தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்

தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக…

சினிமா நடிகர் சோ

அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.

சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.

பிரதமர் மோதியின் கலிஃபோர்னிய விஜயமும், டிஜிடல் இந்தியாவும்

ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு ….ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். …அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். ..நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் ..வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
(பதிலில் மோதி), இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் உண்டு. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புகிறோம். ….
1.எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள் –நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக…. மக்களை வளப்படுத்த.. அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் கருவிகளாக உள்ளன.
2.ஈ-கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. … மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும்.

துப்புத் தெரியாத காட்டில் மேற்கு- ஜான் லெ காரீயின் அந்தகார உலகு

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக 2008ல் எழுதிய நாவல் எ மோஸ்ட் வான்ட்டட் மேன். அது சென்ற ஆண்டு ஆன்ட்டொன் கொர்பெய்ன் என்ற டச்சு இயக்குனரால் சினிமாவாக எடுக்கப் பட்டது. எ மோஸ்ட் வாண்ட்டட் மேன் ஜெர்மனியில் ஜிஹாதிகளின் தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப் பட்ட பொழுது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம் தான். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி உற்பத்தி நகரமாகவே மாறி விட்டிருக்கிறது.

நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ஆர்.எஸ்.நாராயணன்

மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள்

உள்ளங்கையில் உலகம்

கூகுளின் அபாரமான சேவைகளில் முக்கியமானது கூகுள் எர்த். நினைத்த நேரத்தில் நாம் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலைக்கும் பறந்து சென்று பார்த்து விட முடிகிறது. ஊர் நினைவு வருகிறதா உடனே மனவேகத்தில் ஊருக்குப் போய் கூகுள் எர்த் மூலமாக நமது தெருக்களில் நடந்து விட்டு வந்து விடலாம். உலகின் பல இடங்களுக்கும் சமீபத்திய செயற்கோள் படங்களை அளிக்கின்றன. சேவையைப் பொருத்து, உடனடியான நேரடியான படங்களை அளிக்கின்றது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.

ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு

அபு ஒரு மிக எளிமையான நேரடியான கதை. வாழ்வின் பின்மாலைப் பொழுதைத் தொட்டுவிட்ட ஒரு முஸ்லிம் தம்பதியினரின் கதை இது. தங்கள் ஒரே மகனாலும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற அந்த முஸ்லிம் தம்பதியர் இஸ்லாமிய பக்தி மார்க்கத்தில் ஊறியவர்கள். தங்களுடைய ஒரே லட்சியமான ஹஜ் யாத்திரையை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போவதை மட்டும் சொல்லும் மிக எளிய கதை. சிடுக்குகளும், சிக்கல்களும், திருப்பங்களும், அதீதமான நாடகீய உச்சங்களும் இல்லாத, ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்களை மட்டும் சொல்லும் ஒரு சினிமா.

வெங்கட் சாமிநாதன் – பகுதி 2

தனது கடுமையான விமர்சனப் பார்வைகளுக்கு நடுவிலும் கூட வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய பல குத்தல்களைப் பொதிந்து வைத்திருப்பவர் வெ.சா. ”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” என்ற கிண்டல் வெகு பிரபலமான ஒன்று. இதழாளர் மாலனை “தென்னாட்டு குல்தீப் நய்யார் என்றும் பெஞ்சமின் ப்ராட்லி” என்றும் புகழும் உதயமூர்த்தியைப் பற்றி தனக்கேயுரிய அங்கதத்துடன் வெ.சா எழுதுகிறார், “ இதன் மூலம் மாலனைப் பற்றி மட்டும் அல்ல தன்னைப் பற்றியும் எம்.எஸ்.உதயமூர்த்தி சொல்லிவிடுகிறார்.”

