பாகீரதியின் மதியம் – விமர்சனம்

This entry is part 10 of 72 in the series நூறு நூல்கள்

நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.

நீளாவுடன் நீளும் பயணம்

மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை