பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

ஹீங்க் கொச்சூரி

குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.

தொலைந்துபோன புயல்

மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.

இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்

விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.

பித்தலாட்டக்காரன்

எப்படிப்பட்ட மனிதன் இத்தகைய ஒரு போலித்தனம் நிறைந்த இறுதிச் சடங்கென்ற பேரில் ஒரு கேலிக்கூத்தை உருவகித்து, நடிக்க முடியும் – ஒரு வெறியனா? துக்கத்தால் வாடுபவனா? பைத்தியக்காரனா? ஒரு இழிவான வஞ்சகனா? என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயில் பறவைகள்

தொடக்கத்தில் நான் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுடனும், தீவிர பெண்ணியவாதிகளுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் படித்த புத்தகங்களும், அவர்களது சிபாரிசை ஒத்தே இருந்தன. ‘ஹெகலின் மீது துப்புவோம்’ என்பது அப்படிப்பட்ட ஒரு புத்தகம், அதை எழுதியது ஒரு இத்தாலிய பெண்ணியல்வாதி. ஒரு நாள் மதியம் அதை சோஃபியாவுக்கு இரவல் கொடுத்தேன். நன்றாக இருக்கும், படித்துப் பார் என்றேன். அடுத்த நாள் சோஃபியா நல்ல மனநிலையில் இருந்தாள்; அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த போது, ஒரு அறிவியல் புனைவாக அது நல்ல புத்தகம் தான், ஆனால் அதைத் தவிர அதில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை என்றாள்.

கிளாரா

ரொபெர்த்தோ பொலானோ (Roberto Bolaño) தமிழில் : சிஜோ அட்லாண்டா அவள் பெரிய மார்பகங்களும், மெலிந்த கால்களும், நீலக் கண்களும் உடையவள். அவளை அப்படி நினைவுகூரத்தான் எனக்குப் பிடித்திருந்தது. ஏன் என்று தெரியாமல் அவள்மேல் பைத்தியக்காரத்தனமான காதலில் விழுந்தேன். துவக்கத்தில், அதாவது முதல் சில நாள்கள், முதல் சில “கிளாரா”