தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்

ரிக்வேதத்தில் காணப் படும் “சப்த சிந்து” நிலவியல் ஐயத்திற்கிடமின்றி துல்லியமாக சிந்துவெளி அகழாய்வு இடங்களையும் முத்திரைகள் கண்டெடுக்கப் பட்டுள்ள நிலப் பகுதிகளையும் விவரிக்கிறது. Satellite Imaging மூலம் ரிக்வேதம் கூறிய சரஸ்வதி நதி ஓடிய வறண்ட படுகையும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நிலவியல் குறித்த பிரக்ஞை தொடர்ந்து மகாபாரதம், புராணங்கள் வரையும் அதற்கப்பாலும் நீடிக்கிறது. ஆனால், தமிழில் உள்ள எந்தத் தொல் நூலிலும் சிந்து நதி, சரஸ்வதி நதிப் பகுதிகளின் நிலவியலுடன் மிக remote ஆகத் தொடர்புறுத்தக் கூடிய மிகச்சிறு குறிப்பு கூட இல்லை.

காளியின் குழந்தை ராம்பிரசாத்

சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.

'சிப்' தொழில்நுட்பம்: பாதையும் செல்திசையும்

மிக நேர்த்தியான ஒரு இந்திரஜாலத்தை சமைக்கும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் முதிர்ந்திருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு சாதனத்திற்குள்ளும், அதற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் மிகச் சிக்கலான ஒரு பிரம்மாண்டமான மின்னணு உலகம் உள்ளது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அந்த உலகத்தின் மென்பொருள் (software) கண்ணுக்குப் புலப்படாதது. வன்பொருளின் (hardware) வெளித்தோற்றம் கண்ணுக்குப் புலப்படக் கூடியது. எந்த மின்னணு சாதனத்தைத் திறந்து பார்த்தாலும், அதன் பிரதான உள்ளுறுப்புகளாக, விதவிதமான மரவட்டைகள் போல அமைதியாக வீற்றிருக்கும் ‘சிப்’களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த ‘சிப்’களின் கருஞ்சாம்பல் நிற மூடிக்குள் உள்ள அதிசிக்கலான மின்னணுச் சுற்றுகள் (Electronic circuits) தான் அந்த சாதனத்தின் முக்கியமான வன்பொருள் கட்டமைப்பாக இருக்கின்றன. இன்றைய கணினி யுகத்தின், இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது சிப் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இணைந்தே பயணித்துள்ள ஒன்று.

கண்ணனின் அன்பில் கரைந்த கவிமனம்: ரஸ்கான்

ரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.

கலைவெளியில் ஒரு தாரகை: வெ.சாவுக்கான இடம்

தமிழின் செவ்விலக்கிய மரபைக் குறித்து வெ.சா அறிந்திருக்கவில்லை, அதை முற்றிலுமாக அவர் புறக்கணித்தார் என்று கூறப் படுகிறது. இது உண்மையல்ல. அகநானூறு முதலான சங்கப் பாடல்களின் அழகியலையும் காதா சப்தசதி என்ற பிராகிருத மொழியின் பழம்பாடல் தொகுப்பையும் ஒப்பிட்டு வெ.சா எழுதியிருக்கிறார். சுவடிகளை மீட்டெடுத்த உ.வே.சாமிநாதையரின் பணியை உயர்வாகவே மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபிலக்கியம் முழுவதையும் எந்தக் கலாபூர்வமான அளவீடும், ஆழமான நோக்கும் இன்றி சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளும் போலித் தனத்தைத் தான் அவர் கண்டித்தார்.

பரதக் கலைஞர் சங்கர் கந்தசாமியுடன் ஒரு மாலை உரையாடல்

மலேசியாவைச் சேர்ந்த சங்கர் கந்தசாமி ஒரு சுவாரஸ்யமான பரதக் கலைஞர். இந்த 47 வயதில் நாட்டிய அரங்கில் உயிரோட்டமும் துடிப்பும் சக்தியும் ததும்பும் அவரது பிரசன்னம் பிரமிப்பூட்டும் ஒன்று. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஒருவரே தனியாக ஆடும் நிகழ்ச்சிகளில் கூட சலிப்பு ஏற்படாமல் புதுமைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் அவரது கலைத்திறனும் சிருஷ்டிகரமும் ஆச்சரியப் படுத்துபவை. தனித்துவமிக்க நர்த்தகராகவும், நாட்டிய ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் : “அந்த அழகியலின் அடிப்படை ஆண் அல்லது பெண் கலைஞரின் தன்னுணர்வு தான், instinctive feeling. சிவனுடைய தாண்டவமோ, அல்லது விஷ்ணுவின் காம்பீர்யமோ அல்லது கால்களை வீசி குதித்து ஆடுதலோ ஆண்மை ததும்பும் விஷயங்கள். அவை ஒரு நர்த்தகரின் உடலம் (frame) மீது இயல்பாகக் குடி கொள்கின்றன. அவற்றை பெண் கலைஞர்களும் செய்யலாம் தான். ஆனால் செய்தால் அந்த அளவுக்கு இசைவதில்லை. பரதத்தில் “வேஷம்” என்பது இதை சமன் செய்வதற்காகத் தான் இருக்கிறது.”