‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி

மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.

சிகப்பு ரோஜாக்கள் – ஒரு வளர்ப்புக் காதல் பயணியின் பயணக் குறிப்புகள்

கொய்மலர் ஏற்றுமதி வணிகத்தில் பன்னாட்டு அன்னையர் தினம், மகளிர் தினம், கிறிஸ்துமஸ் தினம், வருடப் பிறப்புகள், மலர்கள் பயன்படுத்தும் நாடுகளின் சுதந்திர தினங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மலர்களின் உபயோகம் அதிகமிருக்கும் விசேஷ தினங்கள் (உதாரணத்திற்கு ரஷ்யாவில் பள்ளிகளில் கல்வியாண்டு துவங்கும் மாதம் செப்டம்பர்; செப்டம்பரில் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் ஆசிரியர்களுக்கு மலர் கொடுப்பது அங்கு வழக்கம்) எல்லாமே முக்கியமானவை என்றாலும் கொய்மலர் வர்த்தகத்தின் மிக முக்கியமான பருவம் என்றால் பிப்ரவரியில் வரும் காதலர் தினம்தான்.

ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்

ஓஷோவின் உரைகளை, அவரது குரலில், அறையின் மென்வெளிச்சத்தில், கண்களை மூடி நெடுநேரம் கேட்டுக்கொண்டிருப்பது என் வழக்கம்; அந்த அற்புதமான பரவச மணித்துளிகள் என்னில் உண்டாக்கும் நெகிழ்வு, மாற்றம், சலனம், உணர்வு, போதை… வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு முன்னிரவில் படிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டு ஓஷோவின் ஏதோ ஓர் உரையைக் கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் கடப்பதை அறிந்திருக்கவில்லை; ஒன்றிரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். அந்த குரல் மனதை என்னவோ செய்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. உரையின் முடிவில் ஓஷோ “உங்கள் காதருகில் அந்தப் பெருங்கருணை தென்றலாய் மிக மெல்லிய ஒலியோடு கடந்துசெல்கிறது; உங்களுக்குக் கேட்கிறதா?” என்று கேட்டு “இன்றைக்கு இது போதும்” என்று முடித்தார். அவ்விருட்டிலேயே, அதன்பின்னான அமைதியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.

பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் சில தொழில்நுட்பப் பயன்பாடு

கொய்மலர்களின் தலைநகரான ஹாலந்தில், கொய்மலர் வளர்ப்பு கொஞ்சம் சுணக்கம் கண்டிருந்தாலும் (வளர்ப்பு மட்டும்தான்; வணிகமல்ல), கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா நாடுகளில் கொய்மலர் வளர்ப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. ரஷ்யாவின் ரூபிள் சரிவுக்குப் பின் ரஷ்ய ஏற்றுமதி 2014-லிலிருந்து குறைந்தாலும், இந்த ஆண்டு (2017) கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், ரஷ்யாவிற்கு கொய்மலர் ஏற்றுமதி, என்ணிக்கை உயர்ந்த அளவு, வணிக மதிப்பு அதிகம் உயரவில்லை; ரஷ்யாவின் கொய்மலர் இறக்குமதி எப்போது 2013-ற்கு முன்பிருந்த நிலைமைக்கு வரும் என்றுதான் எல்லா கென்ய ஏற்றுமதியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய சரிவிற்குப்பின், ஆஸ்திரேலிய ஏற்றுமதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் புதிது புதிதாய் ஏதேனும் தொழில்நுட்பங்களும் அல்லது பழைய தொழில்நுட்பங்களில் ஏதேனும் புதிய மேம்பாடுகளும் வந்திருக்கின்றன. பரப்பளவுகள் அதிகரிக்கும் பண்ணைகளில், மேம்பட்ட கண்காணிப்பிற்கும், மேலாண்மைக்கும் இத்தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகவும் ஆகிவிடுகின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்…

வாசிப்பனுபவம் – ஆரோக்ய நிகேதனம்

மஞ்சரியை திருமணம் செய்யும் கனவிலிருந்த ஜீவன் உடைந்துபோகிறார். அவர் கவனம் தந்தையிடம் பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் திரும்புகிறது. அவருக்கு மஞ்சரியுடன் மணம் குறித்திருந்த நாளில், ஆத்தர் அவருக்கு மனைவியாகிறாள். ஆத்தருக்கு, மஞ்சரியைப் பற்றியும் ஜீவனின் காதலைப் பற்றியும் தெரியும்; அதனால் ஜீவனிடமிருந்து தனக்கு என்றைக்கும் தூய்மையான அன்பு கிடைக்கப்போவதில்லை என்று அவளாகவே முடிவுசெய்து கொள்கிறாள்.

கென்யா…இனக்குழு அரசியல் சூழலில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல்

ஒருவழியாக ஆகஸ்ட் 11 மாலை IEBC  தேர்தல் முடிவுகளை அறிவித்தது. முடிவுகளை அறிவித்த IEBC-ன் அலுவலர் பயத்துடனேயே முடிவுகளை வாசித்தார்; பதட்டத்துடனேயே இருந்தார்; முடிப்பதற்குள் மூன்று/நான்கு முறை தண்ணீர் குடித்தார். நான், எங்கே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாரோ என்று நினைத்தேன்.

