துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
Category: புத்தகவிமர்சனம்
இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்
ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.
ஏழு ஸ்வரங்களுக்குள்..
திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
ஜார் ஒழிக – சாம்ராஜின் சிறுகதைத் தொகுப்பு
மார்க்சிய இலட்சியத் தோழர்கள், சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் புதிய வரிகளுக்கு எதிராக ‘தொழிலாளர் புரட்சி’ செய்யக் களத்துக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் புரட்சி பரிதாபமாக நாய்க்கடியில் பிசுபிசுத்துப் போகிறது. கடைசியில், களத்தெருவில் காய் விற்பனை செய்யும் கிழவிகளும், கை வண்டியில் உணவு விற்றுக்கொண்டு இருந்த பாயும் துரத்தப்படுகிறார்கள்.
போதி மரத்தடியில்
இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது.
சலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி
கோணங்கியின் உரைநடை தனித்துவமானது. கனவு, கானல் நீர், ரசாயன மயக்கம், கட்புலனுக்கிடையே எச்சரிக்கையின்றி சுமூகமாகத் தாவும் வரிகள். புனைவு எழுதுபவர்கள் பொதுவாக காட்சிச் சிந்தனையாளர்களாக இருப்பது அரிது. ஆனால் அந்த அரிய பகுப்பைச் சேர்ந்தவர் கோணங்கி. வண்ணதாசன் படைக்கும் பாத்திரங்களைக் காட்டிலும் கோணங்கியின் பாத்திரங்கள் நிலையற்று காணப்படுகின்றன.
கண்ணனேந்தல் பறவைகளின் ஒளிப்பாய்ச்சி
தான் ஒரு இயற்கைக் காதலன் என்பதனை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன சிவக்குமார் கணேசனின் கவிதைகள். அதிலும் குறிப்பாக “மாங்குயில்களின் கருங்கொண்டை” என்ற வார்த்தையை கவிதைகளில் நிறைய இடங்களில் புழங்குகிறார். கொன்றை மலர் அரும்பிய மரத்தைப் போன்றிருக்கும் மயிலின் கொண்டைகளை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். ஆசிரியரையும் அகவியலைக்கின்றன மாங்குயிலின் கருங்கொண்டைகள் என்பதனை உணர்த்துகிறது.
பாரதியின் காளி
காசியில் இருந்த சமயம் பாரதிக்கு சுதேசி இயக்கம் அறிமுகமாகிறது. பொருளாதாரத்தின் சிக்கலான சமன்பாடுகளைக் கொண்டு தேசம் என்பதையும், அதனால் அது எதிர்கொள்ளும் அபாயம் என்பதையும் தாதாபாய் நௌரோஜி மிகச் சாதுர்யமாக விளக்குகிறார். அதை பாரதி கவனிக்கிறார். அதுவரை பண்பாட்டுப் பரப்பாக மன்னர்களும் மக்களும் கருதிக் கொண்டிருந்த காலத்தில், ஜாதிமைய அடையாளம், அதிகாரம் போன்றவற்றையே அறிந்திருந்தவர்கள் மத்தியில் பொருளாதாரப் பார்வையை நௌரோஜி முன்வைத்து அபாயத்தை எச்சரிக்கிறார்.
உரூப்-ன் ‘உம்மாச்சு’
மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.
அகவாழி
ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது.
காற்றையும் நீரையும் போல் நித்தியம்
நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது. காந்தியர்களை, காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னாள் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான்.
விட்டல் ராவ் ஓர் கலைச்சுரங்கம்
பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது
”குற்றத்தின் நறுமணம்” கவிதைகள் – விமர்சனம்
தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன “குற்றத்தின் நறுமணம்”என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம்.
பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை
நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது
பேய்ச்சி – பேரன்பும் பெருவெறியும்
தன் குலத்தொழிலான வெட்டியான் வேலையை வெறுத்து அங்கிருந்து ஓடி வந்து, தன் குருவைக் கண்டடைந்து சிலம்பம் கற்றுக்கொள்கிறார். அங்கிருந்து தோட்ட முதலாளியிடம் சேர்ந்து, எவ்வாறோ அவரும் ஓலம்மாவின் அதே தோட்டத்திற்கு வந்து சேர்ந்து, அவளை மணந்துகொண்டு வாழத்துவங்கிறார். மணியத்தின் வீரம், குருவின் சொல்லுக்காக மதுவைத் தொடாதிருப்பது, பெரியார் மீதுள்ள பற்று, தோட்டத்து மக்களின் நலனுக்காக நீதி கேட்டுப் போராடுவது என அவரது வெளித்தோற்றம் இளைஞர்களின் தலைவனாக அவரை ஆக்குகிறது.
இசைவைத் தேடும் வாழ்க்கை
மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.
வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்
துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு சுல்தான் புரி, பிறகு மச்சிலி
கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்
சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்
வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து
குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.
தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்
மேற்கத்திய அறிஞர்கள் அல்லது இந்தியாவில் உள்ள மக்கள் கூட நாட்டில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புகார் செய்யும்போது, வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுச் சாடுகிறார்கள். ஆனால் கொஞ்சம் ரூம் போட்டு யோசித்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் மிகச் சிறிய சிறுபான்மையினர் (அதாவது நில உடமைகளை வைத்திருந்த ஆண் வெள்ளையர்கள்) மட்டுமே வாக்களிக்கும் வழக்கைக் கொண்டிருந்த ஜனநாயக நாடுகளாக உருவாகின என்பது தெரிய வரும்.
ஜாதிக்காயின் சாபம்
நறுமணம் மற்றும் மருத்துவகுணங்கள் அடங்கிய சாதிக்காயும் அதன் மேற்புறமான தோல் (அல்லது ஓடு) பல்லாண்டுகளாக பயன்பாட்டில் இருப்பினும், பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதன் மதிப்பு பன்மடங்கு உயரத்தொடங்கிற்று;ஒரு கையளவு உள்ள சாதிக்காயை கொண்டு வெனிஸ் நகரில் ஒரு கப்பலோ அல்லது பெரிய மாளிகையையோ வாங்கலாம். மேலும் ஐரோப்பிய செல்வந்தர்கள் மற்றும் அரசர்களிடையே ஆடம்பர பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிற்கு முன் ஐரோப்பாவின் பல இடங்களில் மிக முக்கிய சந்தைப்பொருளாக பல வணிகர்களால் எகிப்து வழியே வெனிஸ் வந்து சேர்ந்தது
துகள் வாழ்வுக்குள் மாய உச்சி
மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்
அவர் தனக்கு தெரியாத எதையும் எழுதுவதில்லை. இது எழுத்தாளனின் முக்கிய அம்சம். இவர் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர். ஆனால் கூகிள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை மட்டுமே முழுதாக நம்பி இறங்காதவர். களத்தரவுகளை நம்புபவர். இதுவே படைப்பின் ஆன்மா ஆகையால், அவர் காருக்குறிச்சியைத் தேடி நேரில் சென்று அனுபவத்தை பெற்று நமக்கு கடத்தியிருக்கிறார்.
பண்பாட்டுத் தரிசனம்
“அரவு ஆட்டவல்லான்” என்ற கட்டுரையின் தொடக்கத்தில், அட்டபுயங்கப்பிரான் என அழைக்கப்படும் சிவனின் புராணக் கதையை விளக்குகிறது. அனந்தன், கார்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகிய எட்டு நாகங்களைக் கொண்டு ஆடும் சிவனின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த ஆடும் சிவனின் குறிப்பு தமிழ்க் கவிதை மரபில் வளர்ந்த பக்தி இலக்கியமான காஞ்சிப் பதியில் குறிப்பிடப்படுகிறது.
புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்
கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது. ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார்.
இசைக்கும் புத்தகம்
காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்
பத்து வைரங்கள் – புத்தக விமர்சனம்
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை. மனிதர்கள், அவர்கள் வாழும் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும் அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் உள்ளது
நீலதாவணி – நிறம் மாறாத அசல்களின் சித்திரம்
தென் தமிழகத்தில் தனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள் என்பதை உணர்த்த பெண்கள் கொண்டை போடும் வழக்கம் இருப்பதாக யாரோ கூறக் கேட்டிருக்கிறேன். இது பெண் திருமணமானவள் என்பதை காட்ட நெற்றி உச்சியில் குங்குமத்தை சூட்டி வைப்பதை போல, மெட்டி அணிவிப்பதைப் போல, கணவன் இறந்த பின்னர் கைமை நோன்பெடுக்க சொல்லி கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு சற்றும் குறைந்து போகவியலாத புற அடையாளம். அப்படியாக அடையாளப்படுத்தும் விஷயத்தை நீலதாவணி என்ற கதையில் நுட்பமாக கையாள்கிறார் ரம்யா. கதையின் இடையிடையே ஊடாடும் ஒரு சில வரிகளில் அப்படி அடையாளப்படுத்துவதன் நோக்கத்தை பகிரங்கமாக வாசகப்பார்வைக்கு வைக்கிறார்.
பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார்.
ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்?
சத்யசரண் தான் இருக்கும் காலத்தில் வனத்தின் மீது மையல் கொள்கின்றான். அது தீராக்காதல் இல்லை. வேலை முடிந்து திரும்புகையில் தீரும் காதல்.அதற்குப் பிறகு அசைப்போடும் நினைவாக வாழ்வெங்கும் தங்கும் இடத்தில் அதனை வைத்துக் கொள்கின்றான். மையல் கொண்ட பெண்ணை வர்ணிக்கும் காதலன் போலக் காட்டினை வர்ணிக்கின்றான். அங்குலம் அங்குலமாக ரசிக்கின்றான். அதில் முழுக் கவனம் வைக்கின்றான்.
சஹிதா: அணையா நெருப்பு
சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
விஷக் கிணறு
நம்மூரில் ஒரு மனநிலை உள்ளது. ஊர் வளரத் திட்டம் இல்லாது, தன் வீட்டை மட்டும் ஊரில் பெரிதாகக் கட்டிக் கொண்டு அங்கே காலா காலத்துக்கும் சொகுசாகச் செல்வாக்காக வாழமுடியும் என்னும் மனநிலை. ஊர் செழிப்பில்லை , ஊரில் பிழைப்பில்லை என்றால் வீட்டைப் பராமரிக்கக் கூட முடியாது போகும் என்ற எண்ணமே இல்லாது வாழ்பவர்கள். அது ஒரு சிதல். கதையில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று ஜெயசந்திரன் செயலற்றுப் போன ஊரில் செயல் உருவாக்கம் செய்ய வீட்டை வாங்கத் தயாராகின்றான்.
சங்கீத சாகித்தியமும் சாந்தானிக பிச்சையும்
ஒரு முழு வாழ்க்கையை விவரிக்கும் கணிசமான அளவு நீண்ட நாவல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நாவல் முழுக்க விரவி இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாதவர்களும் படித்து ரசிக்கும் வண்ணம் மனித உணர்வுகள் கலைஞர்களின் இயல்புகள் அவர்களது எளிதில் ஊகிக்க முடியாத,மனப்போக்குக்கள்,புரிந்துகொள்ள முடியாத விசித்திர நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன
பொற்குகை ரகசியம்- சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பு அனுபவம்
கதாசிரியரின் பல வரிகள் ரசிக்கும் படி உள்ளது. “ கொமாரப்பாளையத்தில் சங்கமேஸ்வரன் என்னும் பெயர் உள்ளவர்களை தேடுவது, மாலத்தீவில் டூனா மீனை தேடுவது போலத்தான்”. “எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக் கூடிய கண்ணாடி பாத்திரத்தை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா”. “அந்த எழுத்துக்களை கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறகுகளை விரித்து மேலெழுந்துக் கொண்டிருந்தது”. “நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய் பரவிய தாடியும், மீசையும் வைத்திருந்தார்”
இந்தியாவின் சுருக்கமான வரலாறு – ஜான் ஜூபர்ஸிக்கி (தமிழில் அரவிந்தன்)
5000 ஆண்டுகளிலிருந்து இன்றுவரை நடந்தவை ஒரே நூலில் அமைந்த பூசரடுகள் போல நீண்டு வருகின்றன. இடுபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி மொகசந்தாரோ, ஹராப்பா நாகரிகத்திலிருந்து இன்று நடக்கும் அரசியல் மாற்றங்கள் வரை சமகாலதன்மையை உணர்ந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கொடை மடம்
ஒவ்வொரு நிகழ்வுகளைச் சொல்லும் பொருட்டு அதில் தொடர்புள்ள மனிதர்களை மட்டும் காட்டாமல் அந்த இடத்தை அதோடு இயைந்த இயற்கைக் காட்சிகளை பருந்துப் பார்வை கொண்டு வாசிப்பின் போது உறுத்தா வண்ணம் உள்ளது உள்ளபடியாய் கண்முன் நிறுத்துவது தனித்துவமான ஒன்று. கதையில் நாம் ஆழ்ந்திருந்தாலும் இந்தத் தருணங்களையும் தவற விடாது ரசிக்க வைக்கிறது.
