அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?

ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஊர் சதாவதானிகளும் சோடசாவதானிகளும் இருந்த நிலை துரதிர்ஷ்டவசமாக மாறி, இவர்கள் ஒரு அரிய மானுட வர்க்கமாகி விட்டார்கள். இந்த அவதானக் கலைகளை பயில எவ்விதமான பயிற்சிகள் … ஒருவர் அஷ்டாவதானமோ தசாவதானமோ செய்யும் போது அவரது மூளை நியூரானிய இயக்கங்கள் செயல்படும் விதம் இவ்வித நவீன கருவிகளால் அறியப்பட்டால் மானுட மனதின் அதி ஆழ செயல்பாடுகள் குறித்த ஒரு சித்திரம் நமக்கு உருவாகலாம். அவதான நிகழ்வுகளின் போது ஏன் தொடர் இறைநாம உச்சரிப்பு ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது? ஒருவித மாற்று பிரக்ஞை தளத்திற்கு (altered state of consciousness) அவதானியை அழைத்து செல்லவா? அதன் மூலம் அவரது நுண்ணறிவுத் திறன்கள் அதிகரிக்கின்றனவா? அப்படி இருக்கலாம் என கருதத்தக்க ஒரு கருத்தை செய்குத்தம்பி பாவலரே சொல்லியிருக்கிறார்: “அவதானத்திற்கென்று மேடை ஏறிவிட்டால் ஒரு தனி உணர்வு உடலை எழுப்பும்; உள்ளத்தை மலரச்செய்யும்; அறிவை ஒளிரச் செய்யும்.; பிறகே என் வாயினின்றும் சொற்கள் வெளிவரும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல இயலாது.” … இவ்வாறு பன்மை நுண்ணறிவு மேலோங்கிய ஒரு மாற்றுப் பிரக்ஞை தளத்துக்கு செல்லும் அறிவியல் ஒன்று நம் கல்வி மரபில் பரவலாக இருந்திருக்கிறதா? அதன் நிகழ் கலை வெளிப்பாடுதான் அவதான நிகழ்ச்சியா?

தேம்ஸில் தொடங்கி வோல்காவிலிருந்து கங்கை வரை

’ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வலிமையால் தம் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட பண்பாடுகளை தம் பார்வையிலிருந்து நோக்கி உருவாக்கிய’ அறிதல் புலம் அது. அவர் இந்த பார்வைகள் அனைத்துமே குறுகிய காலகட்டங்களில் மட்டுமே இயங்கியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார். ”காலனிய மானுடவியல் முறை என்பது உருவாகி நானூறு ஆண்டுகளே ஆகியுள்ளது. அதற்கு மேல் அது வாழ முடியவில்லை. சோவியத் மானுடவியல் முறையோ உருவாகி நாற்பதாண்டுகளே ஆகியுள்ளது. அது எத்தனை ஆண்டுகள் இன்னும் தாக்குப்பிடிக்குமென்பது தெரியாது.” என்று சொல்லும் ஹால்டேன் மார்க்சிய மானுடவியலில் காலனியக் கூறுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒளி வளைவு அறிதல்

கருந்துளையை (black hole) எடுத்துக் கொள்வோம். சந்திரசேகர் முன்கணித்த படி ஒரு குறிப்பிட்ட அளவு நிறையைக் காட்டிலும் அதிகமாக உள்ள விண்மீன்கள் இறுதியில் கருந்துளைகள் ஆகிவிடுகின்றன. நியூட்டானிய இயற்பியல் தன்னளவில் கருந்துளைகளை விளக்கிட முடியும். புவி ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிச்செல்லும் திசை வேகம் புவி ஈர்ப்பு விசையினை ஏற்படுத்தும் நிறையைப் பொறுத்தது. ஒரு பொருளின் புவி ஈர்ப்பு விசையின் தப்பிச்செல்லும் திசை வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது கருந்துளை ஆகிவிடும். கருந்துளையின் இருதய பகுதியில் பொது சார்பியல் கோட்பாடு கால-வெளிக்கு ஒரு முடிவிலி வளைவு இருப்பதை காண்கிறது. கருந்துளையின் மையத்தின் ஆரம் பூஜ்ஜியம் என்கிறது பொது சார்பியல் கோட்பாடு. ஆனால் க்வாண்டம் இயற்பியல் கட்டாயம் ஆரம் இருந்தாக வேண்டும் என்கிறது – அது மீச்சிறியதினும் சிறியதாக இருப்பினும் இருந்தாக வேண்டும் என்கிறது.

வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம்

சாமிநாதனின் அழகியலில் ஒரு அறிவியலுக்கான கறார் தன்மை இருந்தபடியே உள்ளது. அபிநவ குப்தரின் தொடர்ச்சி என்று கொள்ளலாம் – அல்லது தொல்காப்பியரின். இந்திய மரபில் அழகியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே அழகியலுக்கான ஒரு பொதுமைத்தளத்தை தேடியிருக்கிறார்கள். மேற்கத்திய விமர்சகர்கள் அதை மெல்ல மெதுவாக எட்டினார்கள். அதற்குள் நாம் விக்டோரிய மதிப்பீடுகளுடன் கலை ஆன்மிகம் பக்தி ஒழுக்க விதிகள் எல்லாவற்றையும் இணைத்த ஒரு bastardized நிலைக்கு வந்துவிட்டோம்.