இருப்பு

”ந்யாம ச்சோமா தயாரி” ஆங்கில எழுத்துக்கள் “8 புளூஸ் ஹோட்டல்”-ன் தலையில் பச்சை, சிவப்பு நியானில் மாறி மாறி மின்னின. ந்யாம ச்சோமா என்பது சுட்ட இறைச்சி. வெறும் உப்பு மட்டும் தூவி தீயில் சுட்டு பரிமாறுவார்கள். மிகப் பிரசித்தம். பெரும்பாலும் வெள்ளாட்டிறைச்சி. மாடும், பன்றியும் உண்டு. பசு இறைச்சிக்கென்று ரசிகர் கூட்டமுண்டு. கோயம்புத்தூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரி மாதிரி இங்கு கென்யாவில் புட்ச்சரிகளும் ந்யாமா ச்சோமா கடைகளும். ரவி காரை நிறுத்தி கதவு திறந்து இறங்கியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ரோஸூம், எசெகியேலும் ஜான், ஜோயலோடு ஏற்கனவே அங்கு வந்து வாசலில் காத்திருந்தார்கள். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “தயாரி” எழுத்துக்களை பார்த்தவாறு…

தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்

This entry is part 19 of 72 in the series நூறு நூல்கள்

இருபத்தியோரு வயதில் படித்ததற்கும், இப்போது நாற்பத்து நாலு வயதில் படித்ததற்கும் நிறைய வித்தியாசாங்கள். எதிர்பால் ஈர்ப்பு தணிந்து, காமம் கனிந்தபின் நாவலில் பிடித்த இடங்கள் கூட மாறிவிட்டன. இப்போது படிக்கும்போது முதல் வாசிப்பின் பரபரப்போ, கிளர்ச்சியோ, இளமைக்கே உரிய இனக்கவர்ச்சியோ அதீதமாய் இல்லாமல் நிதானமாய் படிக்க முடிந்தது. தி.ஜா-வின் வரிகளையும் உரையாடல்களையும் நன்கு கவனித்தேன். இந்த முறை பிடித்த விஷயங்களே வேறாக இருந்தன. முதல்முறை படித்தபோது பரவசமடைந்த இடங்கள் சாதாரணமாய் கடந்துபோயின

தூரம்

டீ குடித்து வெளியில் வருவதற்கும், அலெக்ஸாண்டர் ஜீப்போடு மருத்துவமனை வாயிலில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது. பிணவறை வாசல் படிக்கருகில், ரிவர்ஸில் வந்து ஜீப்பை நிறுத்தினார் அலெக்ஸாண்டர். கிருஷ்ணப்பா போய் மருத்துவமனை சிப்பந்தியை கூட்டி வந்தார். உள்ளே போய் கதவு திறந்து, தலை முதல் கால் வரை முகம் தெரியாமல் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட மோகனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுவந்தார்கள். “லட்சுமீஈஈஈ…என் கண்ணூ…” வெங்கடலட்சுமி வீறிட்டு நெஞ்சிலடித்து கதறியது அந்த நள்ளிரவின் இருட்டை கிழித்தது.

குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்

மல்லிகாவும், இயலும் இறங்கிப்போய் டீ வாங்கி வந்தார்கள். பகலாயிருந்தால் கடலை மாவு போண்டா பெரிய உருண்டையாய் கிடைக்கும். ராஜலிங்கத்தின் வீடு தாராபுரத்தில்தான் இருந்தது. ஒருமுறை காலேஜ் டூர் போனபோது தாராபுரம் கடக்கும்போது ராஜலிங்கம் வீட்டிற்குப் போனது ஞாபகம் வந்தது. பத்து நிமிடத்தில் பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்த மாதிரி இருந்தது. சத்தம் கேட்டு பாதி கண் திறந்து பார்த்த போது, பஸ் ஆரப்பாளயம் ஸ்டேண்டில் நுழைந்துகொண்டிருந்தது.

கென்யா – குறுங்குறிப்புகள் – 2

பகலில் எங்கு சென்றாலும், மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவது அல்லது தாமதமானால் நண்பர்கள் வீட்டில் தங்கிவிடுவது வழக்கம்.எப்போதும் பயணிக்கும்போதோ அல்லது வீட்டிலோ கொஞ்சம் பணம் வைத்திருப்பது நல்லது; திருடர்களோ, வழிப்பறியோ – நாமாக பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது (உயிருக்கு உத்தரவாதம்!); பணமில்லையென்றால் கோபமாகி விடுவார்கள் (பெரும்பாலும் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்).

கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.

கென்யா – குறுங்குறிப்புகள்

ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்). … பழமைவாதம்தான் – ஒரு சில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.

பசுங்குடில் பயன்பாடும், கொய்மலர் வளர்ப்பும், வர்த்தகமும் – ஓர் அறிமுகம்

எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் – 1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை) 2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).