ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகிறான்….!

பார்த்துக்கொண்டிருக்கும் யசோதைக்குப் பெருமிதம் தாங்கவில்லை. ” ஆகா! இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே! பா சருந்த வாடா,” எனப் பூரிக்கிறாள். இங்கு தாயாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் பெரியாழ்வார் தன் குட்டன் கிருஷ்ணன் அமர்ந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமையைப் போற்றும் சொற்களும் இப்பாசுரத்தில் இடம்பெறுகின்றன. “மின்னலைப்போன்ற இடைகொண்ட பெண்களின் விரிந்தகுழலின்கண் மலர்களைமொய்க்கும் வண்டுகள் நுழைந்து இன்னிசையை…

எண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து…

Intelligence என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் என்று கொள்கையில் அது எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் எண்ணம், சிந்தனை, அறிவு (Intelligence), தகவல் அறிவு (Knowledge), நுண்ணறிவு, நுண்ணுணர்வு, அதி நுண்ணுணர்வு ஆகியன பற்றி ஒரு தெளிவான பார்வை எனக்குக் கிட்டவில்லை. வார்த்தைகள் வெவ்வேறு விஷயங்களை மாற்றி மாற்றி சுட்டுகிற மாதிரி இருக்கிறது. வாஸனா, கர்மா பற்றி இக்கட்டுரை பேசவில்லை என்ற பிறகு…

இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா?

இணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் …

கம்பனின் இரணியன்

பிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன். படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.

ஐன்ஸ்டீனும் எடிங்டனும்

முழுத் திரைப்படத்தையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக்கில் லைக் போட்டு, டிவிட்டரில் குறுஞ்செய்தி அனுப்பும் இன்றைய இளைஞர்கள், இந்தத் திரைப்படத்தின் 56;54 முதல் 58;11 வரையாவது அவசியம் பார்க்க வேண்டும். என் பார்வையில் நூறு பெளதிக வகுப்புகளுக்கு சமம். இந்த 77 நொடிகள்! ஐன்ஸ்டீனைப் பற்றி ஆறு சுயசரிதப் புத்தகங்கள் படித்த என்போன்றவர்களை உட்கார்ந்து இப்படிக் கட்டுரை எழுத வைத்தக் காட்சி அது. இக்காட்சியைப் பிறகு அலசுவோம்.

தான்ஸானியாவின் தேர்தல்

அந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது…

கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் – 2

நிக்கோலஸ் கார் என்ற அமெரிக்க எழுத்தாளர் கணிமையின் பயன்பாட்டை மின்சக்தியின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தியாளர்கள் தாம் உருவாக்கிய மின்சக்தியைத் தனித்தனியே பயனர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விரைவில் ஒரு பொதுவான மின்தொகுப்பு உருவாகி, மின்சக்தி ஒரு அடிப்படைப் பயன்பாடு ஆனது. மின் அளவிகளின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சக்தியை அளவிட்டு அதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் நிலை உருவானது. அதேபோல், கணிமையும் ஒரு தரநிலைப்படுத்தப்பட்ட அடிப்படைப் பயன்பாடாகி, உங்கள் பயன்பாட்டளவின்படி நீங்கள் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என்பதே காரின் நிலைப்பாடு. இன்று, மேகக்கணிமை அந்நிலையை நோக்கி வெகுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம் – பகுதி 11

நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பயனடைய, இந்த அமைப்பை மேலும் மென்பொருள் மூலம்,அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேருக்கு, ஒரு உணர்வி, செயலியுடன் சேர்ந்து எடுக்கும் முடிவு, நுண்ணறிப்பேசியில், காட்டப்படும் படத்தின் திசைப்போக்கு (orientation) மாற்றம் என்பது பற்றியக் கவலை? சாம்சுங்கில் ஒரு முறையும், ஆப்பிளில் இன்னொன்று என்றிருந்தால், குழப்பம்தான்.

உறவுக்கு ஒரு பாலம்

ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும்…

குர்திஸ்தான் – ஈராக்கின் காஷ்மீர்

ஈராக்கின் காஷ்மீர் என ஏன் சொன்னேன் என்றால், குர்திஸ்தானின் மலை முகடுகளும் எர்பில் நகரமும் பனிப்பொழிவுடன் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். மலைவாழிடங்களின் தொழில்களான மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கார்பெட்டுகள் செய்தல் என குளிர்காலத்தில் எர்பில் நகரமும் அதன் சுற்றுவட்டாரங்களும் அழகாகி விடுகின்றன. மேலும் குளிர்காலச் சுற்றுலா நடத்தும் அளவுக்கு சுற்றுலாத் துறையையும் வலிமையாக வைத்திருக்கின்றனர்.
டூரிஸ்ட்டுகள் வருவதற்கு முக்கியக் காரணம் தட்பவெப்பம். மேலும் ரம்மியமான இயற்கைச் சூழல். மெயின்லேண்ட் ஈராக்கில் தங்குவதற்குப் பயப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான வசதியான இடமாக இருப்பதால் எர்பிலுக்கு எப்போதும் கூட்டம் உண்டு.

நீர் மேலாண்மையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோமா?

ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

அறிவிப்புகள்

ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது.

மகரந்தம்

இதற்கு போப் பிரான்ஸிஸ் அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போப் பிரான்ஸிஸுக்கும் கனடா நாட்டு அரசு அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது என்கிறார் இந்த கட்டுரையாசிரியர் – கிறிஸ்துவ தேவாலயங்களால் நடந்தப்பட்ட பள்ளிகளில் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக குடும்பத்திலிருந்து பிரித்து காப்பகங்களில் தங்கவைத்து வன்முறை மூலம் ‘சீரமைப்பதாக’ குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாய் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். முன்னுமொரு காலத்தில் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளி மரண தண்டனை கொடுத்தார்கள். இப்போது அமெரிக்காவின் சில மாநிலங்களில் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். சவூதி அரேபியாவில் கூரிய வாளை வைத்து தலையைக் கொய்கிறார்கள். அவ்வாறு ஒரேயொரு நாளில் மட்டும் “ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்”

அன்னை தெரசா

துன்பப்படுபவர்களின் துயரம் நீக்குவதற்கான வழியை காண்பிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் சோகத்தை ‘அன்னை தெரஸா’ கொண்டாடிக் கொண்டிருந்ததாக நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் சஞ்சிகையில் வெளியான கட்டுரை எழுதியிருக்கிறது. மிகச் சிறப்பான மதபோதகராக செயல்பட்ட அன்னை தெரசா, சிகிச்சை அளிப்பதிலும் சக மனிதரை உயிராக பாவித்து இரட்சிப்பதிலும் எவ்வாறு நிலைதவறினார் என்றும் விளக்குகிறார்கள். “அன்னை தெரசா”

நீரூற்று

குழந்தையை இழந்த அந்தப் பெண் ஓலமிட்டாள். பார்வீஸுக்கு அது வக்கிரமான முறையில் பிரசவ வலியில் ஒரு பெண் கத்துவது போல இருந்த்து. அந்தப் பாவமான பெண் சாவைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள். அவர் மில்லிஸெண்ட்டிடம் உண்மையைச் சொல்லத்தான் வந்திருந்தார். தேநீர் விடுதியின் படிக்கட்டுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் கதையை அவரால் எழுத முடியாது, ஏனெனில் அரசாங்கம் தண்டிக்கும் என்பது காரணம். கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள், வலைத்தளங்களை நாள் பூராவும் சலித்து, வெளியிடப்படக் கூடாத செய்திகளைத் தணிக்கை செய்வதற்கு அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டது. கனவான் மாவ்லியனோவிடமிருந்து அவரை வேலையிலிருந்து நீக்குவதாகச் சொல்லி மிக ஆத்திரமான ஒரு தொலைபேசி அழைப்பு வரும். வசந்தகாலத்துச் சூரிய ஒளியில் ஒரு பூங்காவில் பார்த்த ஒரு காட்சி அவருக்கு நினைவு வந்தது. ஒரு திருமணம். தன் வெள்ளை ஆடையில், படமெடுப்பதற்காக பல கோணங்களில் நின்று கொண்டிருந்த முவ்ஸானா மிகவும் துன்புற்றுத் தெரிகிறாள். அவளுடைய சோகத்தின் காரணமோ இன்னும் இரட்டிப்பாக ஆகி இருந்தது. அவள் மாருஃபை மணக்க விருப்பமற்று இருந்தாள், அவளுடைய அப்பாவோ காணாமல் போய் விட்டிருந்தார். இந்தக் காட்சி பார்வீஸின் மனதை மாற்றியது. அவருடைய நம்பகத் தன்மை அற்ற புத்தி இன்னொரு புதிரான தாவலை நிகழ்த்தியது.

காமத்தில் திளைத்த இரவு

புத்தகத்தை மூடி கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு சோம்பல் முறித்தான்.தனக்கும் அவர் பேசியதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு பார்வையை வீசிவிட்டு தெருவிலிறங்கி வடக்கு குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மனம் முழுவதும் ஒருவித பயமும்,விரக்தியும்,கோபமும் காமத்தை விழுங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.இதயத் துடிப்பின் வேகம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வேகமெடுத்திருந்தது.இடுப்பில் ஒரு குடத்தோடும்,தலையில் ஒரு குடத்தோடும் தெருவிளக்கு மங்கிய வெளிச்சத்தில் தோன்றி மறைந்தாள் தெற்குத்தெரு விஜயா.விளக்கு வெளிச்சத்தில் அவள் கடந்த அந்த நிமிடங்கள் அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது இருட்டிற்குள் பீடியைப் பற்றவைக்கையில்.

ஒரு கணத் தோற்றம்

எத்தனை கட்டுப்படுத்தினாலும் மனம் இனம் புரியாத எதிர்பார்ப்பில் தவித்தது..அந்த சில நிமிட சந்திப்புக்காய் மனதின் ஓரத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பும் ஏக்கமும் படர்ந்தாற் போல் உணர்ந்தது கண்டு எனக்கே கொஞ்சம் விசித்திரமாய் இருந்தது. இன்றோடு இங்கு வந்து இரண்டு மாதமாகிறது.. இந்த நாட்களில் எண்ணிச் சில முறையே வீட்டிற்கு ரங்கு வந்திருக்கிறான்.ஆனால் வந்து சென்ற பிறகும் அவன் அன்பின், அக்கறையின் இருப்பு வீடெங்கும் நிறைந்திருக்கும். நானாக அவனை அழைப்பதில்லை. இன்று லேசான காய்ச்சலில் உடம்பும் மனமும் கொஞ்சம் பலவீனமானது போல இருந்ததால் …

காணாமல் போனவன்

என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

மராத்தி மொழிக் கவிதைகள்

எப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.

விசும்பின் துளி

மனைவியின் காது மூக்கு ஓட்டைகள் ஓட்டையாகவே இருக்க தென்னவிலக்கமாறு சீவுகள் காவல்காக்கிறது. தொண்டை ஓட்டையை மூட ஏதாவது ஒரு குச்சி இருந்தால் வயலெல்லாம் எதற்கு? தோடும் மூக்குத்தியும் அடகுவைத்து விதை வாங்கி விதைத்த விதைகால் நிலம் இது. விதை பழுதில்லை வயலும் பழிவாங்கவில்லை. பால் இல்லா மார்பை எத்தனை முறை சப்பினால் என்ன? வயல் பாலில்லா தாய்போல தவித்துக் கிடக்கிறது. குட்டிக்குட்டி பச்சப்பிள்ளைகள் தண்ணீர் இன்றி காய்ந்து சுருள்கின்றது. பாளம் பாளமாய் சூட்டில் வெடிக்கும் வயல் மார்வலியில் கேவும் தாயின் வாய்புண்போல வெடித்துக்கொண்டே போகிறது

யு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும்

யு.எஸ்-ல் காலம் காலமாக நடக்கும் பழமைவாதிகள் vs மிதவாதிகளின் கொள்கைப்போராட்டங்களின் அசிங்கங்கள்தான் ட்ரம்ப் போன்றவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. அதிபர் தேர்தல் என்றால் மிக நாகரீகமாகச் சொல்லப்படும் ஒபாமா vs ஜான் மெக்கெய்ன், க்ளிண்டன் vs பாப் டோல் போன்ற போட்டியாளர்கள் இருந்த தளங்களில் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்கள் போட்டியிட ஊக்குவித்தது எது? எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது? ஏன் பல குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்?