முப்பரிமாணம்

ஐந்து மணி நேரம் கழித்து பணியாள் ஒருவனுடன் படியேறி அந்த அறையின் முன்பு சென்று நின்றபோது அதன் கதவுகள் என்னை அபரிமிதமான கிளர்ச்சிக்கு உள்ளாக்கின. ஆனால் விசித்திரமான ஓசைகள் கேட்ட அந்தக் குளியலறையை நோக்கி எட்டுவைக்க இயலாமல் உடல் தயங்கிப் பின்வாங்கியது என்னுள் இனம்புரியாத சலனத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. சீருடை மற்றும் கைத்துப்பாக்கி இல்லாமல் நான் வலுவற்ற புழு என்பதும், அவற்றின் துணை இன்றி இவ்விடத்திற்கு வந்தது அத்தனை பாதுகாப்பான செயல் இல்லையோ என்கிற அபத்தமான ஐயமும் தோன்றியது. பூட்டப்பட்டிருக்கும் அறையினுள் எவர் பதுங்கியிருக்கப் போகிறார்கள் என்று தர்க்கம் உரைத்தாலும் என்னால் அதனை மதித்து செயலாற்ற இயலவில்லை.

உன்னதமானதெல்லாம் இலவசம்

தண்ணீர் நாவல் மெட்ராஸின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பற்றிய படைப்புதான் என்றாலும், அவர் அந்நகரத்தின் தண்ணீர் நெருக்கடியைப் பற்றிய நாவலை எழுத முனையவில்லை. அறிவதை விடவும் பார்ப்பதற்குத் தரப்படும் முன்னுரிமை அங்குள்ளது: அப்பெண்ணின் ஊர் தெரியாது, அவளது பெயர் தெரியாது; துல்லியமாக ஒரு அறியப்படாதவள் என்பதால் மட்டுமே அவள் பார்க்கத் தகுந்தவளாகிறாள். திரும்பத் திரும்ப நிகழ்வதை வலியுறுத்துதல் அங்குள்ளது: ஒரு குறிப்பிட்ட கணத்தின் திடீர் மெய்வெளிப்பாடு அல்ல, மாறாக “திரும்பத் திரும்ப” நிகழும் ஒரு பொறுமையான திரட்சிதான் கடந்துபோகும் ஒரு சித்திரத்தை ஓர் கலைவடிவமாக மாற்றுகிறது.

றெக்கை (இறுதிப் பகுதி)

This entry is part 28 of 28 in the series றெக்கை

மழை முழுக்க ஓய்ந்து வானம் வெளி வாங்கியது. நிர்மலா நிமிடத்துக்கு நிமிடம் பெருகிக் கொண்டிருந்த கார்னிவல் கூட்டத்தின் நடுவில் உந்தும் தள்ளுமாக அலைக்கழிக்கப் பட்ட கன்று போல் நகர்ந்தாள். பசித்தது. எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடனே வீடு திரும்ப வேண்டும். வசிக்கும் இடம் எது? அவள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறாளா அல்லது வீட்டிலிருந்து போகிறாளா? லெவி, லெவி எங்கே? அல்பி எங்கே? இறகு முளைத்த இரண்டு குழந்தைகள் எங்கே?

இறை உறையும் இடம்

கிருஷ்ணர் கீதையில் பல இடங்களின் “நான், எனது” என்று குறிப்பிடுகிறார். அவர் “நான்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் தன்னை வசுதேவனின் மகனான கோகுலத்துக் கண்ணனாகவும், சில இடங்களில் காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், சில இடங்களில் உலகிற்குக் காரணமான ஈஸ்வரனாகவும், சில இடங்களில் அந்த பிரம்மமாகவும் தன்னை குறித்துக் கொண்டு சொல்கிறார். எனவே எந்தெந்த இடத்தில் எந்தப் பொருள் பொருந்தி வருகிறதோ அதையே நாம் தேர்ந்தெடுத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயிரத்தொரு கேள்விகள் கேட்ட அபூர்வ சிந்தாமணி

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் வரப் போகிறார்கள் என்று எப்படி முதலிலேயே தெரியும், ஏதாவது ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன்  மூலம் பெயர், ஊர், தொழில், உறவினர் என்று செய்து கொள்ள வேண்டுமா ? அப்படிச் செய்தாலும் யார் எவர் என்று சுவாமிஜிக்கு எப்படித் தெரியும் ? புகைப்படமும் கொடுப்பார்களா ? அத்தனையையும் சுவாமிஜி எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறார் என்பது போல பல கேள்விகள்.