ஈவா ஹாஃப்மன் எழுதிய ‘இலுமினேஷன்ஸ்: அ நாவல்’- ஓர் உளவியல் பார்வை
இசபெல் இந்த மாய உலகில் பயணித்துச் செல்லும்போது, அவர் தனது குடும்ப வரலாற்றின் மறைக்கப்பட்ட அடுக்குகளை அவிழ்த்து, நீண்ட காலமாக தன் நினைவுகளில் புதைக்கப்பட்ட ரகசியங்களின் படிமங்களைத் தன்னையும் அறியாமலேயே வெளிப்படுத்துகிறாள். ஒவ்வொரு வெளிப்பாட்டிலும், நிலையான புறஉலகத்திற்கும், அலைக்கழியும் அக உலகின் மாயத்திற்கும் இடையிலான கோடுகள் மெலிந்து, இசபெல்லை தனது கடந்த காலத்தின் மாய பூதங்களையும் அவளது ஆன்மாவின் சிக்கலான பின்னல்களையும் எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.
தோல்பாவைக்கூத்து
சில நூற்றாண்டுகளாகச் செய்யப்படும் நிகழ்த்துக்கலை என்பதால், மூல ராமாயணத்திலிருந்து பிரிந்து பிற ராமாயணக் கதைகள் கூட இதில் சேர்ந்து வந்திருக்கிறது. நாட்டாரிய கதைகளிலின் வழியாக இவை உருவானவை என்றாலும், கூத்துக்கலைஞர்கள் பல ஊர்களில் நிகழ்த்தும்போது கேள்விப்பட்ட பிற சரடுகளையும் பொதுப் பிரதியில் சேர்த்துவிடுகிறார்கள் என எண்ண இடமிருக்கிறது.
உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?
காந்திய போராட்டத்தின் முக்கியமான நேர்மறை விளைவு இந்தியச்சுதந்திரம். அதே சமயம் அப்போராட்டம் காந்தியின் உயிருக்கு உயிரான கொள்கையான இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பதில் தோல்வியை அடைந்து,பாகிஸ்தான் பிரிவினையில் முடிகிறது.
ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா?
25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும் வாசிக்கவேயில்லை.
“பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும்
இந்த புத்தகம் பேசும் 1600-1830 காலகட்டத்தில் இந்தியர்களுக்கு பெரும் செல்வம் திரட்டி தரும் வல்லமையுடன் இருந்த உற்பத்தி தொழில் திறமைக்கு அன்றைய அறிவு , வீரம், வணிகம் மூன்றும் என்ன செய்தன என நமக்குக் கேள்வி வரலாம். உற்பத்தி தொழில் என்னும் சக்தியின் மதிப்பினை பற்றிய அறியாமை இருந்ததாகவே தெரிகின்றது. அறியாமையால் உள்ளூர் வீரமும், அறிவும், வணிகமும் தன்னை தாங்கும் கால்கள் தொழில்கள் என உணராமல் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுபவன் ஆகச் செயல்பட்டன
மாறாத புன்னகையும் மனவிரிவும்
ஏற்கனவே தமிழ்க்கதை உலகில் நாம் கண்ட எந்தப் பாத்திரத்தின் சாயலும் இல்லாமல் புத்தம்புதிதான பாத்திரங்களை தம் கதைகளில் முன்வைத்திருக்கிறார் அஜிதன். ஜஸ்டின் அத்தகைய பாத்திரங்களில் ஒருவன். அவன் வேலை என்பது கிட்டத்தட்ட கூலிப்படை வேலை. அவன் மாமா ஏவி விடுவார். இவன் சென்று முடித்துவிட்டு வருவான். சரியான அடிதடி ஆள். ஆனால் தனக்கென ஒரு விசித்திரமான நியாயத்தை வைத்துக்கொண்டிருப்பவன். ஒருநாள் மாமா ஒரு குறிப்பிட்ட ஆளை வெட்டிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார்
அயல் சுவை
உள்ளபடியே இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கும்போதும்,அந்த விவரணையால், அவர்கள் வேறு என்ற உணர்வு வலுக்கிறது. பழகிப்போன பண்பாட்டில் வாழ்க்கை முறை விவரிக்கப்படுவதில்லை. பொதுப் புரிதல்கள் இல்லாத இடத்தில் வாழ்க்கை விவரணைகள் தேவைப்படுகின்றன. அவை நம்மைப் போன்றவர்கள் இவர்கள் என்ற உணர்வை அளிக்கும் போதே இவர்கள் வேறு என்ற உணர்வையும் அளிக்கிறது.
மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்
இப்படி மேற்கிலக்கிய அழகியலில் ஒரு கால், தமிழ்/இந்திய இலக்கிய அழகியலில் மறு கால் எனக் கட்டுரைகளில் நம்பியுடன் நாம் பயணிக்க ஏதுவாக அவரது கட்டுரையின் அடி நாதம் அமைந்திருக்கிறது. Cape Cod Noir புத்தகத்தைப் பற்றிய கட்டுரை (பயணக்கட்டுரை போலவும், தன்மையக்கட்டுரை போலவும் இருப்பதால் இந்த நூலிலேயே செபால்டியத் தனமான கட்டுரை இதுதான்) முடிக்கும் போது feeling good was good enough என்பது சித்தரைப் போல இழப்பதற்கு எதுவுமில்லாத மோன நிலை என்பதிலும் இந்த மேலை கீழை தொட்டு மீட்டல் நடக்கிறது
கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்
தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி), தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான் சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான்
கல்லை மலராக்கும் கவிதைகள்
இதற்கு இணையாக வேறு வகையான சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும் வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச் சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன
கதைகளை ரசிப்பது எப்படி?
புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும் தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது.
முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்
எழுத்தாளர் காலத்துகள் தனது அண்மைய சிறுகதை தொகுப்புகள் இரண்டை அனுப்பி வைத்திருக்கிறார், அவற்றில் ஒன்றன் பெயர், _முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்._ “சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்தாக வேண்டும்,” என்று ஆல்பர் காம்யூ எழுதியதாக நினைக்கிறேன் (அவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை – பிரஞ்சு மொழியில் “முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்”
மார்ஷ்லேண்ட் புத்தக விமர்சனம்
அவர் நினைவுகள் மெல்ல அவரின் கடந்தகால குற்ற சரித்திரத்தை வெளிக்கொணர்கிறது. 1968 மற்றும் 1969 ல் டோக்கியோ மற்றும் ஜப்பானின் இதர பகுதிகளில் நடந்த மாணவ கலவரம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியாக அமைகிறது.ஒரு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு அட்சுவோ, வாக்காகோ, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் தீவிர மாணவப் பிரிவினை சேர்ந்த மாணவர்கள் குழுவான ‘கியூ- செக்ட்ஐ’ சேர்ந்தவர்கள் கைதாகும் பொழுது கதையின் போக்கு தீவிரமடைகிறது.
