தர்ம சங்கடம்

“அம்மா காலைத் தொட்டு வணங்கறப்ப அஞ்சு ரூபா காணிக்கை வைத்தும் கூட விளக்கமா ஏதும் சொல்லலே. ‘இருள்-வெளிச்சம் இரண்டும் சேர்த்து நெய்யப்படுகிறது மானுடர்களின் எதிர்காலம் என்ற மாயத் திரை. இருந்தாலும் இருட்டின் உபாதையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியும் உண்டு,’ அப்படீன்னாரு.”

காயம்

பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார் பணீஷ்வர்  பீகாரிலுள்ள  அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச்  அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். “காயம்”

இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்

சொல்வனம் மொழி பெயர்ப்புகளுக்கு வரவேற்பு கொடுக்கும் பத்திரிகை. நிறைய இங்கிலிஷிலிருந்துதான் இங்கு வந்திருக்கின்றன என்றாலும், இந்திய மொழிகளிலிருந்தே நேராகத் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் விஷயங்களுக்கே பிரதான இடம் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜீவனம்

ஆலமரத்துக்கு அடியில் தன்னந்தனியாக ஊன்றப்பட்டிருந்த கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த ஊமைப்பிடாரியின் கால்களுக்கு அடியில் நித்யாவை கிடத்தி ஓவென்று கத்திக்கதறினாள். ஊமைபிடாரியிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் இவள் மீது பிசுபிசுவென்று ஒட்டியது. அம்மா அழுவதைப் பார்க்க பயமாக இருக்கவும் ஊமைப்பிடாரியை இறுகப்பற்றிக்கொண்டாள். ஒரு சொல்லும் இல்லாத அழுகை.

ரகசியம்

ஆனால் நான் கடந்து போக நேர்ந்த ஆண்கள் தங்களின் கடன்களை அடைப்பதற்காய் பெண் தேடுபவர்கள். தினசரி செலவுகளுக்காய் பெண் தேடுபவர்கள். அழகான ஆண்கள் அறிவாய் இருப்பதில்லை. அறிவான ஆண்களிடம் அதீத அறிவே பிரச்சனையாக இருக்கிறது. அழகான ஆண்கள் முட்டாள்தனமாக இருக்கிறார்கள். விளையாட்டில் இருப்பவர்கள் விளையாட்டிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். பணக்கார இளைஞர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பணக்காரனாக இருந்து கடினமாக உழைக்கும் ஆண்கள் பெரும்பாலும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி

டாக்டர் எங்களைக் கூட்டமாகப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை கீழே தாழ்த்தியபடி “என்னடா, நீங்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்கனு ஊர்வலம் கெளம்பிட்டிங்களா? எல்லாத்துக்கும் காரணம் இந்த பக்தவச்சலம் செஞ்ச வேல,” என்றார். சற்றே தாமதமாகத்தான் எங்களிடமிருந்து அவர் பார்வை விலகி மாமியின் மீது படிந்தது. அவர் தோற்றத்தைப் பார்த்ததுமே “தம்பிங்களா, கொஞ்சம் வெளியே நில்லுங்க,” என்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

முகவரி

“வாடே வா, எல்லா எடத்துலயும் கொமைக்கப்புடாது கேட்டியா? வெளாட்டுக் காரியமில்ல..வந்து தோப்புக் கரணம் போடு..” என்று அவர் என்னைப் பார்த்துக் கத்த அம்மா என்னை முன் தள்ளினார். கோவிலைப் பார்த்தவாறு நான் தோப்புக்கரணம் போட, அவர் அம்மா, அப்பா, அண்ணனுக்குத் திருநீறு பூசி விட்டார். பின், என்னைக் கைகாட்டி நிறுத்தச் சொல்லி திருநீறு பூசி, உற்றுப் பார்த்தார்.

கைச்சிட்டா – 3

This entry is part 3 of 8 in the series கைச்சிட்டா

அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”

கடவு

ஓட்டுநர்களில் மூன்று வகைமையினர் உண்டு. பகலெல்லாம் ஓட்டுபவர்கள். இவர்களுக்கு பணமும் வேண்டும். இரவுத் தூக்கமும் வேண்டும். இரண்டாவது வகையினர் இரவில் மட்டும் ஓட்டுபவர்கள். ஆனால் சரியாகச் சொன்னால் இவர்கள் முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் முன் மதியம் வரை ஓட்டுவார்கள். சரியாக தூங்குவதற்காக ஆறு மணிநேரம் மட்டுமே வீட்டிலிருப்பார்கள். மூன்றாவது வகையினர் வண்டியை விட்டு சாப்பிடுவதற்காகவும் இயற்கை உபாதைகளுக்காகவும் மட்டும் இறங்குபவர்கள்.