சிட்டி சிறுகதைகள்

பிறகு லட்சுமணன், பார்வதி, உயரதிகாரி சேர்ந்து கோவிலுக்கு செல்லும்போது லட்சுமணன் பூ வாங்கிவரச் செல்லும்போது இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கதையில் அவளது கரிசனம் சொல்லப்படுகிறது.  பிறகு ஊருக்கு கிளம்ப தயாராகையில், மாமியார் அடுப்படியில் வேலை என்று உள்ளே செல்கிறாள்; கணவன் லட்சுமணன் ரயிலுக்கு போக வண்டி அழைத்துவர போக, உங்களோடு பேசவேண்டும் என்று அறையில் நாற்காலி போட்டு உட்காரச் சொல்கிறாள் பார்வதி.  இந்த நெருக்கத்தை எதிர்பார்க்காத உயரதிகாரி அவள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. அதுவும் நண்பன் மனைவி, இனி நான் இங்கு வரமாட்டேன் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறான். 

புராதனத்தின் இழை

சொற்கள்
பிரக்ஞையில்
வந்து சேர்வதற்கு முன்
பொருட்களுக்கிடையே நிலவும்
நுட்பமான ஒப்பந்தத்தை
எவ்வகையிலும்
குலைத்துவிடக் கூடாது
என்ற எச்சரிக்கையோடு
காத்து நிற்கிறேன்.

மாறாத வேர்கள் நகரும் பாதைகள்

இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது அல்லது சிதைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. அவற்றின் பயண இலக்கு மாற்றம் பெற்றுள்ளது. நகரங்களைப் போன்று அபரீத நுகர்வு கலாச்சாரத்தில் கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போன்று, பெருவணிக  நிறுவனங்களின் கழுகுப் பார்வைக்குள் கிராமங்களும் இன்று வீழ்ந்து கிடக்கின்றன.   

அட்லாண்டா — மரங்களின் கைகளில் ஒரு நகரம்

கேப்பேஜ்டவுனின் சந்துகளில் உயிரோவியங்களாக சுவர்களை அலங்கரிக்கும் வாழ்க்கைக் கதைகள். ஈஸ்ட்சைட் டிரெயிலின் வழியே உருவப்படங்கள். க்ரோக் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதையில் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும், மீண்டும் மீண்டும் வரையப்பட்ட, கலகலப்பான அதிகாரப்பூர்வமற்ற ஓவியங்கள்.

சொர்க்கத்தின் பறவைகள் – அப்துல்ரஸாக் குர்னா (தமிழில் லதா அருணாச்சலம்)

வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக‌ சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா

இவ்வரலாற்றில் குறிப்பாக வைரத்தை இயற்கை வடிவத்துக்குத் தகுந்தவாறு வடிவமைத்ததில் இந்திய கலைஞர்களின் பங்கு மிகவும் சிறப்பானது. அவர்கள் கல்லை அதிகமாக வெட்டி எடையை இழக்கச் செய்வதைவிட, வைரத்தை வைரத்தால் அறுக்க செய்த முறைகள், ஒளிர்வுடன் இயற்கை வடிவத்தை மதிப்பதும் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தியது.

கடவுள் தொடங்கிய இடம் – அ. முத்துலிங்கம்

பயணத்திற்கு எப்போதும் தயாராய், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கு மாஸ்ரர் “டைனோசர்களுடன் வாழ்ந்த, நான்கு சிறகுகள் கொண்ட மைக்ரோராப்டர் வலிமையானது. அது இரண்டு சிறகுகள் கொண்ட பறவைகளை வேட்டையாடி உண்ணும். உயிர் வாழ்வதற்கு இரண்டு சிறகுப் பறவைகள் அதி வேகமாகப் பறக்கத் தொடங்க,  மைக்ரோராப்டரால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. பட்டினி கிடந்து அழிந்து போயின. முந்தியது பிந்தியது என்று இல்லை; திறமையும் மதியூகமும் தேவை” எனச்சொல்கிறார்.

சாமியா சாதி பார்த்தது?

