மலர்களின் இதழ்கள் கவிஞர்களுக்கு எப்போதும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டும் ஒரு கருப்பொருளாக இருக்கின்றன. இதழ்களின் மென்மை, வண்ணம், வாசனை, அழகு ஆகியவை காதல், இயற்கை, நிலையாமை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் போன்றவற்றை உருவகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளிலும், உலக இலக்கியங்களிலும் இதழ்கள் குறித்து கவிஞர்கள் பலவாறு பாடியுள்ளனர்.
Tag: அருணாச்சலம் ரமணன்
தூக்கணாங்குருவி கூடு
இந்த நுண்ணிய உறவில், மனிதனும் பறவைகளும் ஒரு தனித்துவமான இணை வாழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதனால் வடிவமைக்கப்பட்ட உலகத்தைப் புரிந்து கொள்ளவும் அதில் தங்களைத் தழுவிக்கொள்ளவும் பறவைகள் கற்றுக்கொண்டுள்ளன. நூற்றாண்டுகளாக, நகரச் சூழலுக்கு தங்களைச் சீரமைத்து, மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. மின்கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களை கூட தங்கள் கூடு கட்டுவதற்காக பயன்படுத்தி, உயரமான கட்டிடங்களின் நடுவிலும் தழைத்து வளர்ந்து வருகின்றன
ரங் பர்ஸே
பாரம்பரியமாக, குலால் வசந்த கால மலர்கள், பெர்ரி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது, மேலும் அதன் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதாகவும் கருதினர். பொதுவாக பயன்படுத்தப்பட்ட நிறங்களில் மஞ்சள், சிவப்பு ochre, கரிய மை, indigo நீலம் மற்றும் லாபிஸ் லசுலி போன்றவை அடங்கும். இந்த கனிமங்கள் மரக்கொழுந்து (அ) பிசின் போன்ற பிணைப்பிகளுடன் கலந்து நீடித்த தன்மையை வழங்கியது.
விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
தெற்கு மெக்சிகோவின் யுகடான் (Yucatan) தீபகற்பத்தின் மையத்தில், அடர்ந்த காடுகள் பழங்கால நாகரிகங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கின்றன. அங்கே ஒரு நவீன தேடல் உருவாகிக் கொண்டிருந்தது. Louis May Ku என்ற கலைஞர், மாயா ப்ளூ எனப்படும் புதிரான ஒரு வண்ணத்தின் மர்மத்தால் ஈர்க்கப்படுகிறார். காலத்தையும், வானிலையையும், இன்றைய வேதியியலையும் வென்று இன்றும் நிலைத்திருக்கும் இவ்வண்ணம், மாயா நாகரீகத்தின் சுவரோவியங்கள், பானைகள் மற்றும் புனித பொருட்களில் பளபளப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய அறிவு வரலாற்றில் தொலைந்து போயிருந்தது.
நவீன உலகை உருவாக்கும் கணிதம்
எண் முறை முறையை உருவாக்குவதில் பிற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவின் ஹிந்து-அரபிக் எண் முறை உலகளாவிய கணித வளர்ச்சிக்கு அடிப்படை அமைப்பாக இருந்தது. இந்த முறை அரபு நாடுகள் மூலம் ஐரோப்பாவுக்கு பரவியது, இதன் மூலம் 0 (பூஜ்யம்) உள்ளிட்ட எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணியல் அமைப்பு உலகளாவிய கணித கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டது.
உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
இசைக்கான சில உலகளாவிய பதில்கள் குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுகின்றன, இதில் நகரும் கால் தட்டுதல் மற்றும் தலையசைத்தல் ஆகியவை அடங்கும். இயக்கம் இல்லாமல் கூட உணர்ச்சி-மோட்டார் பதில்களைக் கட்டுப்படுத்தும். மூளைப் பகுதிகளைச் செயல்படுத்த இசை அறியப்படுகிறது.
தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்
The catalyst – RNA and the Quest to Unlock Life’s Deepest Secrets – ஓரு பார்வை DNA என்பது மரபியல் தகவல்களின் களஞ்சியம் மேலும், இது ஒரு உயிரினத்திற்குத் தேவையான அனைத்து புரதங்களையும் குறியாக்கம் செய்யும் மரபணுக்களைக் கொண்டுள்ளது – நமது தசைகள் நகர்வதை “தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்”
பசுமை ஆற்றல் – பகிராத மறுபக்கம்
பசுமைப் பாதையை நோக்கிய பந்தயத்தில் வெற்றி, தோல்வி கண்டவர்கள். இப்புத்தகத்தின் அடித்தளம், கடந்த பத்து ஆண்டுகளாக இடைவிடாத பேசும் பொருளாகக் கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியை (LIB)ப் பற்றியது. இப்புத்தகம் முதல் இருபது பக்கங்களில் இதன் வளர்ச்சியை மேல்நோக்காகக் குறிப்பிட்டாலும், இருநூறு ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இக்கருவியை அல்லது மின்கலத்தை விவரிப்பது இப்புத்தகத்தின் நோக்கமில்லை.
நாடும் சுவை, தேடும் தொல்லியல்
தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.
ஓரிகமியால் மடிந்த கண்ணாடி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பம்
புதுமையான பொருட்களின் கலவையுடன் நிலையான ஒரு 3D பிரிண்டரில் பல்வகை கண்ணாடிப் பொருட்கள் அச்சிட முடியும். சிக்கலான சிலிக்கா கண்ணாடி வடிவமைக்க பொதுவாக 1000° C க்கு மேல் சூடாக்க வேண்டும். அச்சிடலின் போது இத்தகைய வெப்பமடைவதைத் தவிர்க்க, சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குணால் மசானியா, ஆண்ட்ரே ஸ்டுடார்ட் மற்றும் குழுவினர், ஒரு கண்ணாடி செய்முறையை உருவாக்கினர். அதில் கனிம கண்ணாடி முன்னோடிகளுடன், ஒளி-பதிலளிக்கக்கூடிய கரிம கலவைகள் உள்ளன
