நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.
ஆசிரியர்: மணிகண்டன்
என் நண்பன் ஐராவதம்
அங்கு பெரியவர் ரா.வீழிநாதன் அவர்கள், “சாதனா சமாஜ்” என்று ஒரு சபையை நடத்தி வந்தார். அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனை 2 மணி நேரம் நடக்கும். அங்குதான் நான் ஸ்வாமிநாதனை முதலில் சந்தித்தேன். பதினைந்து நிமிடம் அவன் லா.ச.ரா, தி.ஜானகிராமன் முதலிய பிரபல தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது நாவல்களையும் பற்றிப் பேசினான். நானோ முழு சூன்யம். “நாளைக்கு ஸ்கூல் இல்லை. எங்கேயாவது வெளியே போவோம்,” என்றான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்தான். நாந்தான் அவற்றைச் சரியாய் உபயோகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்குக் குடும்பச் சுமைகள் அதிகம். ஆனாலும் ஸ்வாமிநாதன் என்ற அந்த நண்பன் என்மீது விடாமுயற்சிகள் செய்து வந்தான்.