திருவிளையாடற்புராண நூல்கள் பல உண்டு. அவற்றுள் ஏ.பி.நாகராஜன் எதை எடுத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை. திருவிளையாடற்புராண நூல்களில் காலத்தே பிற்பட்ட நூலான பரஞ்சோதி யாரின் திருவிளையாடற்புராணத்தில் ஐம்பத்து இரண்டாவது திருவிளையாடலாக ‘ தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்’ பாடப்பட்டுள்ளது. நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடக்கும் உரையாடல் , சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டுவது வரை திரைப்படத்திற்கும் இந்நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

உண்மையுமாய் இன்மையுமாய்…

நிர்வாணத் தேடலின் துவக்க நிலையில் ஒரு உரையாடலின் போது சித்தார்த்தன் கோவிந்தனிடம் சொல்கிறான் //”தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசமிருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன? அகத்தை விட்டுப் பறப்பதுதானே? ‘நான்’ எனும் வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே? துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கிற தன் ஏமாற்றம் தானே?”//

பதினைந்து ஆண்டுகள்

எந்த ‘கார்ப்பரேட் இலக்கியங்களை’ அவன் குப்பை என்று எள்ளி நகையாடினானோ, அதே குப்பைக் கூடையில் தானும் ஓர் அங்கமாகிவிட்டதைப் போல உணர்ந்தான். ரொட்டி நிறுவன அதிகாரியின் நாவலுக்குக் கீழே விழுந்த அதே பாசாங்குத்தனமான ‘லைக்’குகள், நாளை இவன் நாவலுக்கு விழச் சாத்தியமில்லை. சில வருடங்களாக வேலையின்மையிலிருந்து மீள முடியாதவனாக இருக்கிறான். சக-ஊழியர்கள் இல்லாதவனுக்கு ஏது “லைக்”?. தப்பித் தவறி ஓரிரு “லைக்” விழுந்துவிட்டால் – அது இவன் திறமைக்காக இருக்காது!

இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்

This entry is part 9 of 9 in the series கொலம்பஸ்

துறைமுகத்தை விட்டு கப்பல்கள் நகரத் துவங்கியதும், கப்பல்களின் கீழ்த்தளங்களில் பெரும் பரபரப்பும் சத்தமும் உண்டானது. குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட குதிரைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவை கடலின் அலைகளினாலும், இடநெருக்கடியினாலும் பயந்து கூச்சலிடத் துவங்கின. விலங்குகளின் கழிவுகளாலும், காற்றோட்டமில்லாத கீழ்த்தளங்களினாலும் கப்பல்களுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியது. மாலுமிகள் மற்றும் குதிரைப்படை வீரர்கள் விலங்குகள் நிலைதடுமாறி விழுந்து கால்கள் உடைந்துவிடாமல் இருக்க, அவற்றை கயிறுகளால் பிணைத்துத் தூக்கி நிறுத்தும் பணியில் உடனடியாகத் தீவிரமாக இறங்கினர். 

மா பெறும் தேடல்

காட்டுக்குப் போகும் ராமனைப் பார்த்து பசுக்கள் அழுதனவாம். அதன் கன்றுகள் அழுதனவாம். அன்று மலர்ந்த பூக்கள் அழுதனவாம். நீர்நிலையில் இருக்கும் பறவைகள் அழுதனவாம். கள் ஒழுகும் மரங்கள் அழுதனவாம். யானைகள் அழுதனவாம்.  போரில் பயன்படுத்தப்படும் தேர்களின் தேர்க்காலில் கட்டப்படும் குதிரைகள் அழுதனவாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியும் வாடிக்கையாளர் அணுகுமுறையும்

This entry is part 6 of 6 in the series தரவு ஏக்கம்

இணையத்தில் உள்ள தரவுகள் பொது என்ற பட்சத்தில், நெருக்கமான நுகர்வோரின் ஒவ்வொரு மின்னணு அசைவும் தன்னுடைய வியாபார மற்றும் பெரு மொழி மாதிரிக்கு தீனியாக மாற்றி, அதை மேலும் மெருகேற்ற வேண்டும். இதையும் நுகர்வோரை அழுத்திப் பெறக் கூடாது. நுகர்வோரின் பயன்பாட்டு வசீகரத்தில், அவரையும் அறியாமல் இந்தப் பணி நிறைவேற வேண்டும்.