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

தவளைகளின் பாடல்

பிராம்மணர்கள் உச்சாடனம் செய்யும் வேத ஒலிகள். வேத சமுதாயத்தின் முதன்மையான சடங்குகள். இருந்தாலும் தவளைகளின் ஒலிகளுடன் இணைத்து சிலேடையாக காட்டுகின்றன இப்பாடல்கள். ஏன்? இதை இயற்றியவர்களின் நோக்கம்தான் என்ன?

உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும்.

கல்

பார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன.

ஹாலிவுட் உருவாக்கிய மனநோய்

MPD என்பது உண்மையாலுமே ஒரு மனநிலை பிறழ்ச்சி நோய்தானா அல்லது வெறும் ஹாலிவுட் ‘பில்டப்’தானா? அல்லது அதைவிட மோசமாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மனசிகிச்சையாளர்களே இந்த நினைவுகளை உள்செலுத்துகிறார்களா? அன்னியன் திரைப்படத்தில் வருவதுபோன்ற மனப்பிறழ்ச்சிக்கு சாத்தியக்கூறுகள் உண்டா?

பனிப்போரின் இரகசிய பரிசோதனைகள்

ஆனால் பனிப்போர் யுகத்திலோ அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகள் என்கிற பெயரில் பல மூர்க்கத்தனமான மற்றும் முட்டாள்தனமான பரிசோதனைகளில் வல்லரசுகள் பணத்தை செலவிட்டன. சில நேரங்களில் எதிரியை இப்படி வீணாக செலவழிக்க வைக்க தம் பக்கத்து முட்டாள்தனங்களுக்கு உண்மை முலாம் பூசி பெரிதுபடுத்தி மறு முகாம்களில் பரவ்விடவும் இரு வல்லரசுகளும் தயங்கவில்லை.

பெண்ணின் நெருப்பு

கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.

காலப்பயணம் – 2

எலெக்ட்ரான்களும் ஃபோட்டான்களும் காலப்பிரவாகத்தில் செய்யும் திசை மாற்றங்களை உங்கள் எதிர்வீட்டு பெண்ணும் செய்யமுடியுமா? செய்யமுடியும். உண்மையான கேள்வி – அதற்கான நிகழ்தகவு சாத்தியமாகுமா? உங்கள் கோப்பை தேநீர் தானாக சூடாகுமா? உங்கள் துணையின் கோபம் தானாகக் குளிரடையுமா? வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் புள்ளியியல் ஓட்டைகளுக்குள்ளாக கால இயந்திரத்தில் நாம் பயணிக்கமுடியுமா?

காலப்பயணம் – 1

ஐன்ஸ்டீன் வெற்றிகரமாக நிகழ்த்தியதொரு ஆதார இயற்பியல் கண்டுபிடிப்பை உபயோகித்து, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1943-இல் ஒரு கப்பலை காண முடியாமல் ஆக்கினார்களாம். இதனால் கப்பல் சிப்பந்திகள் சிலர் காலப்பயணத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்றார்கள் என்றும், இதனை வெளியுலகுக்கு சொன்ன மனிதர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு

மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் – சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா.

மனிதனாக விரும்பிய இயந்திரர்கள்

அஸீமோவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை – உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்?

ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்

செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.

ஹாலிவுட் பேயோட்டிகளும், உண்மைக் கதைகளும்

எக்ஸார்ஸிட்டுக்குப் பிறகு பல படங்கள் அதன் தொடர்ச்சி என வந்தாலும், உண்மையான அடுத்தப் பகுதி திரைப்படம் எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005-இல் வெளியானதுதான். எக்ஸார்ஸிஸ்ட் படத்தை விட இப்படம் ஒரு விதத்தில் முக்கியமானது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது. இத்தகைய பெரும் வெற்றி பெறும் ஹாலிவுட் திரைப்படங்களும், அதனைத் தொடர்ந்து அவற்றை பிரதியெடுக்கும் இந்திய திரைப்படங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.

வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்

அறிவியல் மற்றும் நவீனத்துவத்துக்கான ஒரு முக்கியமான எதிர்வினையாக புரோட்டஸ்டண்ட் மதமும் அதன் இறையியலும் இருந்தன. அடிப்படைவாதமும் தூய கிறிஸ்தவ வாதமும் அதன் முதுகெலும்பாக அமைந்தன. அமெரிக்க பூர்விகக் குடிகளின் அழிவை “வாக்களிக்கப்பட்ட பூமியாக” அமெரிக்காவையும் காலனிய குடிகளாக பூர்விகர்களையும் சித்தரித்து அவை நியாயப்படுத்தின அம்மட்டில் இம்மதம் அமெரிக்க பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது.

2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்

இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது.

சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?