புகளுக்கு ஏற்ப செயல்படும் திறன்
- விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு
- சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன்
இந்த திறன்கள் மாணவர்களை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்துகின்றன, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த முறைகளைப் பயன்படுத்தி அவர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த முடியும்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
