சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்

டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. …புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும்.  பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். .. இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச்  செய்யும்.