சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

கதையில் வரும் கணவனும் absolution பெறத் தான் முயற்சிக்கின்றானோ? பெண்களுக்கான வெளி  மறுக்கப்படுவதற்கு தான் காரணம் அல்ல, அதற்கு  தான் குற்றவாளி அல்ல என்பதை நிறுவ தான் அவன் முயல்கிறானா? எனில் அவன் போலியா? இன்று அவனைப்பற்றிய விமர்சனம் எப்படியிருக்கக் கூடும்? மனைவிக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதிலுள்ள agency, பெண்ணிற்கு கிடையாதா, அவளுடைய ஒப்புதல்/consent பற்றி சிந்திக்காதவன் என்று இன்றைய கலாச்சார சூழலில்/ zeitgeistல்  புழக்கத்தில் உள்ள சொற்களை அவன் மீது சுமத்தலாம்.

கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்

This entry is part 52 of 72 in the series நூறு நூல்கள்

தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி),  தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான்  சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான்

மினுங்கும் பொழுதுகள்

‘நிழல்கூட அளவாக விழுமாறு எழுப்பபட்ட பிரம்மாண்ட’ கட்டிடத்தின் முன்னுள்ள புங்கை மரம் எப்படி தப்பித்தது என்பது குறித்த வியப்பும் (‘என் கடவுளின் சாமரம்’), வேலை முடிந்து திரும்புகையில் தற்செயலாக தென்படும் ‘இளம்பழுப்பு’ நிலவும் (‘இரவின் ஒளி’), ‘வீடும் வெளியும்’ பகுதியின் வெளிச்சத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் நகரம் வெகு தொலைவில் வந்துவிட்டதை சுட்டுகிறது.

கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும்

“..பண்பட்ட வாழ்வின் தொனிக்கு அதற்கேயுரிய அவசியம் உண்டு, ஏன், அதற்கென்று ஒரு நாயகத்தன்மையும் இருக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள நாம் கற்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், நவீன இலக்கியத்தின் சீற்றமிகு பாவனையால் பொருள்படுவது அனைத்தும் சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்தான் என் உரைநடை குறித்து நான் சொல்லியிருக்கக்கூடியது.”