காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்

வாழ்க்கைக்கு மிக அருகிலானது

தன் சக அதிகாரிகளிடம் கதை சொன்னபோது ரயபோவிச் இதைச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா- இருட்டு அறை லைலாக், பாப்லர் மற்றும் ரோஜா மணம் கமழ்ந்திருந்தது என்று? அந்தப் பெண் தன்னை முத்தமிட்டபோது பெப்பர்மிண்ட்டின் தூண்டல் போல் கன்னம் வெம்மையாகிச் சிலிர்த்துக் கொண்டது, என்று ரயபோவிச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஒரு கதையின் ஜீவன் அதன் மிகையில் இருந்தால், அதன் அதீதங்களில் இருந்தால், சீர்மைக்கும் வடிவ நேர்த்திக்கும் அப்பாற்றபட்ட விஷயங்களின் கலவரத்தில் இருக்கின்றது என்றால், ஒரு கதையின் ஜீவ-மிகை அதன் நுண்விவரங்களில் இருக்கிறது என்றும் சொல்ல முடியும். பெப்பர்மிண்ட் பற்றிய நுண்விவரம், ரயபோவிச் தன் கன்னத்தில் உணரும் சிலிர்ப்பு, நமக்காக தங்கி நிற்கிறது; அந்த இடத்தை நாம் தேய்த்துக் கொண்டால் போதும். நுண்விவரங்களே ஒரு கதையை அந்தரங்கமானது ஆக்குகின்றன. கதைகள் நுண்விவரங்களால் ஆனவை; நாம் அவற்றில் சிக்கிக் கொள்கிறோம்.