எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
Author: ரமேஷ் கல்யாண்
யுவன் – கதைகளில் அவிழும் மத்ரோஷ்கா பொம்மைகள்
ஒரு சில ஒற்றை வரிகளில், பெரும் மனவெடிப்பை உண்டுபண்ணி விடுகிறார். அது வாசிப்பவரின் மன அலைவரிசையைப் பொறுத்தது என்றாலும், அந்த எளிமையாக ஒரு கனமான விஷயத்தை சொல்லிப்போவது அசோகமித்திரனை நினைவூட்டுகிறது. உதாரணமாக பாட்டி பேரனிடம் கதைகள் சொல்கிறாள். சில கற்பனைகள். சில வாழ்வின் உண்மைகள். அனுபவங்கள். அதில் பாட்டி தான் அந்த காலத்தில் இருந்த கிராமபோனைப் பற்றியும், தான் பாடிய நாட்களிப் பற்றியும் சொல்லும்போது – “அதை விடு.. இதைப் பாடும்போதெல்லாம் எனக்கு என் பெரியண்ணா ஞாபகம் வந்துவிடும். சீர் கொடுப்பதற்காக வந்து செருப்படி வாங்கிக்கொண்டு போனானே.அந்த உத்தமன் முகம் கூட எனக்கு மறந்துட்டதேடா கிருஷ்ணா. எவ்வளவு செல்லமா வச்சிருப்பான் என்னை.பாவி. நான் அன்னிக்கே செத்திருக்க வேணாமா சொல்லு ” என்பாள். இதைப் படித்து விட்டு என்னால் மேலும் படிக்க முடியாமல் மனம் அலைக்கழித்தது. நீர்பட்ட பஞ்சு போலானது மனம்.
அயலகத்து கொம்புத் தேனீ
போர், மேற்கத்தைய கலாச்சரம், வாழ்வு முறை, காதல், பிரிவு, மணம், மணமுறிவு, இச்சைப்படி வாழும் முறை உள்ளிட்ட பலவும் அடங்கியவை. ஆகவே அங்கு நிலவும் அவர்களுக்கான சாதாரண ஒரு விஷயம் கூட நமக்கு புதிதாய் வியப்பாய் வித்தியாசமாய் இருக்கக்கூடும். அப்படியெனில் இவரது எழுத்துக்களை எந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்? வேறு வகையில் சொல்வதானால் இவரது எழுத்து எழுதப்பட்ட களத்தில் உள்ளவர்களுக்கு சாதாரண கதையாக இருந்துவிடுமா ? இதற்கான விடையை அவரை வாசிப்பவர்கள் மட்டுமே கண்டு கொள்ள முடியும். அதே சமயத்தில் இப்படியான வகை கேள்விக்கு உட்படுத்த முடியும்படியான தமிழ் எழுத்தாளர்கள் நம்மிடம் மிக அதிகம் இல்லை என்பதில்தான் இவரது பங்களிப்பின் இடம் உள்ளது.
திசைகாட்டி
“கவிதையும் எண்ணங்களும்” கட்டுரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவரது காலத்தில் கவிதைகளுக்கு ஒரு சீற்றமும் பிரச்சார தொனியும் தேவையாக இருந்தன. காலத்தின் தேவையாக தானும் அப்படி எழுத நேர்ந்தமை பற்றி சொல்கிறார். நேருவின் அறைகூவல் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பயிரைத் தின்னும் பகையை வீரப்படை கொண்டு மாய்த்திடுவோம்“ எனும் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். அது அந்தக் காலத்தின் தேவை. இத்தகைய கவிதைகள் இன்று பொருத்தப்பாடு இல்லாமல் போயிருப்பவை. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ட்ரல ட்ரல ட்ரல லலல
சிறுவயதில் கூச்சமாக இருந்தவனின் மனதில் இருந்த காமுக எண்ணங்களின் இரட்டைப் பிம்பம்தான் இந்த இரு சக்திகளா? தன்னையே இரு பாகமாகப் பிளந்து உள்நோக்கும் வகையில் இந்த இரு விசைகளா? கடவுளை விரும்பாதவன் ஆன்மீகத்துக்கு மாறுகையில் வந்த நம்பிக்கைச் சிதைவின் விளைவுகளா? காரண அறிவும், பொருள்விளங்காப் பேருணர்வும் மோதிக்கொள்ளும் சிதறலா? வறுமைய எதிர்கொள்ள முடியாத பேதைமையில் ஏற்பட்ட சறுக்கலா?
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது: நூல் அறிமுகம்
இந்தநூற்றாண்டின் முற்பகுதியில் நகர நாகரிகத்தின் நிழல்படாத- நதியை ஒட்டிய – சிதம்பரம் அருகே சிறிய கிராமம் ஒன்றில்பள்ளி ஆசிரியராக சாமிநாதசர்மா ‘ஐயா’ என்ற பாத்திரத்தில் ஜீவிக்கும் நாவல் ‘ஒருநதி ஓடிக்கொண்டிருக்கிறது’. ஒரு period film பார்ப்பதுபோல்இருக்கிறது இந்த 264 பக்கநாவல். இதை எழுதிய திரு.வே.சபாநாயகம் தான் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல – தன் ஆசிரியர் சாமிநாத அய்யரை மையப்படுத்தி இதை எழுதி இதை அவருக்கே சமர்ப்பணம் செய்திருப்பது இதன் விசேஷம்.