சென்டிமென்ட்

யாராவது தலைவர்களோ தலைசிறந்த மனிதர்களோ இறந்து விட்டால் பள்ளியையும் ஆபீஸையும் மூடிவிட்டு என்ன சாதிக்கப் போகின்றது அரசாங்கம்? ….
இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு நிமிடம் மௌனம் வகித்து

க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]

சூஸன் சாண்டாக், பதினைந்தாம் நூற்றாண்டில் மேக நோயைக் (ஸிபிலிஸ்) குறிக்கவிருந்த பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார்- இங்கிலிஷ்காரர்கள் அதை “ஃப்ரெஞ்சு அம்மை,” என்று சொல்கையில், ”பாரி நகரத்தார்களுக்கு (பாரிஸ்) அது “மார்பஸ் ஜெர்மானிகஸ்”, நேபிள்ஸ் நகரத்தில் அது ஃப்லாரெண்டைனியர்களின் நோய், ஜப்பானியர்களுக்கு அது சீன நோய்.” என்று எழுதினார். நாம் எல்லாரும் கொள்ளை நோய்கள் வெகு தொலைவிலிருந்து நமக்கு (அழையா) விருந்தாளியாக வருகின்றன, அவை நம்முடைய வியாதிகள் இல்லை, ஒரு போதும் நம்முடைய பிழையால் வந்தவையும் இல்லை, என்று நினைக்க விரும்புகிறோம்.

திருப்பம்

“சபரி! உங்க ஒய்ஃப் உங்களுக்காக மெழுகா உருகறாங்க. பொதுவா மனோதத்துவ விஷயங்கள்ல ஒய்ஃப் சப்போர்ட் பண்றது அபூர்வம். உங்க கனவை உங்க பயங்கள உங்க ஒய்ஃப் கிட்ட சொல்லுங்க. அப்ப இந்த விஷயத்தை ரெண்டு மனசு ஹேண்டில் செய்யும். அவங்க மனசு இயங்கற விதத்தோட ஒரு பகுதி உங்களுக்குள்ள வந்தாலே நீங்க வெளியில வந்திடலாம். ஒரு பெரிய கதவை சாவி போட்டு திறக்கறாப் போல.’’

இழந்தது

உடன் இருப்பவர்களினால் அறிவு எப்படி மாறுகிறது என்பது ஆச்சர்யமானது. இள வயதில் சிறுவர்கள் கபடம் இல்லாமல் திரியும்போது வேறு இடத்திலிருந்து வரும் ஒருவனின் புதுப் பழக்கத்தை இவர்கள் அத்தனைபேரும் உடனே கற்றுக் கொள்வார்கள். பள்ளி, கல்லூரியென மாறும்போது நண்பர்களாக அமைபவர்களின் பழக்கங்களை எல்லோரும் கைகொள்கிறார்கள்.

ஒரு கோப்பின் சுயசரிதை

ஒவ்வொரு அலுவலகங்களும் ஒவ்வொரு விதமான ரகசியத்தைத் தன்னகத்தே கொண்டு தடையின்றி இயங்கி வருகின்றன. நிர்வாகம் என்பது ரகசியங்களின் கிடங்கு. அங்கே கிளரக் கிளர ஏதாவது வந்து கொண்டேயிருக்கும். பிசுக்கு நாற்றம் அடித்துக்கொண்டேதான் இருக்கும். அந்த நாற்றத்தை நறுமணம் என்று கருதித்தான் அங்கே இயங்கியாக வேண்டும். அங்கு இயங்குபவர்கள் அனைவரும் அறிந்ததுதான், நுகர்ந்ததுதான். ஆனால் சொல்லி வைத்தாற்போல் அது நறுமணம்தான் அத்தனை பேருக்கும்.

கவசக் கோன்மை

உலகெங்கிலும் அரசுகளும், அறிவியலாளர்களும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பரிந்துரைக்க, மனிதர்கள் கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிந்து நடமாடுகிறார்கள். அது மட்டுமே போதுமானதன்று. கடந்த இரு வாரங்களாகக் கவசம் அணிவது மக்களின் விருப்பம் சார்ந்து இருந்ததிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது மக்களின் நடத்தையில் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது என்பதை “கவசக் கோன்மை”

இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்

உணவு வங்கிகள் பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை சார்ந்துள்ள பொட்டண உணவறைகள் (food pantries), சிற்றுணவகம் (soup kitchens), மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.

கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா?

இன்றைய உலகம் நடுக்கத்தோடு உச்சரிக்கும் நோயின் புனை பெயர் கோவிட் -19. முழுப்பெயர் கொரோனா வைரஸ் 2019. கொரோனாவுக்கு ஏன் அஞ்சவேண்டும்? ஏனெனில்  அதன் போக்கில் விட்டுவிட்டால் உலக மருத்துவக் கட்டமைப்பு நொறுங்கிவிடும். எனவே தான் உலக சுகாதார நிறுவனம் (WHO ) முதற்கொண்டு எல்லோரும் பதறிப்போய் இருக்கிறார்கள். “கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா?”

மகரந்தம்

அண்டக்கதிர்களைக் கண்டறியும் பரிசோதனையில், 2006 மற்றும் 2014-லில், பனியிலிருந்து அதிக சக்தி வாய்ந்த அண்டக்கதிர்களின் தலைகீழ் அருவியைக் கண்டறிந்தார்கள். முதலில் அதைப் பின்னணி ஓசை என்றே நினைத்தாலும், 2016-லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அது தலைகீழ் அண்டக் கதிர்ப் பொழிவு எனச் சொன்னது. இது ஓர் இணை உலகம் இருக்கலாம் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியது.