புதரை அடுக்கும் கலை – (பாகம்-2)

அந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.

“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”

மதிநுட்ப எந்திரம் – வரமா? சாபமா?

மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக  படிப்படியாக எந்திரங்களின்  துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion)   அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி  அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும்  என்று அஞ்சுகிறார்கள்.  மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.

பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்

ஒரு படைப்பாளி எவ்வளவு சமகாலப் பிரக்ஞை உடையவராயினும் பழமையை மறுப்பவராயினும் எழுத வேண்டும் என்ற உந்துதலை படைப்பாளி அடைவதில் இத்தனை ஆண்டுகளாக மானுடம் தொகுத்த மேன்மைகளின் ஒரு கூறு செயல்படவே செய்கிறது. இன்றைய பின் நவீனத்துவம் வரலாற்றை தொகுக்கப்பட்டவற்றை கட்டுடைத்துப் பார்க்கிறது. எனக்கு அப்படிப் பார்ப்பது ஒரு கடினமான கணிதச் சமன்பாட்டை எதிர்கொள்ளவது அல்லது  ஒரு சிக்கலான அறிவியல் சூத்திரத்தை விளக்குவது போன்றதொரு மூளைச் செயல்பாடு என்று மட்டுமே தோன்றுகிறது. இன்னொரு வகையான வாசிப்புக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எழுத்தின் பின்னிருந்து செயல்பட்ட அதிகாரத்தை கருத்தில் கொள்ளாமல் மனவெழுச்சியைக் கருத்தில் கொள்வது.  ஏன் அந்த வாசிப்பு அவசியம் என்கிறேன் என்றால் ஒரு வலிமையான படைப்பாளியை அவர் எவ்வளவு சமநிலையும் மேதைமையும் கொண்டிருந்தாலும் அவரை எழுதத் தூண்டுவது மனவெழுச்சி என்ற அம்சமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் எழுதுவது இலக்கியமாகிறது. அனைவருக்குமானதாகிறது. சமூகத்துடன் உரையாடுகிறது.

பாரதியின் இறுதிக்காலம்

This entry is part 17 of 72 in the series நூறு நூல்கள்

பாரதியின் இறுதிக்காலம் அத்தனை சுலபத்தில் முடிந்த ஒன்றா? இக்கேள்வியைத் தொடர்ந்த மணிகண்டன், யானை சம்பவத்துக்குப் பின்னரும் பாரதி இலக்கிய விசாரங்களில் நிறைய ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டடைந்ததோடு மட்டுமல்லாது “கோவில் யானை” எனும் படைப்பையும் தந்துள்ளதாக அறிகிறார். மணிகண்டனின் ஆய்வுப்படி, தனக்கு நடந்த சம்பவத்தைக் கொண்டு கோவில் யானை எனும் நாடகத்தை எழுதிய பாரதி அதை முதலில் 1920களில் சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கையில் ஸி.சுப்ரமணிய பாரதி எனும் பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு கலைமகள் இதழிலிருந்த நாடகம் இவர் கைக்குக் கிட்டியிருக்கிறது.

யூரிபிடீஸ்: நான்கு முன்னுரைகளில் ஓர் அறிமுகம் (பாகம் 1)

இக்காட்சியை வேறெங்கோ பார்த்த நினைவு மின்னி மறைந்தது. பின்னர் அன்றிரவு தூக்கத்தில் ஒரு வரி, நான் தேடியது கிட்டிவிட்டது. பக்குடுக்கை நக்கண்ணியாரின் புறநானூற்றுப் பாடல் :
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே

இந்தப் பாடலிலும் சாவுமேளமும்  திருமண கொண்டாட்டத்தின் இனிய முழவோசையும் ஒருசேர ஒலிக்கின்றன. “படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்” – என்ன ஒரு வரி, தமிழ்க் கவிதையில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வரி.  கடவுள்களையே நம்பக் கூடாது என்று ஹெராக்ளீஸ் முடிவெடுக்கிறான். இப்பாடல் அதைக் காட்டிலும் மிக நுட்பமாக அவர்களை விமரிசனம் செய்கிறது. பண்படுத்தல் என்ற கோணத்திலிருந்து. உலகத்தைப் படைத்தவனை விமரிசனம் செய்வதாகவே நான் இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

வாசகர் மறுவினை

உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.

டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

அகவெளியில் உலவும் குரல் – மௌனி

காலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.

சாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது? சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்?” (‘பிரக்ஞை வெளியில்’).

குளக்கரை

செய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.

உலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.

தானோட்டிக்கார்கள் – முடிவுரை

எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.

மகரந்தம்

கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.

பிறந்த நாள்

“இன்று மலையாளச் சிறுகதைகள் ஆங்கில மொழிக்கு மட்டுமின்றி பல உலக மொழிகளுக்கும் போட்டியாக இருக்கின்றன. ஏன் அவைகளை நீங்கள் படிக்கக் கூடாது?” என்றேன்.

ஓ, அவர்கள் சிலவற்றைப் படித்திருக்கின்றனர்.

“பெரும்பான்மையான சிறுகதைகள் வறுமையைப் பற்றிப் பேசுகின்றன. ஏன் அது மாதிரியாக எழுதவேண்டும்?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“எல்லாக் கதைகளையும் படிக்கும் ஒருவர் உலகில் ஏதோ தவறாக உள்ளது என்று தான் நினைக்க முடியும்,” தங்க பிரேம் அணிந்த நாகரிகமான இளைஞன் சொன்னான்.

இந்த உலகில் என்ன தவறு இருக்கிறது?பெற்றோர்கள் மாதாமாதம் பணம் அனுப்புகின்றனர். அதை வைத்துக் கொண்டு இளையவர்கள் படிப்பது, சிகரெட், டீ,காப்பி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்குரா பவுடர், வாஸ்லைன், விலையுயர்வான ஆடைகள், நல்ல சாப்பாடு, மேகவெட்டை போன்றவைகளுக்கு செலவழிக்கின்றனர். அவர்கள் தான் எதிர்கால சந்ததியினர். எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! இந்த உலகத்தில் என்ன தவறு இருக்கிறது?

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2

அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.

பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்

“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.

உறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ?” என்றார்.

டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக

வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்

முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. 

புது தில்லியின் மைனா

ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் “புது தில்லியின் மைனா”

மழுவன் மூளை கண்டாய்

செய்தி: Legendary Rock Climber Alex Honnold Gets Put Into an MRI, and the Results Are Surprising

ஆடல்

பாலசரஸ்வதி, மயிலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற பல மகத்தான நடனக் கலைஞர்கள் நடனத்தின் ஆன்மிக உச்சத்துக்கு அதைக் கொண்டுபோயிருந்தாலும், அது “கௌரவ” ஸ்திதியை அடைந்தது ருக்மணிதேவி, கிருஷ்ணய்யர் போன்றவர்களால்தான் என்றுதான் கூறப்பட்டது.  கௌரவமான பெண்கள் என்று கருதப்பட்ட தாசி குடும்பத்தைச் சேராத பெண்களும் ஆடலாம் என்ற அளவுக்கு அது மெருகேறியதே தவிர, ஆடலின் அமைப்போ, வெளிப்பாடோ சிறிதும் மாறவில்லை. கடவுள் என்ற மூலம் ஆட்டம் காணவில்லை. “நடனம் ஆடினார்”, “தெருவில் வரானோ”, “கிருஷ்ணா நீ பேகனே பாரோ”, “ஸாமி நின்னே”(வர்ணம்) போன்ற பாடல்கள்தாம் இன்றும் உணர்ச்சிகளை வெளியிடப் பயன்படுபவை. காதலை வெளியிடும் பெண் இன்றும் பால் குடித்தால் வாந்தி வருவதாகவும், குயிலின் கூவல் நாராசமாய் ஒலிப்பதாகவும், ஹம்ஸதூளிகா மெத்தை குத்துவதாகவுமே விரகத்தை வெளியிடுகிறாள். அன்று ஆடப்பட்ட தாசி ஆட்டம் அன்றைய சமூக வர்க்கபேதங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக ஆடப்பட்டது. இன்றைய தாசி ஆட்டம் அல்லது பரதநாட்டியம் சிறிது மாறுதலுடன் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினராலேயே ஆடப்பட்டு, அவர்களாலேயே ஆளப்பட்டு, அவர்களாலேயே போற்றப்பட்டும் வருகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உட்படாத ஒரு நபரே இன்றைய ஆடலின் வெளிப்பாட்டுப் பிரதிநிதி. இதனால்தான் இவர்கள் பாதிப்புகள் அற்ற வெறும் ஆட்டக்காரர்களாக (Performers) மட்டும் இருந்து வருகிறார்கள்.

எம். எல். – அத்தியாயம் 9

“எல்லாக் கட்சிக்காரனும்தான் கூட்டம் போடுதான், போராட்டம் நடத்துதான். இதனாலே ஜனங்களுக்கு என்ன நன்மை? அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு?….”

“அப்போ கோபால் பிள்ளை தாத்தா ஜனங்களுடைய பிரச்னைகளைப் பத்திப் பேசினதுக்கு எந்த அர்த்தமும் இல்லியா மாமா?…”

“பேசினா போதுமா? வெறுங்கையாலே மொழம் போட்ட மாதிரிதான். … ஏதோ பதவிக்கு வந்து ஆட்சியப் பிடிச்சாலாவது ஏதாவது செய்யலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்னைக்காவது பதவிக்கு வந்திருக்கா? வெறும் பஞ்சாயத்து, முனிசிபல் வார்டு கவுன்சிலராவதுக்கே கட்சி ததிங்கிணத்தோம் போடுது… மாப்ளே.. நமக்கு எதுக்கு இந்த அரசியல் எளவெல்லாம்… இதனாலே சல்லிக் காசுக்குப் பிரயோசனம் இல்ல மாப்ளே… நீ போயிக் குளிச்சிச் சாப்புட்டுட்டு கடைக்குப் போ… இதெல்லாம் பேசித் தீரக் கூடிய வெசயமில்லே… நான் கீழே போயி அத்தை கிட்டப் பேசிட்டு வாரேன்..” என்று சோமுவின் தோளில் தட்டிச் சொல்லி விட்டு எழுந்தான்.