பாட்டுத் தொழிற்சாலை

This entry is part 10 of 10 in the series காப்பிரைட் கதைகள்

வறுமையில் இறந்த அமெரிக்க பாப் இசையின் தந்தை ஃபாஸ்டரின் கதையை நாம் இதற்கு முன் பார்த்தோம். அவரது புகழ்பெற்ற “ஓ சுஸானா” மின்ஸ்ட்ரல் இசை நிகழ்ச்சிக்கு என்று எழுதப்பட்ட பாடல்தான்.  பின்னாட்களில் ஃபாஸ்டர் தனது மின்ஸ்ட்ரல் வகைப் பாடல்களைக் கைவிட்டார் என்றும், ஹாரியட் பீச்சர் ஸ்டோ எழுதிய, “அங்கிள் டாம்ஸ் கேபின்’  நாவலும் அவர் மனமாற்றத்திற்கு ஒரு காரணம் என்றும் , பின்னாளில் கறுப்பின மக்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் வகையில் அவர் எழுதிய பாடலை பிரெட்ரிக் டக்ளஸ் என்ற அடிமை முறைக்கு எதிரான செயற்பாட்டாளர் பாராட்டினார் என்றெல்லாம் குறிப்புகள் சொல்கின்றன. இது இந்த அத்தியாயத்தின் அடிக்குறிப்பல்ல. அமெரிக்கப் பாப் இசை வரலாற்றின் அடிநாதம். டின் பான் ஆலி இசையமைப்பாளர்களைச் சுரண்டியது என்று கருதினால், அது கறுப்பினக் கலைஞர்களைக் கடுமையாகச் சுரண்டியது என்று சொல்லலாம்.

அமெரிக்க எல்லையில் சோதனைக்குள்ளாகும் டிஜிட்டல் வாழ்க்கை

டூனிக் ஒரு சாதாரண பயணி அல்ல. அவர் அட்லாண்டாவின் “Stop Cop City” இயக்கத்துடன் தொடர்புடைய போராளி. அவரது போராட்ட குணம், அரசியல் நடவடிக்கைகளே அதிகாரிகளின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அவருடைய கைபேசியை கைப்பற்றுவதைத் தடுக்க அதன் தகவல்களை அழித்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க அதிகாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது எல்லை பாதுகாப்புத்துறை

சிலிகானிலிருந்து ந்யூரானுக்கு

சிலிகான் சில்லுகளுடன் நரம்பணுக்களை இணைத்து, ஒரு கலப்பின கணினியை உருவாக்கும் நுட்பம்.  மனித மூளையின் உயிருள்ள செல்களையும், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் உயிருருக்களையும் மின்முனைகளுடன் இணைத்தால், தரவுகள், தகவல்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான கணக்கீடுகள் செய்து விளைவைச் சொல்கிறது. கார்டிகல் ஆய்வகம், உண்மையான நரம்பணுக்களை சிலிகான் சில்லுகளில் பயிர் செய்கிறது. பின்னர் தூண்டப்படும் சூழலை அமைத்து, அவைகள் தத்தமக்குள் உரையாட அல்லது வினையாற்ற வழி கிடைக்கிறது.  நரம்பணுக்கள் நரம்புச்சந்திகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன.

துளிமக் கருந்துளைகள்

துளிம ஈர்ப்பியலை கணக்கில் கொண்டால், இந்த ஊகம் பிழையானது. துளிம விலக்கம் – அண்டத்தை பெருவெடிப்பில் எகிற வைத்த அதே விலக்கம் – என ஒன்று இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு என்னவென்றால், விழுந்து கொண்டிருக்கும் பொருள் மையத்தை நெருங்குகையில் துளிம அழுத்தம் காரணமாக வேகம் குறைந்து அதே சமயம் அதீதமான ஆனால் எல்லைக்குட்பட்ட அடர்த்தியுடன் இருக்கும். பொருள் நசுங்கும் ஆனால் எல்லையற்று நசுங்கிக் கொண்டே இருக்காது – ஏனெனில் எவ்வளவு சிறியதாக ஒரு பொருள் இருக்கலாம் என்பதற்கும் எல்லை உண்டு. நொறுங்கும் அண்டம் விரியும் அண்டமாக எகிறி வெளிவருவது போன்று, பொருள் எகிறிக் குதிக்குமாறு ஒரு பெரும் அழுத்தத்தை துளிம ஈர்ப்பியல் பிறகு உண்டாக்கும்.

கூட்டாட்சி தகுதிபெற்ற சுகாதார மையங்கள் (FQHC)

This entry is part 28 of 17 in the series பொது நலம்

1960-களில் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் “வறுமைக்கு எதிரான போர்” (War on Poverty) திட்டத்தின் கீழ் முதன்முதலில் ‘சமூக சுகாதார மையங்கள்’ (Community Health Centers) உருவாக்கப்பட்டன. மருத்துவ வசதி குறைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.