குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம் ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது.
Tag: லாவண்யா சுந்தரராஜன்
புதுவெளிச்சம்
இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய் ஒளிர்தலைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை, கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும் வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை.
அவன் இனி காப்பி குடிக்க மாட்டான்
ஆனால் அந்த ஆசுவாசமெல்லாமே கியான் ஹஷூ அவனுக்குப் பயிற்சியளிக்கும் நபராக நியமிக்கப்பட்ட பின்னர் தலைகீழானது. அவனுக்கு இந்தியர்களைப் பிடிக்காது. அவர்கள் தங்களுடைய ஆங்கில அறிவு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தனியிடத்தை பிடித்துக் கொள்கிறார்கள். உடல் உழைப்பு கொஞ்சமும் இல்லை என்று நினைப்பான்.