வெங்கட் சாமிநாதன்

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

‘குட்டி ஸ்ராங்க்’ – மலையாளத் திரைப்படம்

ஷாஜியின் வனப்பிரஸ்னம் ஒரு கதகளி சினிமா. ஜெயராஜின் களியாட்டம் ஒரு தெய்யம் ஆட்டம் பற்றிய சினிமா. இந்த சினிமாவில் இந்த சவிட்டு நாடகம் ஐசக் தாமஸ் கொட்டுக்காப் பள்ளியின் அற்புதமான மனம் மயக்கும் இசையுடன் நிகழ்த்தப் படுகிறது. நாடகத்தின் சோகமான காட்சிகள் போலவே பருவ மழையின் நடுவே கதை மாந்தர்களின் போராட்டங்களும், பேராசைகளும், கொலைகளும் நிகழ்ந்து குட்டி ஸ்ராங்க்கின் தோணி மீண்டும் ஒரு சூறாவளிக்குள் தள்ளப் படுகிறது.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி

விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாக்கிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப் படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3

விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2

எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

ஜூலை 25ல் இருந்து விக்கி லீக்ஸ் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள்? ஏன் வெளியிட்டார்கள்? அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன? இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது?

சுகாவின் நட்சத்திரம் பார்த்தல் கிளறிய சில நட்சத்திர நினைவுகள்

தினமும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போய் தபால்களைக் கொடுத்து விட்டு அடுத்த ப்ளைட்டிலோ ரயிலிலோ கிளம்பி மதுரைக்கு வருவது அவனது வேலை. இன்னிக்கு யார் கூட வந்தா தெரியுமா என்பான், நாங்களும் அந்நாளையப் பிரபலங்களை அடுக்கி முடித்தவுடன் ”இன்னிக்கு என் பக்கத்து சீட்டில பாரதி ராஜா பாத்துக்க” என்பான்.

அங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2

இதைப் பார்க்கையிலேயே நமக்குத் தோன்றும் முதற்கேள்வி, இவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்கும் ஒரு பெரும் சோக நாடகத்தை ஒரு திரைப்படமாக்க தமிழ் சினிமாவுக்கு ஏன் இத்தனை பத்தாண்டுகள் ஆயிற்று என்பதுதான். இப்போதுமே நம் மக்கள் இத்தகைய சினிமாவைப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் அதைக் கவனிப்பார்களா என்பது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு.

அங்காடித்தெரு – ஒரு பார்வை

தமிழ் சினிமா என்பது டெக்னாலஜியின் துணை கொண்டு நிகழ்த்தப் படும் ஒரு பிருமாண்டமான பொழுது போக்குச் சமாச்சாரம் என்ற விதியில் இருந்து வெளி வந்து, சமூக அவலங்களையும் அதன் யதார்த்தம் கெடாமல் சொல்வதற்கு சினிமா என்னும் மீடியாவையும் பயன் படுத்தலாம் என்பதை நிரூபித்து, முறைசாரா ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக் கொணரத் துணிந்திருக்கிறார் வசந்த பாலன்.

வடூவூரார் படைப்புகள்

வடூவூராரின் நாவல்கள் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் பின்னர் அறுபதுகள் வரையிலும் கூட தமிழ் நாட்டில் நிலவி வந்த தேவதாசி முறையும், தாசிகளும் எழுத்தாளர்களின் நினைவுகளையும் கதைகளையும் பெரும் அளவில் ஆக்ரமித்திருக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் தாசிகளின் நிலை குறித்தும், தாசிகளினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் இழிவுகள், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் என்று தாசிகளைச் சுற்றியே அந்தக் காலத்தில் நிறைய நாவல்களும் நாடகங்களும் புனையப் பட்டுள்ளன.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’

நாவலில் இருந்து அந்தக் காலக் கட்டத்தில் நிலவிய பல சமூகச் செய்திகளை நாம் ஊகித்து அறிய முடிகிறது. முக்கியமாக, ஜமீன்தார்கள் போன்ற பணக்காரர்களிடமும், ஆதிக்க ஜாதிகளிடமும் தாசிகளின் செல்வாக்கு, தாசிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன இந்த நாவலின் மூலம் தெரிய வருகின்றன.

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.

திலீப்குமாரின் இலக்கிய உலகம்

தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை.