பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’

அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள்.  ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.

எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்

உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்! எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.

மெய்நிகராக்கம்: ஒரு கணினி வாங்கினால் 100 வாங்கின மாதிரி

ரிச்சி ஸ்ட்ரீட்டிடன் சகல இடுக்குகளிலும் நுழைந்து, கிடைத்த அனைத்து பிட் நோட்டீஸ்களையும் அலசி, ஆராய்ந்து ஒருவழியாக தன்னுடைய லேப்டாப்பை தேர்வு செய்திருந்தார். இன்டெல் பென்டியம் 1.5 பிராசசர், 8 ஜிபி ராம், 1 TB ஹார்ட் டிஸ்க், 2 MP HD வெப்காம், ஹெச்டி கிராபிக்ஸ் கார்ட் என ஏகப்பட்ட அம்சங்களை காட்டி 52 ஆயிரம் ரூபாய்க்கு பில் கிழித்திருந்தார்கள். ‘பேஸ்புக், ஜிமெயில், யுடியூப் பார்க்குற நமக்கெல்லாம் எதுக்குங்க இது?’ என்னும் கேள்விக்கு சரியான பதிலை நண்பரால் சொல்ல முடியவில்லை. நம்முடைய தேவை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இருப்பதில்லை. வாங்கி குவிக்கும் வரை யோசிப்பதில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. 300 ஜிபி கொள்ளளவு கொண்ட வன்தட்டில் 30 இயங்குதளத்தை நிறுவி, அதை 3000க்கும் அதிகமானோர் எவ்வித இடையூறும் இன்றி, பயன்பாட்டுக்கு கொண்டுவருவது இன்று சர்வ சாதாரணமாகியிருக்கிறது.

செயற்றிட்ட மேலாண்மை (Project Management) அனுபவக் குறிப்புகள்

ஒன்றரை வரியில் திருவள்ளுவர் சொல்லி முடித்துவிட்டார். இதனை விளக்குவதற்கு ஓராயிரம் பக்கங்கள் தேவைப்படலாம். பிராஜெக்ட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பொருளை உருவாக்குவதோ, அல்லது ஒரு பொருள் உருவாக்குவதற்கான உதவிகளைச் செய்வதோ அல்லது தலைபோகும் பிரச்னைக்கு ஒரு முடிவை தேடித்தருவதேயாகும். புதிதாக ஒரு கார் தயார் செய்வது ஒரு பிராஜெக்ட்தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காருக்குப் பெயிண்ட் அடிக்கும் பணியைச் செய்வதும் ஒரு பிராஜெக்ட்தான்.

பண்பாட்டைப் பேசுதல் – ஒரு பார்வை

கோயில் பற்றி பேசுவது எப்போதும் சுவாரசியமான விஷயம். கோயில், வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல. ஒரு சமூகத்தின் அரசியல்,நிர்வாகம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை சுமந்து நிற்கும் காலப் பெட்டகம். கோயிலும், கோயிலைச் சுற்றிய மாட வீதிகளும் அதன் கட்டமைப்புகளும் சமூகத்தில் ஆன்மீகத்திற்கு இருந்த உன்னத நிலையை பளிச்சென்று சொல்லிவிடுகின்றன. இந்து சமூகத்தை வேரோடு அழிப்பதற்கான செயல்திட்டம், அதிகார பீடங்களாக இருக்கும் கோயில்களை அழிப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது கைபர் கணவாயில் உள்நுழைவதிலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.